என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    இந்த ஸ்கூட்டரின் விலை இந்தியாவில் ரூ.1,15,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கோமாக்கி நிறுவனம் கோமாக்கி DT 3000 அதிவேக மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

    இந்த ஸ்கூட்டர் 220 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளத்து.

    இந்த ஸ்கூட்டரில் 3000W BLDC மோட்டார், பேட்டன் செய்யப்பட்ட அட்வான்ஸ்டு 62V52AH லித்தியம் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இதில் முழுதாக டிஜிட்டல் செய்யப்பட்ட இன்ஸ்ட்ருமென்டல் பேனல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் 3 நிறத்தேர்வுகளில் வெளியாகவுள்ளது.

    கோமாக்கி DT 3000 மின்சார ஸ்கூட்டர் பிற மின்சார ஸ்கூட்டர்களை விட அதிவேகத்தில் செல்லக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை இந்தியாவில் ரூ.1,15,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளார்.
    இந்தியா மலிவு விலை மின்சார வாகன உற்பத்தியின் மையமாக விரைவில் மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்தியில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்குகிறது.

    உலகம் முழுவதும் பல பகுதிகளில் மலிவு விலை மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. அந்த தேவையை இந்தியாவில் இருந்து நாங்கள் பூர்த்தி செய்வோம். 2030-ம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் என பலரும் கூறுகின்றனர். இன்னும் 2 ஆண்டுகளில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிக்கப்போகிறது.

    மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை மின்சார கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உதிரி பாகங்களை உள்ளடக்கிய தொகுப்புகளும் அடிப்படை கிட், அர்பன் கிட், எக்ஸ்பிளோரர் கிட் என்ற பெயரில் விற்கப்படுகிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கை அறிமுகம் செய்தது.

    இந்நிலையில் தற்போது அந்த பைக்கின் ஆப்ஷனல் உதிரி பாகங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    ராயல் என்ஃபீல்டு இணையதளத்தில் வங்கப்பட்டுள்ள ‘மேக் இட் யுவர்ஸ்’ ஆன்லைன் வசதி மூலம் நமக்கு பிடித்த உதிரி பாகங்களை பைக்கில் பொருத்திபார்த்து தேர்ந்தெடுக்கலாம். அதன்விலையும் ஆன்லைனிலேயே காட்டப்படும்.

    மேலும் வாடிக்கையாளர்கள் புதிய ஸ்கிராம் பைக்கிற்கு தரப்பட்டுள்ள 7 வகை நிறங்களையும் ஆன்லைனிலேயே காண முடியும்.

    ஸ்கிராமிற்கு வழங்கப்பட்டுள்ள ஆப்ஷனல் உதிரி பாகங்களின் பட்டியல்:-

    ஹேண்டில் பார் - ரூ.3550
    பிரேஸ் பேட் - ரூ.600
    பிளாக் ஸ்போர்ட்ஸ் சீட் - ரூ.750
    மாஸ்டர் சிலிண்டர் கார்ட் - ரூ.700
    ஆயில் கூலர் கார்ட் - ரூ.1,250
    ஹேண்ட் கார்ட் - ரூ.2550
    பைக் கவர்- ரூ.1100
    காம்பெக்ட் இன்ஜின் கார்ட் - ரூ.1450
    லார்ஜ் இன்ஜின் கார்ட் - ரூ.1650

    இத்துடன் இந்த உதிரி பாகங்களை உள்ளடக்கிய தொகுப்புகளும் அடிப்படை கிட், அர்பன் கிட், எக்ஸ்பிளோரர் கிட் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இவற்றையும் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஸ்கூட்டருக்கு டிரைவிங் லைசன்ஸோ, ரிஜிஸ்ட்ரேஷனோ தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கிரயான் மோட்டார்ஸ் கிரயான் என்வி என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  

    இந்த ஸ்கூட்டர் சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரின் மோட்டார் மற்றும் கண்ட்ரோலருக்கு 24 மாதம் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரின் இயங்கும் செலவு கிலோமீட்டருக்கு 14 பைசா ஆகும். இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீல்ட் 25 கி.மீ-ஆக உள்ளது. மேலும் டிரைவிங் லைசன்ஸோ, ரிஜிஸ்ட்ரேஷனோ தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் 250 W BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ வரை செல்ல முடியும்.

    இந்த ஸ்கூட்டரில் ஜியோ டேகிங், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், சென்டர்ல் லாக்கிங், மொபைல் சார்ஜிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் ரிவர்ஸ் அசிஸ்டெண்ட் ஆப்ஷன் உள்ளது. இதன்மூலம் ஸ்கூட்டரை முன்பக்கம், பின்பக்கம் சரியாக நகர்த்தி நெருக்கமான இடங்களில் கூட பார்க் செய்ய இயலும். டூயல் ஹெட்லைட்ஸ், டியூப்லெஸ் டையர்ஸ், டிஸ்க் பிரேக், 150mm கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவையும் இதில் வழங்கப்படவுள்ளன.

    இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.64,000-ல் இருந்து தொடங்குகிறது.
    இந்த காரின் இன்ஜின் 89 hp பவர், 113 Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது.
    மாருதி சுஸூகியின் 2022 பலேனோ அறிமுகம் செய்யப்பட்ட ஒருமாதத்தில் 50,000 யூனிட்டுகள் முன்பதிவை பெற்றுள்ளதுல். இந்த பைக்கின் விலை ரூ.6.35 லட்சத்தில் தொடங்கி, ரூ.9.49 லட்சம் வரை உள்ளது.

    மாருதி பலேனோ இந்தியாவில் அதிகம் விற்கப்படும்  5 கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காருக்கான சந்தா விலை ரூ.13,999-ல் இருந்து தொடங்குகிறது.

    2022 மாருதி சுஸூகி பலேனோ ஹாட்ச்பேக் புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது. இதில் மாருதி சியாஜ் போன்ற எல்.இ.டி ஹெட்லேம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் இதில் 10 ஸ்போக் அல்லோய் வீல்கள், ஹெச்.டி டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ+,  1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    இந்த காரின் இன்ஜின் 89 hp பவர், 113 Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது.
    எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அனைத்தும் சிறந்த, அதிவேகம் கொண்ட, அதிக ஆற்றலை வழங்கக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஓலா நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த பேட்டரி டெக்னாலஜி நிறுவனமான ஸ்டோர்டாட்டுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

    ஸ்டோர்டாட் நிறுவனம் அதிவேகத்தில் சார்ஜ் ஏறும் தொழில்நுட்பத்தை (XFC) அடிப்படையாக கொண்ட பேட்டரிகளை தயாரிப்பதில் பெயர்பெற்றது. தற்போது இந்த நிறுவனம் எக்ஸ்.எஃப்.சி பேட்டரியை ஓலாவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஓலா மின்சார ஸ்கூட்டர்களை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதத்திற்கு வெறும் 5 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் இரண்டு வருடங்களில் இந்த பேட்டரிக்களை கொண்ட ஓலா பைக்குகள் அதிக அளவில் தயாரிக்கப்படும். அதேசமயம் வெறும் 2 நிமிடங்களில் முழுதாக சார்ஜ் ஏறும் தொழில்நுட்பத்தையும் ஸ்டோர் டாட் பரிசோதித்து வருகிறது. 

    அடுத்த 10 வருடங்களுக்குள் இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் பரிட்சயம் செய்யப்படும். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அனைத்தும் சிறந்த, அதிவேகம் கொண்ட, அதிக ஆற்றலை வழங்கக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் மொத்தம் 5,39,547 பைக்குகள் கடந்த மாதம் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த பைக் கடந்த மாதம் 1,93,731 யூனிட்டுகள் விற்றுள்ளன.

    இரண்டாவது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் 81,700 யூனிட்டுகளும், 3-வது இடத்தில் ஹீரோவின் ஹெச்.எஃப் டீலக்ஸ் 75,927 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

    4-வது இடத்தில் பஜாஜ் பல்சர் 54,951 யூனிட்டுகளும், 5-வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 30,082 யூனிட்டுகளும், 6-வது இடத்தில் பஜாஜ் பிளாட்டினா 29,124 யூனிட்டுகளும், 7-வது இடத்தில் ஹீரோ கிளாமர் 27,406 யூனிட்டுகளும், 8-வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி 16,406 யூனிட்டுகளும், 9-வது இடத்தில் ஹோண்டா ட்ரீம் 15,476 யூனிட்டுகளும், 10-வது இடத்தில் டிவிஎஸ் ரைடர் 14,744 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

    இந்தியாவில் மொத்தம் 5,39,547 பைக்குகள் கடந்த மாதம் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    பயணிகள் வீடியோக்களை பார்க்கும்போது ஓட்டுநர் தொந்தரவு அடைந்து கவனம் சிதறாமல் இருக்க இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    மெர்செடிஸ் - பென்ஸ் நிறுவனம் புதிய EQS மின்சார எஸ்.யூ.வி ரக கார் ஒன்றை ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகள் ஓட்டுநரை தொந்தரவு செய்யாமல் வீடியோக்களை பார்க்கும் புதிய அம்சம் ஒன்றையும் அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளது.

    இந்த காரில் 56 இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் அதிஅற்புதமான டிஜிட்டல் அனுபவத்தை பெற முடியும்.  மேலும் 12.3 இன்ச் OLED டிஸ்பிளேவில் முன்பக்கத்தில் அமர்ந்துள்ள பயணி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். 

    பயணிகள் ஹெட்போன்களை அணிந்து கொண்டு ஓட்டுநருக்கு தொந்தரவு இல்லாமல் வாகனத்தை ஓட்டலாம். அதேசமயம் மற்றொரு புதிய தொழில்நுட்பம் ஒன்றும் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர் பயணிகளுடைய திரையில் உள்ள வீடியோக்களை பார்க்க நினைத்தால் தானாக திரை மங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் ஓட்டுநரின் கண்கள் செல்லும் திசையை கண்காணிக்கும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.

    பயணிகள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
    இந்த கார்களில் XM மற்றும் XZ+ வேரியண்டுகளை மகாராஷ்டிரா அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் பெறலாம்.
    இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மின்சார காரான டாடாவின் நெக்ஸான் எலக்ட்ரிக்  எஸ்.யூ.வி கார்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் தற்போது XM, XZ+, XZ+ Lux, XZ+ Dark மற்றும் XZ+ Lux Dark என்ற 5 வேரியண்டுகளில் வருகிறது. இந்த 5 மாடல்களின் விலைகளும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. 

    நெக்ஸானின் XM வேரியண்டின் விலை ரூ.14.29 லட்சத்தில் இருந்து ரூ.14.54 லட்சமாக உள்ளது. XZ+ வேரியண்டின் விலை ரூ.15.70 லட்சத்தில் இருந்து ரூ.15.95 லட்சமாக உள்ளது. XZ+ Lux வேரியண்டின் விலை ரூ.16.70 லட்சத்தில் இருந்து 16.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. XZ+ Dark வேரியண்டின் விலை ரூ.16.04 லட்சத்தில் இருந்து ரூ.16.29 லட்சமாகவும், XZ+ Lux Dark வேரியண்டின் விலை ரூ.16.90 லட்சத்தில் இருந்து ரூ.17.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் டாடா லாங் ரேஞ்ச் நெக்ஸான் எலக்ட்ரிக் கார் ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வேரியண்ட் 40kWh பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30.2kWh பேட்டரி பேக் மூலம் 312 கி.மீ தூரம் செல்ல முடியும் என்ற நிலையில் 40kWh பேட்டரி பேக் மூலம் 400 கி.மீ ரேஞ்சை எட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கார்களில் XM மற்றும் XZ+ வேரியண்டுகளை மகாராஷ்டிரா அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் பெறலாம்.
    இந்த பைக்கில் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.
    பெங்களூருவை சேர்ந்த ஓபென் - எலக்ட்ரிக் நிறுவனம் ரோர் மின்சார பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் இடம்பெற்றுள்ள நிரந்தர காந்த மோட்டார் 10kW பீக் அவுட்புட்டையும், 4kW தொடர் அவுட்புட்டையும் தரவள்ளது. இந்த மோட்டார் சைக்கில் 62Nm டார்க்கை உருவாக்கக்கூடியது.

    சிங்கிள் ஸ்டேஜ் ரெடக்‌ஷன் கொண்ட பெல்ட் டிரைவ் சிஸ்டம் மூலம் பின்பக்க சக்கரத்திற்கு பவரை பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் வெறும் 3 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கி.மீ வேகத்தையும், அதிகபட்ச வேகமாக 100 கிமீ வேகத்தையும் எட்டும் திறனை பெற்றுள்ளது.

    இந்த பைக் 4.4kWh ஃபிக்ஸ்ட் லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக்குடன் வருகிறது.  இது மற்ற லித்தியம் அயன் பேட்டரியுடன் அட்வாஸான திறனை கொண்டுள்ளது. 2 மணி நேரத்தில் முழுதாக இந்த பைக்கை சார்ஜ் செய்ய முடியும். இது 15A பவர் சாக்கெட்டை கொண்டுள்ளது. இந்த  பவர் சாக்கேட்டை கூடுதல் விலை எதுவும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் வீட்டில் 

    இந்த பைக்கில் எகோ, சிட்டி, ஹாவக் என்ற 3 வகை ரைடிங் மோட் இருக்கிறது. இந்த மூன்று ரைடிங் மோடிலும் 50 கி.மீ, 70 கி.மீ, 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். எகோ வேரியண்டில் அதிகபட்சம் 150 கி.மீ தூரம் வரையும், சிட்டி மற்றும் ஹாவோக்கில் 120 கி.மீ மற்றும் 100 கி.மீ தூரம் வரையும் செல்ல முடியும்.

    இந்த பைக்கில் ஸ்மார்ட் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் பிற செயலிகளும் இதில் உள்ளன.

    இந்த பைக்கில் ட்ரெலில்ஸ் பிரேம், முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பகக்த்தில் மோனோஷாக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பக்கில் 17 இன்ச் வீல், டிஸ்க் பிரேக்குடன் வருகிறது.

    இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.25 லட்சமாகவுள்ளது. மாநிலங்களின் மானியத்துடன் சேர்ந்து ரூ.99,999 வரையில் இந்த பைக்கை வாங்க முடியும்.
    இந்தியாவில் லக்சரி மாடல் மின்சார கார்களே உள்ளதால் குறைந்த விலையில் கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    உலகம் முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளியுள்ளது. இந்தியாவிலும் பலர் மின்சார இருசக்கர வாகனங்கள், கார்களை நோக்கி செல்கின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் மின்சார வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் ஜப்பானின் முன்னணி நிறுவனமான சுஸூகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ரூ.9800 கோடி முதலீட்டை மின்சார வாகன உற்பத்திகாக செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதி சுஸூகி தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிக்களை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இதுகுறித்து சுஸூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் அதிக அளவில் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் பலரும் மின்சார வாகனங்களை நோக்கி திரும்பியுள்ளனர். மின்சார கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் பலவும் அதிக விலை உள்ள லக்சரி மாடலாகத்தான் இருக்கிறது. இதன்விலையே ரூ.1 கோடியில் இருந்து தான் தொடங்குகிறது. 

    ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டும் தான் மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார கார்களை உருவாக்கி வருக்கின்றன. இந்நிலையில் மாருதி சுஸூகி அந்த இடத்தை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையில் கார்களை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியாவில் வரவேற்பு கிட்டும். அந்த வேலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

    தற்போது மாருதி சுஸூகியின் வேகன் - ஆர் மாடலை மின்சார காராக அறிமுகம் செய்ய சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற மாடல்களும் மின்சார வேரியண்டுக்கு மாற்றப்படும்.

    இவ்வாறு மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.
    இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

    இதன்படி மாருதி சுஸூகியின் கார்களின் இன்ஜின்களில் தண்ணீர் தேங்குதல் அல்லது என்ஜின் செயலிழப்பு அல்லது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல்-டீசல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை வெறும் ரூ.500 மட்டும் செலுத்தி சரி செய்துகொள்ள முடியும்.

    இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக அதிக நெரிசல், கலப்பட எரிபொருள் உள்ளிட்ட காரணங்களால் கார்களின் இன்ஜின் பழுதடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளை குறைந்த செலவில் சரி செய்யும் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளோம். 

    மாருதி சுஸூகியின் வேகன்ஆர், ஆல்டோ போன்ற கார்களின் இன்ஜின் பழுதுபார்க்க, வாடிக்கையாளர்கள் ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும்.

    இவ்வாறு கூறியுள்ளது.

    இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×