என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    கடந்த வாரம் பூனே சாலையோரத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி வெளியானது. அதேபோல வேலூர் அருகே ஒக்கினவா மின் பைக் ஒன்று தீப்பிடித்து எரிந்து வேலூரை சேர்ந்த தந்தையும், மகளும் இறந்தனர்.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதை தொடர்ந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கின்றனர். பெரும் நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர், கார்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

    கடந்த வாரம் பூனே சாலையோரத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி வெளியானது. அதேபோல வேலூர் அருகே ஒக்கினவா மின் பைக் ஒன்று தீப்பிடித்து எரிந்து வேலூரை சேர்ந்த தந்தையும், மகளும் இறந்தனர்.

     இந்நிலையில் தற்போது வட சென்னை அருகே  மாத்தூர் டோல் பிளாசா அருகில் ப்யூர் இவி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ப்யூர் இவி வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். வாகன தயாரிப்பில் பலதரப்பட்ட சோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின்பு தான் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. 

    பேட்டரி தீப்பிடிக்காமல் இருப்பதற்கான அம்சங்களும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. முழுதாக விசாரிக்கப்பட்டபின் இந்த விபத்துக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


    இந்த பைக்கில் ப்ளூடூத் கொண்ட டி.எஃப்.டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
    டிரைம்ப் நிறுவனம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது ஆரம்ப நிலை அட்வெஜ்சர் டூரிங் மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் லுக்ரென் ப்ளூ, சேப்பையர் பிளாக், கொரோசி ரெட், கொரோசி கிராப்பைட், மினிமலிஸ்ட் கிராபைட் மற்றும் பிளாக் ஆப்ஷனில் வருகிறது.

    இந்த பைக்கில் 660 சிசி ட்ரிப்பிள் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இது 81 bhp பவர் மற்றும் 64Nm டார்க்கை உருவாக்கக்கூடியது. மேலும் இதில் சிக்ஸ் ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனல் அப் அண்ட் டவுன் குயிக்‌ஷிப்டர் தரப்பட்டுள்ளது.

    இத்துடன் எல்.இ.டி ஹெட்லைட்ஸ், மாடர்ன் லுக்கிங் ப்ளூடூத் கொண்ட டி.எஃப்.டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல். ரோட் மற்றும் ரைன் ரைடிங் மோட்கள், ஸ்விட்சபிள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

    மேலும் சஸ்பென்ஷன் டியூட்டிக்காக இந்த பைக்கில் அட்ஜெஸ்ட் செய்ய முடியாத 41mm USD ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ள அட்ஜெஸ்டபிள் ஷாக், ரிமோட் ப்ரீலோட் அட்ஜெஸ்டருடன் தரப்பட்டுள்ளது.

    இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.8.95 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இந்திய மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் உலக அளவில் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் இந்திய மின்சார வாகன சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதானி குழுமம் நிறுவ திட்டமிட்டுள்ளது.

    அதானி குழுமமும், பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸும் சேர்ந்து முதல் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷனை அகமதாபாத்தில் நிறுவியுள்ளன. மேலும் நாடு முழுவதும் 1500 மின்சார வாகனங்களை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

    தேவையை பொறுத்து கூடுதலாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
    பூபதி கொடுத்த 1 ரூபாய் காசுகளை எண்ணி முடிக்க 10 மணி நேரம் எடுத்ததாக மேலாளர் கூறியுள்ளார்.
    தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த வி பூபதி என்ற இளைஞர் தனது கனவு பைக்கை 1 ரூபாய் காசுகளாக ஷோரூமில் கொடுத்து வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பூபதி 3 வருடங்களுக்கு முன்பு ஷோரூமிற்கு சென்று பஜாஜ் டாமினர் பைக் வாங்க வேண்டும் என்று விலையை கேட்டுள்ளார். ரூ.2.6 லட்சம் என்று தெரிந்தவுடன் ஒவ்வொரு ரூபாயாக தொகையை சேமிக்க தொடங்கியுள்ளார். இறுதியாக தேவையான பணம் சேர்ந்தவுடன் ஷோரூமிற்கு சென்று 1 ரூபாய் காசாக தான் சேர்த்த ரூ.2.6 லட்சத்தையும் கொடுத்துள்ளார்.

    முதலில் ஷோரூம் மேலாளர் மறுக்கவே பிறகு பூபதியின் ஈடுபாட்டை நினைத்து காசுகளை எண்ண தொடங்கினர். பூபதி கொடுத்த காசுகளை எண்ணி முடிக்க 10 மணி நேரம் எடுத்ததாக மேலாளர் கூறியுள்ளார்.

    இறுதியாக பூபதி தனது கனவு பைக்கான பஜாஜ் டாமினரை பெற்றுள்ளார். இந்த காசுகளை பூபதி லாரியில் வைத்து எடுத்து வந்துள்ளார்.

    பூபதி ஏன் வங்கியில் சென்று காசுகளை கொடுக்கவில்லை என கேட்டதற்கு வங்கிகள் 2000 நோட்டுகளாக ரூ.1 லட்சத்தை எண்ணுவதற்கு ரூ.140 கமிஷன் பெறுகின்றன. ரூ.2.6 லட்சத்தை 1 ரூபாய் காசுகளாக எண்ணுவதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என பூபதி தெரிவித்துள்ளார்.
    இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் நாடு முழுவதும் எஃகு சாலை திட்டம் விரிவுப்படுத்தப்படும் என என சி.எஸ்.ஐ.ஆர் விளக்கம் அளித்துள்ளது.
    குஜராத்தில் உள்ள சூரத்தில் 100 சதவீதம் எஃகு கழிவுகள் போடப்பட்ட சாலை போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவின் தொழில்துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி  நிறுவனம் இணைந்து இந்த சாலையை உருவாக்கியுள்ளன. இதற்கு நிதி ஆயோக் மற்றும் எஃகு அமைச்சகம் மற்றும் கொள்கை ஆணையமும் உதவி புரிந்துள்ளது.

    சுமார் 1 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை நீடித்து நிலைக்கக்கூடியது, மழை காலங்களில் பாதிப்படையாமல் பாதுகாப்பானது என சி.எஸ்.ஐ.ஆர் தெரிவித்துள்ளது. 

    சூரத்தில் தொழிற்சாலைகள் நிரம்பிய ஹஜிரா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை பரிசோதனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 

    இந்த சாலை எஃகு தொழிற்சாலைகளில் வெளியிடப்படும் கழிவுகளால் போடப்பட்டுள்ளது. பிற சாலைகளுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் அடர்த்தியானது. 20 சுமை ஏற்றப்பட்ட டிரக்குகள் இந்த சாலையில் சென்று வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எஃகு தொழிற்சாலை கழிவுகளை நிலத்தில் கொட்டினால் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அவற்றை மறுசுழற்சி செய்து சாலை பணிக்கு பயன்படுத்தும்போது மாசும் குறைகிறது. தினமும் லட்சக்கணக்கான டன்கள் மதிப்புடைய எஃகு கழிவுகள் வெளியேறுகின்றன. இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என சி.எஸ்.ஐ.ஆர் விளக்கம் அளித்துள்ளது.
    டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடி நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 

    இந்நிலையில் இந்த நிறுவனம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட 947 கார்களை திரும்ப பெற்றுள்ளது. இதற்கு காரணம் பின்புறத்தை காட்டும் இமேஜ் டிஸ்பிளே தாமதமாக செயல்படுவது தான் என கூறப்படுகிறது.

    காரை ரிவர்ஸ் செய்யும்போதே டிஸ்பிளேவில் காட்டப்படாமல், சிறிது நேரம் கழித்து காட்டப்படுகிறது. இது ஓட்டுநருக்கு தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்பதால் அத்தனை கார்களையும் திரும்ப பெற்றுள்ளோம் என டெஸ்லா விளக்கமளித்துள்ளது.

    டெஸ்லா கார்களில் ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 என்ற மென்பொருளின் மூலம் பின்புற டிஸ்பிளே வேலைசெய்கிறது. இந்த மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அப்டேட்டை வெளியிடவும் டெஸ்லா முடிவு செய்துள்ளது.
    இந்த பைக் உலக மார்க்கெட்டில் 2024-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு பின் இந்தியாவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
    ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம், சீன நிறுவனமான குயான்ஜாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆரம்ப நிலை, குறைந்தவிலை பைக்குகள் சிலவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

    இதன்படி முதல் பைக்காக ஹார்லி டேவிட்ஸன் 338R பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த பைக்கில் 500 சிசி பேரலல் ட்வின் இன்ஜின், ரோட்ஸ்டர் பாடி ஒர்க்குடன் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக இந்த பைக் பெனிலி லியோசினோ 500 பைக்கை போன்ற ஃபிரேம், பிரண்ட் சஸ்பென்ஷன், ரேடிக்கல் பிரேக் காலிப்பர்ஸ், ஸ்வின்கார்ம் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும் இதில் அலாய் வீல்கள், ஹாண்டில்பார், ஃபூட்பெக் ஹாங்கர்ஸ் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பைக்கின் இன்ஜின் 47bhp முதல் 500 bhp வரை டெலிவரி செய்யும் என கூறப்படுகிறது.

    இந்த பைக் உலக மார்க்கெட்டில் 2024-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு பின் இந்தியாவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
    சமீபத்தில் பி.எம்.டபில்யூ, ஆடி, மெர்சடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    பிரபல ஜப்பானிய கார் நிறுவனமான டயோட்டா அனைத்து கார்களின் விலையை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளது.  வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து கார்களின் விலையும் 4 சதவீதம் ஏற்றப்படவுள்ளது.

    சமீபத்தில் பி.எம்.டபில்யூ 3.5 சதவீதம் விலை உயர்வை அறிவித்தது. அதை தொடர்ந்து ஆடி, மெர்செடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் 1 முதல் விலை உயர்வை அறிவித்துள்ளன. இந்நிலையில் டயோட்டாவும் இன்று விலை உயர்வை அறிவித்துள்ளது.

    இன்புட் காஸ்ட் அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றம் செய்யப்படுவது கட்டாயமாகியுள்ளதாக டயோட்டா தெரிவித்துள்ளது. இந்தியாவில் டயோட்டா நிறுவனம் ஃபார்டுனர், இனோவா கிரிஸ்டா, கேம்ரி, வெல்ஃபயர், அர்பன் க்ரூசர் மற்றும் கிளான்ஸா ஆகிய 6 கார்களை விற்பனை செய்துவருகிறது.

    குறிப்பாக டயோட்டாவின் கிளான்சா சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகமானது. இந்நிலையில் புதிய மாடல் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த கார் டயோட்டாவின் ஹிலக்ஸ் பிக்அப் டிரக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதமே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் அடுத்த மாதம் வெளியாகும் என கருதப்படுகிறது.
    இந்த பைக்கில் 20 கி.மீ சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் ஏறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரையை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் சைக்கிளை மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். 

    கல்லூரியில் எம்.எஸ்.சி படிக்கும் தனுஷ்குமார் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை, தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார்.

    இந்த பைக் ஓடும்போது தானாகவே சார்ஜ் ஏறிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 40 கி.மீ தூரம் வரை செல்லும் என்றும், 20 கி.மீ சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் ஏறிவிடும் எனவும் தனுஷ்குமார் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு மத்திய அரசின் ஃபிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்பதால் இதனை சாலைகளில் ஓட்டி செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
    கியா நிறுவனம் விரைவில் கியா ஈவி6 என்ற புதிய மின்சார கார் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கார் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    இதன்படி ஈவி6 58.0 kWh யூனிட் மற்றும் 77.4 kWh யூனிட் என்ற இரண்டு பேட்டரி வேரியண்டுகளில் வெளி வருகிறது.

    58.0 kWh பேட்டரியில் 168kW பின்பக்க மோட்டார் தரப்பட்டிருக்கும். இது 168 ஹார்ஸ்பவரை உருவாக்கக்கூடியது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 373 கி.மீ வரை செல்லும் என கூறப்படுகிறது. மற்றொரு வேரியண்டான 77.4kWh பேட்டரி கொண்ட காரில் 168kW பின்பக்க மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 225 ஹார்ஸ்பவரை உருவாக்ககூடியது. இந்த கார் 500 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஈவி6 காரில் 2900mm வீல் பேஸ் வழங்கப்பட்டிருக்கும், டேஷ்போர்டில் 2 ஸ்கிரீன்கள் தரப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்கீரினில் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டமும், இரண்டாவது ஸ்க்ரீனில் டிஜிட்டல் டயலும் இருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.25.5 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.
    உலகில் உள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டன. 

    இந்நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இரண்டு பேர் அமரும் வகையில் பறக்கும் மின்சார கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது. 

    மேலும் வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.
    வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்.ஜி மோட்டார் நிறுவனம் MG e-Pay என்ற ஒன்ஸ்டாப் கார் நிதி இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக கார் கடன் பெறலாம். 

    இந்த இணையதளத்திற்காக எம்.ஜி மோட்டார் நிறுவனம் பலதரப்பட்ட வங்கிகளுடன் இணைந்து செயல்படவுள்ளது. தற்போது வரை ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோடாக் மகிந்திரா பிரைம் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை எம்.ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

    பலதரப்பட்ட வங்கிகள் இணைவதால் பலவிதமான வட்டிகளில், சலுகைகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடன் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். வெறும் 5 கிளிக்குகளில், 5 படிநிலைகளில் வாடிக்கையாளர் உடனடி செயல்முறை மூலம் கார் லோன் பெற்றுவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் கடன் பெற்றவுடன் காரை ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும். இதைத்தவிர கார் உதிரி மாகங்கள், காப்பீடுகள் ஆகியவற்றையும் இந்த இணையதளத்தில் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

    இத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிடும் வசதியையும் எம்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    தற்போது எம்.ஜி நிறுவனம்  ஹெக்டார், ஹெக்டார் பிளஸ், ஆஸ்டோர், குளோஸ்டோர் மற்றும் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ZS EV ஆகிய கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    ×