என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல் செய்திகள்

X
எஃகு சாலை
குஜராத்தில் எஃகு கழிவுகளால் போடப்பட்ட சாலை போக்குவரத்திற்கு திறப்பு
By
மாலை மலர்28 March 2022 11:56 AM GMT (Updated: 28 March 2022 11:56 AM GMT)

இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் நாடு முழுவதும் எஃகு சாலை திட்டம் விரிவுப்படுத்தப்படும் என என சி.எஸ்.ஐ.ஆர் விளக்கம் அளித்துள்ளது.
குஜராத்தில் உள்ள சூரத்தில் 100 சதவீதம் எஃகு கழிவுகள் போடப்பட்ட சாலை போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொழில்துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த சாலையை உருவாக்கியுள்ளன. இதற்கு நிதி ஆயோக் மற்றும் எஃகு அமைச்சகம் மற்றும் கொள்கை ஆணையமும் உதவி புரிந்துள்ளது.
சுமார் 1 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை நீடித்து நிலைக்கக்கூடியது, மழை காலங்களில் பாதிப்படையாமல் பாதுகாப்பானது என சி.எஸ்.ஐ.ஆர் தெரிவித்துள்ளது.
சூரத்தில் தொழிற்சாலைகள் நிரம்பிய ஹஜிரா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை பரிசோதனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த சாலை எஃகு தொழிற்சாலைகளில் வெளியிடப்படும் கழிவுகளால் போடப்பட்டுள்ளது. பிற சாலைகளுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் அடர்த்தியானது. 20 சுமை ஏற்றப்பட்ட டிரக்குகள் இந்த சாலையில் சென்று வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஃகு தொழிற்சாலை கழிவுகளை நிலத்தில் கொட்டினால் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அவற்றை மறுசுழற்சி செய்து சாலை பணிக்கு பயன்படுத்தும்போது மாசும் குறைகிறது. தினமும் லட்சக்கணக்கான டன்கள் மதிப்புடைய எஃகு கழிவுகள் வெளியேறுகின்றன. இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என சி.எஸ்.ஐ.ஆர் விளக்கம் அளித்துள்ளது.
Next Story
×