search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ பைக்"

    • வாரண்டியை நீட்டிக்க ஏராளமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
    • ஏற்கனவே வழங்கி வந்ததை விட எட்டு மடங்கு அதிகம்.

    அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் F77 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு புதிதாக பேட்டரி வாரண்டிகளை அறிவித்து இருக்கிறது. புதிய வாரண்டி திட்டத்தின் கீழ் அல்ட்ராவொய்லெட் F77 வாங்குவோர் அதன் பேட்டரியின் வாரண்டியை நீட்டிக்க ஏராளமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இதற்காக அல்ட்ராவொய்லெட் நிறுவனம் UV கேர், UV கேர் பிளஸ் மற்றும் UV கேர் மேக்ஸ் என மூன்று வாரண்டி திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இவற்றில் முதல் இரண்டு வாரண்டி திட்டங்களுக்கு முறையே 60 ஆயிரம் மற்றும் 1 லட்சம் கிலோமீட்டர்கள் வரையிலான வாரண்டி வழங்கப்படுகிறது.

     


    முன்னதாக இவற்றில் 30 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரையிலான வாரண்டியே வழங்கப்பட்டது. புதிய UV கேர் மேக்ஸ் திட்டத்தின் கீழ் பேட்டரிக்கான வாரண்டி 8 லட்சம் கிலோமீட்டர்கள் அல்லது எட்டு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்ததை விட எட்டு மடங்கு அதிகம் ஆகும்.

    ஏற்கனவே F77 மாடலை பயன்படுத்துவோரும் இந்த திட்டங்களை வாங்க முடியுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், புதிய வாரண்டி திட்டங்களின் விலையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    • ஆடி இ பைக் மாடலில் 250 வாட் பிரோஸ் மோட்டார் உள்ளது.
    • ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய இ பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் பைக் அல்லது இ பைக் மாடல்கள் சமீப காலங்களில் வழக்கமான மிதிவண்டிகளுக்கு (சைக்கிள்) மாற்றாக அமைந்துள்ளது. காற்று மாசு ஏற்படுத்தாமல் இருப்பது, சுற்றுச்சூழலகுக்கு உகந்தது என ஏராளமான நற்பயன்களை வழங்குவதால் இ-பைக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இ பைக் மாடல்களில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரிசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை பெட்ரோல் என்ஜின் கொண்ட வாகனங்களை விட பெருமளவுக்கு காற்று மாசு ஏற்படுவதை தடுக்கிறது. கார்களுக்கு மாற்றாக இ பைக் வாங்கும் போது காற்று மாசு ஏற்படுவதை தடுப்பசோடு, நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும்.

     

    ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய இ பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. எனினும், இந்த இ பைக் விலை தற்போது விற்பனை செய்யப்படும் வாடிக்கையன கார் மாடல்களை விட அதிகம் ஆகும். இந்த இ பைக் அதிநவீன சொகுசு வசதிகளை கொண்டிருக்கிறது. இது ஆடி நிறுவனத்தின் RS Q E-டிரான் E2 டக்கர் ரேலி ரேசர் போன்ற மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இ பைக்கில் உள்ள ஏராளமான அம்சங்கள் பைக் ப்ரியர்களை நிச்சயம் கவரும் வகையில் இருக்கிறது. இத்தாலியின் ஃபேண்டிக் உருவாக்கிய இந்த இ பைக் XMfF 1.7 சார்ந்து ருவாகி இருக்கும் ஆடி இ பைக் மாடலில் 250 வாட் பிரோஸ் மோட்டார் உள்ளது. இதே மோட்டார் ஹார்லி டேவிட்சன் சீரியல் 1 பேஷ்/Mtn உள்து. இத்துடன் 720 வாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இவை அதிகபட்சம் 66ft/lb டார்க் வெளிப்படுத்துகிறது.

    ஆடியின் புதிய இ பைக் மாடல் மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 499 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 43 ஆயிரத்து 541 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    • பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பற்றி பைக்குகள் எரிந்து நாசாமானது.

    மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூம். இங்கு, ஏராளமான இ பைக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின. நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

    விபத்து குறித்து தீயணபை்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் எரிந்து நாசாமானது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×