search icon
என் மலர்tooltip icon

    கார்

    எம்.ஜி மோட்டார்ஸ்
    X
    எம்.ஜி மோட்டார்ஸ்

    இனி கார் கடன் வாங்க 5 கிளிக்குகள் போதும்... எம்.ஜி மோட்டார் அறிவிப்பு

    வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்.ஜி மோட்டார் நிறுவனம் MG e-Pay என்ற ஒன்ஸ்டாப் கார் நிதி இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக கார் கடன் பெறலாம். 

    இந்த இணையதளத்திற்காக எம்.ஜி மோட்டார் நிறுவனம் பலதரப்பட்ட வங்கிகளுடன் இணைந்து செயல்படவுள்ளது. தற்போது வரை ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோடாக் மகிந்திரா பிரைம் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை எம்.ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

    பலதரப்பட்ட வங்கிகள் இணைவதால் பலவிதமான வட்டிகளில், சலுகைகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடன் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். வெறும் 5 கிளிக்குகளில், 5 படிநிலைகளில் வாடிக்கையாளர் உடனடி செயல்முறை மூலம் கார் லோன் பெற்றுவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் கடன் பெற்றவுடன் காரை ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும். இதைத்தவிர கார் உதிரி மாகங்கள், காப்பீடுகள் ஆகியவற்றையும் இந்த இணையதளத்தில் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

    இத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிடும் வசதியையும் எம்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    தற்போது எம்.ஜி நிறுவனம்  ஹெக்டார், ஹெக்டார் பிளஸ், ஆஸ்டோர், குளோஸ்டோர் மற்றும் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ZS EV ஆகிய கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×