search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    யமஹா ஏரோக்ஸ்
    X
    யமஹா ஏரோக்ஸ்

    சக்திவாய்ந்த என்ஜின், கச்சிதமான அம்சங்கள் - யமஹா ஏரோக்ஸ் ரிவ்யூ

    இந்திய சந்தையின் பிரமீயம் ஸ்கூட்டர் பிரிவில் யமஹா தனது ஏரோக்ஸ் 155 மூலம் களமிறங்கி இருக்கிறது.


    யமஹா நிறுவனத்தின் 155சிசி மேக்சி ஸ்கூட்டர் ஏரோக்ஸ் 155 மாடல் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. புதிய ஏரோக்ஸ் மூலம் யமஹா இந்திய சந்தையின் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்கள் பிரிவில் களமிறங்கி இருக்கிறது.

    இந்தியாவில் புதிய யமஹா ஏரோக்ஸ் விலை ரூ. 1,31,739, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. யமஹா ஏரோக்ஸ் மாடல் மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ மற்றும் கிரே வெர்மிலியன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஏரோக்ஸ் மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். அதன்படி புதிய ஏரோக்ஸ் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா, பயன்படுத்த எப்படி இருக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம். 

    யமஹா ஏரோக்ஸ்

    யமஹா ஏரோக்ஸ் 155 அம்சங்கள்

    பவர் டிரெயின் - 155சிசி, லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வு
    திறன் - 8,000 ஆர்.பி.எம்.-இல் 15.6 பி.எஸ்.
    இழுவிசை - 6500 ஆர்.பி.எம்-இல் 13.9 நியூட்டன் மீட்டர்
    டிரான்ஸ்மிஷன் - வி பெல்ட் ஆட்டோமேடிக்
    டையர்கள் முன்புறம் / பின்புறம் - 110/80-14M/C 53P டியூப்லெஸ் / 140/70-14M/C 62P டியூப்லெஸ் 
    சஸ்பென்ஷன் முன்புறம் / பின்புறம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் / யூனிட் ஸ்விங்
    பிரேக் முன்புறம் / பின்புறம் - டிஸ்க் பிரேக் 230 எம்.எம். மற்றும் ஏ.பி.எஸ். / டிரம் 130 எம்.எம். 
    வீல்பேஸ் - 1350 மில்லிமீட்டர்
    கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 145 மில்லிமீட்டர்
    சீட் உயரம் - 790 மில்லிமீட்டர்
    எடை - 126 கிலோ
    பியூவல் டேன்க் கொள்ளளவு - 5.5 லிட்டர்

     யமஹா ஏரோக்ஸ்

    டிசைன்

    ஸ்கூட்டர்கள் பிரிவில் 155 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டு அறிமுகமானதோடு, அசத்தலான டிசைன் மூலம் புதிய ஏரோக்ஸ் அசர வைக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் தோற்றம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக நேர்த்தியான பாடி-வொர்க், அதற்கு ஏற்ற எல்.இ.டி. ஹெட்லைட்களுடன் ஏரோக்ஸ் முன்புறம் ஸ்போர்ட் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இத்துடன் 14 இன்ச் வீல்கள், அசத்தலான எக்சாஸ்ட் சிஸ்டம், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

    இவைதவிர, ஸ்விட்ச்கியர், பாடி-வொர்க் போன்றவை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபியூவல் கேப், பில்லியன் ஃபூட்பெக், ஃபுளோர்-மேட் உள்ளிட்டவை வித்தியாசமாக இருந்தாலும் சமயங்களில் சற்றே இடையூறை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஏரோக்ஸ், 24.5 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் பெற்று இருக்கிறது. எனினும், இத்தகைய திறன் கொண்ட ஸ்கூட்டரில் 5.5 லிட்டர் ஃபியூவல் டேன்க் அளவில் சிறியதே.

     யமஹா ஏரோக்ஸ்

    அம்சங்கள்   

    ஏரோக்ஸ் மாடல் இந்திய சந்தையின் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் எல்.இ.டி. யூனிட்களாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷர்கள் தனியே அக்சஸரி வடிவில் ரூ. 1,490 விலையில் விற்பனை செய்யப்படுகிகிறது. புதிய ஏரோக்ஸ் மாடலிலும்  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பயன்பாட்டு தகவல்களுடன் வி.வி.ஏ. இண்டிகேட்டர் மற்றும் டக்கோமீட்டர் போன்ற விவரங்களையும் காண்பிக்கிறது.

    இந்த அம்சங்களுடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள், பார்க் லொகேஷன் உள்ளிட்டவை விவரங்களை இயக்க முடியும். இதில் உள்ள ஃபியூவல் டேன்க் ஸ்கூட்டரில் இருந்து இறங்காமலேயே பட்டன் மூலம் திறக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதன் அண்டர் சீட் ஸ்டேரேஜை இயக்கவும் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏரோக்ஸ் மாடலில் டி.சி. சார்ஜிங் போர்ட், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் சைடு ஸ்டாண்டு கட்-ஆஃப் வசதி உள்ளது. 

     யமஹா ஏரோக்ஸ்

    செயல்திறன்

    புதிய யமஹா ஏரோக்ஸ் மாடலில் 4 வால்வுகள் கொண்ட 155சிசி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வி.வி.ஏ. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் யமஹாவின் ஆர்15 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் பிரீமியம் ஸ்கூட்டருக்கு ஏற்ற வகையில் ரி-டியூன் செய்யப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் ஏரோக்ஸ் கொண்டிருக்கும் என்ஜின் நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற உடனடி பிக்க்ப், நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற சீரான வேகத்தை சிரமம் இன்றி வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகங்களிலும் அதிர்வுகள் இன்றி சீராக செல்கிறது. இது மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்கிறது. 

    இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 50 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. எனினும் அதிவேக பயன்பாடுகளின் போது, இந்த அளவு வேறுபடுகிறது. இத்துடன் போக்குவரத்து நெரிசல்களில் நிற்கும் போது எரிபொருள் சேமிக்கும் நோக்கில் என்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடுகிறது. மீண்டும் என்ஜினை செயல்பாட்டுக்கு கொண்டு வர நெரிசல் பதற்றம் இன்றி திராட்டிலை திருகினாலே போதும்.

     யமஹா ஏரோக்ஸ்

    ரைடு மற்றும் ஹேண்ட்லிங்

    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற ஸ்கூட்டர்களை விட ஏரோக்ஸ் மாடலின் ஹேண்ட்லிங் சிறப்பாகவே இருக்கிறது. நெரிசல்களில் உடனடி கட் செய்வது ஏரோக்ஸ் சற்று கனமாகவே உணர்கிறது. எனினும், இந்த ஸ்கூட்டரின் ஸ்டேபிலிட்டி மற்றும் கம்போஷர் அலாதியாக இருக்கிறது. எந்த வேகத்தில், எந்த கோணத்தில் பயணித்தாலும், அதிர்வுகள் அற்ற நிலையான உறுதித்தன்மையை ஏரோக்ஸ் உணரச் செய்கிறது. கார்னெரிங்களில் ஏரோக்ஸ் ஸ்கூட்டரையும் கடந்து மோட்டார்சைக்கிள் போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

    மற்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களில் மோனோ ஷாக் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், ஏரோக்ஸ் மாடலில் டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. மேலும் இவை சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற ஃபோர்க் சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. இதே ஸ்கூட்டரில் மேலும் சவுகரிய அனுபவத்தை பெற யமஹா கியாஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய யமஹா ஏரோக்ஸ் மாடல் நகர போக்குவரத்து அசத்தலான சவுகரியத்தை வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. வழங்கப்பட்டுளள்ளது. ஸ்கூட்டர் போன்ற பயன்பாடுகளிலும், இது மோட்டார்சைக்கிள் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. 
    Next Story
    ×