search icon
என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுஸூகி வேகன் -ஆர்
    X
    மாருதி சுஸூகி வேகன் -ஆர்

    அனைவரும் வாங்கும் விலையில் மின்சார கார்களை இந்தியாவில் தயாரிக்க ரூ.9800 கோடி முதலீடு செய்யும் பிரபல நிறுவனம்

    இந்தியாவில் லக்சரி மாடல் மின்சார கார்களே உள்ளதால் குறைந்த விலையில் கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    உலகம் முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளியுள்ளது. இந்தியாவிலும் பலர் மின்சார இருசக்கர வாகனங்கள், கார்களை நோக்கி செல்கின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் மின்சார வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் ஜப்பானின் முன்னணி நிறுவனமான சுஸூகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ரூ.9800 கோடி முதலீட்டை மின்சார வாகன உற்பத்திகாக செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதி சுஸூகி தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிக்களை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இதுகுறித்து சுஸூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் அதிக அளவில் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் பலரும் மின்சார வாகனங்களை நோக்கி திரும்பியுள்ளனர். மின்சார கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் பலவும் அதிக விலை உள்ள லக்சரி மாடலாகத்தான் இருக்கிறது. இதன்விலையே ரூ.1 கோடியில் இருந்து தான் தொடங்குகிறது. 

    ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டும் தான் மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார கார்களை உருவாக்கி வருக்கின்றன. இந்நிலையில் மாருதி சுஸூகி அந்த இடத்தை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையில் கார்களை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியாவில் வரவேற்பு கிட்டும். அந்த வேலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

    தற்போது மாருதி சுஸூகியின் வேகன் - ஆர் மாடலை மின்சார காராக அறிமுகம் செய்ய சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற மாடல்களும் மின்சார வேரியண்டுக்கு மாற்றப்படும்.

    இவ்வாறு மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.
    Next Story
    ×