என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஆடி நிறுவனத்தின் புதிய 2022 கியூ7 மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் 2022 ஆடி கியூ7 மாடலை பிப்ரவரி 3 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கியூ7 ஃபேஸ்லிப்ட் வடிவில் இந்தியா வருகிறது. முன்னதாக இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, இதன் விவரங்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் அறிமுகமாக இருக்கும் 2022 ஆடி கியூ7 மாடல் புது என்ஜின் கொண்டிருக்கிறது. புது மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலில் புது டிசைன் கொண்ட முன்புறம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆடி பாரம்பரிய டே-டைம் ரன்னிங் லைட்கள், புது டிசைன் கொண்ட கிரில், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் உள்ளன.
Unveiling the future. Get set for the #AudiQ7, arriving on 3rd February. #FutureIsAnAttitudepic.twitter.com/J28o15nFBD
— Audi India (@AudiIN) January 24, 2022
இத்துடன் புது பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக், புது அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் புதிய ஆடி கியூ7 மாடலில் டுவீக் செய்யப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் குரோம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. உள்புறத்தில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அடுக்கு இருக்கையில் உள்ள பயணிகளுக்காக டேப்லெட் போன்ற திரைகள் உள்ளன.
2022 ஆடி கியூ7 மாடலில் 3 லிட்டர் வி6 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய யெஸ்டி பிராண்டு மாடல்களின வினியோக பணிகளை துவங்கியது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் யெஸ்டி பிராண்டில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. நீண்ட இடைவெளிக்கு பின் ரி-எண்ட்ரி ஆகி இருக்கும் யெஸ்டி பிராண்டில் தற்போது அட்வென்ச்சர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இவற்றின் வினியோகம் தற்போது துவங்கி இருக்கிறது.
இந்தியாவில் புதிய யெஸ்டி மாடல்களின் விலை ரூ. 1.95 லட்சத்தில் துவங்கி ரூ. 2.19 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன. புதிய யெஸ்டி மாடல்கள் நாடு முழுக்க 300 விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

யெஸ்டி அட்வென்ச்சர், ரோட்ஸ்டர் மற்றும் ஸ்கிராம்ப்ளர் என மூன்று மாடல்களிலும் 334சிசி திறன் கொண்ட சிங்கில் சிலிண்டர் 4 ஸ்டிரோக் லிக்விட் கூல்டு டி.ஒ.ஹெச்.சி. என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ரோட்ஸ்டர் மாடலில் இந்த என்ஜின் 29.7 பி.எஸ். திறன், 29 நியூட்டன் மீட்டர் டார்க் இழவிசையை வெளிப்படுத்துகிறது.
யெஸ்டி அட்வென்ச்சர் மாடலில் இந்த என்ஜின் 30.2 பி.எஸ். திறன், 29.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மசிராட்டி நிறுவனத்தின் எம்.சி.20 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மசிராட்டி நிறுவனம் இந்த ஆண்டு மூன்று மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றில் முதல் மாடல் மசிராட்டி லெவாண்ட் ஹைப்ரிட் ஆகும். இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.
இதைத் தொடர்ந்து எம்.சி.20 ஸ்போர்ட்ஸ்கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் கன்வெர்டிபில் வேரியண்ட் இந்த ஆண்டு இறறுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசரை மசிராட்டி வெளியிட்டு இருந்தது.

புதிய மசிராட்டி எம்.சி.20 மாடல்களில் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 641 பி.ஹெச்.பி. திறன், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
யமஹா நிறுவனத்தின் எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் மாடலை அப்டேட் செய்தது. அதன்படி இந்த மாடல் தற்போது இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. அந்த வகையில், யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடல் தற்போது மேட் காப்பர் மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த மாடல் ரேசிங் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.
முன்னதாக யமஹா எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் - படினா கிரீன், வைட்-வெர்மிலான் மற்றும் டார்க் மேட் புளூ என மூன்று நிறங்களில் மட்டுமே கிடைத்தது. தற்போது இரண்டு புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய சந்தையில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் மொத்தத்தில் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடலில் 249சிசி, ஏர் கூல்டு, எஸ்.ஓ.ஹெச்.சி., 4 ஸ்டிரோக், சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.8 பி.எஸ். பவர், 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடலின் விலை ரூ. 1,38,800, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. அறிமுகமான மூன்றே மாதங்களில் புதிய டாடா பன்ச் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய டாடா பன்ச் பியூர் மற்றும் பியூர் ரிதம் என இரண்டு வேரியண்ட்களின் விலை ரூ. 16 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 11 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. 'நிறுவனத்தின் உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்,' என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா பன்ச் டாப் எண்ட் மாடல்களான கிரியேட்டிவ் மற்றும் கிரியேட்டிவ் இரா விலைகள் முறையே ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமானது முதல் பிரபல மாடல்களில் ஒன்றாக டாடா பன்ச் மாறி வருகிறது. இந்த மாடலுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக இதற்கான காத்திருப்பு காலம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
நெக்சு மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய பசிங்கா இ சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய நிறுவனமான நெக்சு மொபிலிட்டி புதிதாக இ சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பசிங்கா என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 49,445 என துவங்கி அதிகபட்சம் ரூ. 51,525 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பசிங்கா இ சைக்கிள் மாடல்கள் 100 கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதில் ஒற்றை கழற்றக்கூடிய லி-அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மிக உறுதியான வடிவமைப்பு கொண்டிருக்கும் பசிங்கா மாடல்களில் அதிகபட்சம் 15 கிலோ எடையை கொண்டு செல்ல முடியும்.

பசிங்கா இ சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது. புதிய பசிங்கா மாடல்கள் பயனர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இ சைக்கிள் மாடல்களை எளிய தவணையில் வாங்க நெக்சு மொபிலிட்டி நிறுவனம் செஸ்ட் மணி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இ சைக்கிள் மாடல்களை வாங்கும் வழியை எளிமையாக்கும் வழிமுறைகளை நெக்சு அறிவித்து இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் சமீபத்திய இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் ஸ்பெஷல் எடிஷன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனம் விரைவில் புதிய இசட்650ஆர்.எஸ். 50th ஆனிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை கவாசகி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே கவாசகி இசட்650ஆர்.எஸ். மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஸ்பெஷல் ஆனிவர்சரி எடிஷன் மாடலும் இந்தியாவில் அறிமுகமாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே இசட்650ஆர்.எஸ். ஆனிவர்சரி எடிஷன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே மாடல் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர கவாசகி முடிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கவாசகி நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க Z1 மோட்டார்சைக்கிள் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கவாசகி இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் கேண்டி எமிரால்டு கிரீன் நிறம் மற்றும் கோல்டன் நிற அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.
கவாசகி இசட்650ஆர்.எஸ். ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 649சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
விலையை பொருத்தவரை புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதன் விவரங்களை பார்ப்போம்.
2022 ஆண்டில் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக மாருதி சுசுகி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது கார் மாடல்கள் விலை 1.7 சதவீதம் உயர்த்துகிறது. விலை உயர்வு நேற்று (ஜனவரி 15, 2022) அமலுக்கு வந்தது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி தற்போது 14 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர வரும் மாதங்களில் மேலும் சில புது மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதலில் செலரியோ சி.என்.ஜி. மாடலும் அடுத்த மாதம் பலேனோ ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.9 சதவீதம் உயர்த்தியது. கடந்த ஆறு மாதங்களில் மாருதி சுசுகி தனது கார் மாடல்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் மாடல்களின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்தியாவில் ஆறு நகரங்களில் மாற்றி இருக்கிறது. இரு மாடல்களின் விலை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் பூனே போன்ற நகரங்களில் மாற்றப்பட்டது.
டெல்லி - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 5580 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,38,006 மற்றும் ரூ. 1,18,996 ஆகும்.
மும்பை - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 13,605 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,28,636 மற்றும் ரூ. 1,09,626 ஆகும்.
சென்னை - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 6105 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,52,401 மற்றும் ரூ. 1,33,391 ஆகும்.
பெங்களூரு - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 6157 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,50,657 மற்றும் ரூ. 1,31,647 ஆகும்.
ஐதராபாத் - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 5475 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,52,401 மற்றும் ரூ. 1,33,391 ஆகும்.
பூனே - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 13,605 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,28,321 மற்றும் ரூ. 1,09,311 ஆகும்.
விலை மாற்றத்தின் படி மும்பை மற்றும் பூனே வாடிக்கையாளர்கள் சற்றே குறைந்த விலையிலும், மற்ற நகர வாடிக்கையாளர்கள் அதிக விலையிலும் ஏத்தர் ஸ்கூட்டர் மாடல்களை வாங்க முடியும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி டார்க் எடிஷன் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சஃபாரி மாடலை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. தற்போது சஃபாரி மாடலின் டார்க் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் புதிய டார்க் எடிஷன் மாடல் ஜனவரி 17 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த நிலையில், புதிய சஃபாரி டார்க் எடிஷன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
டாடா சஃபாரி டார்க் எடிஷன் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், ஒ.ஆர்.வி.எம்., அலாய் வீல்களில் பிளாக் அக்செண்ட்கள் உள்ளன. முன்புற ஃபெண்டரில் டார்க் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. உள்புறம் டூ-டோன் டேஷ்போர்டு, பிளாக்டு-அவுட் தீம் செய்யப்படுகிறது.
Reign on the throne on every ride with Ventilated Seats Airflow effect.
— Tata Motors Cars (@TataMotors_Cars) January 15, 2022
2 Days To Go, Stay Tuned!
.
.
#Safari#ComingSoon#TataMotorsPassengerVehicles#NewForever#ReclaimYourLifepic.twitter.com/vFrvpPUSp8
புதிய டார்க் எடிஷன் மாடலிலும் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் டாடா சஃபாரி மாடல் ஹூண்டாய் அல்கசார், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700, எம்.ஜி. ஹெக்டர் பிளஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் கியா கேரன்ஸ் எம்.பி.வி. மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் பிரீமியம் எம்.பி.வி. மாடலான கேரன்ஸ் முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. புதிய கேரன்ஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். முன்பதிவு கியா இந்தியா வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.

கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் ஹூண்டாய் அல்கசார், மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6, டாடா சபாரி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய கேரன்ஸ் எம்.பி.வி. இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ மாடலுக்கான வினியோக விவரங்களை அறிவித்து இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 20 ஆயிரம் செலுத்தி எஸ்1 ப்ரோ மாடலை முன்பதிவு செய்தவர்கள் ஜனவரி 21, 2022 அன்று ஸ்கூட்டருக்கான முழு தொகையை செலுத்தலாம் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான வினியோகம் இம்மாத இறுதியில் துவங்குகிறது. இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.
ஸ்கூட்டர் மாடலின் வினியோகம் பலமுறை தாமதான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜனவரி 21, 2022 அன்று முழு தொகை செலுத்துவோருக்கு ஓலா எஸ்1 ப்ரோ மாடல் இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத துவக்கத்திலோ வினியோகம் செய்யப்பட்டு விடும் என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
Lohri ki lakh lakh vadhaiyan, Sankrati ki shubhkaamnayein, Pongal vazhthukkal!
— Bhavish Aggarwal (@bhash) January 14, 2022
We’re celebrating with our own harvest 🌾🛵 😎
Sea of scooters awaits! Final payment window opens Jan 21, 6pm in Ola App for all customers who've paid 20k. We'll dispatch across Jan & Feb. pic.twitter.com/RZSAeclC0e
முதற்கட்ட விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இரு ஸ்கூட்டர்களுக்கான புதிய முன்பதிவு தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் டிசம்பர் மாத வாக்கில் ஓலா எஸ்1 ப்ரோ மாடலுக்கான வினியோகம் துவங்கியது. இதுவரை 4 ஆயிரம் எஸ்1 ப்ரோ யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது.






