என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேம்ரி ஹைப்ரிட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்நிறுவனம் சத்தமின்றி கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேம்ரி ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 41.70 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
2019 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேம்ரி மாடல் தற்போது அதன் இரண்டாவது அப்டேட்டை பெற்று இருக்கிறது. புதிய பேஸ்லிப்ட் மாடலில் சிறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலாக சில புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2022 கேம்ரி ஹைப்ரிட் மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது.

புதிய டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலில் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் 160 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 215 பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. மேலும் இந்த கார் ஸ்போர்ட், இகோ மற்றும் நார்மல் என மூன்று டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
2022 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடலின் விலை சந்தையில் ரூ. 2.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 2022 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடல் விரைவில் இந்தியா வருகிறது. அதன்படி இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 2.31 கோடி, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
2022 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடலின் அனைத்து வேரியண்ட் மற்றும் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் எம்.எல்.ஏ-ஃபிளெக்ஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் லாங்-வீல்பேஸ் வெர்ஷன்களில் வழங்கப்பட இருக்கிறது. முதல்முறையாக லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடல் 7 சீட்டர் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.

புதிய 2022 ரேன்ஜ் ரோவர் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. இதன் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 389 பி.சஹெச்.பி. திறன், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 243 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
யெஸ்டி பிராண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விவரங்களை பார்ப்போம்.
யெஸ்டி பிராண்டு இந்திய சந்தையில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து ரி-எண்ட்ரி கொடுத்திருக்கிறது. இவை யெஸ்டி அட்வென்ச்சர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 1.95 லட்சத்தில் துவங்கி ரூ. 2.19 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மூன்று மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய யெஸ்டி மாடல்கள் விற்பனையகம் வரத்துவங்கியுள்ளன. இந்தியாவில் யெஸ்டி மாடல்கள் ஜாவா விற்பனை மையங்களை பகிர்ந்து கொள்கிறது. இந்தியா முழுக்க 300 ஜாவா விற்பனை மையங்களில் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

யெஸ்டி ரோட்ஸ்டர் மற்றும் ஸ்கிராம்ப்ளர் மாடல்களில் 334சிசி சிங்கில் சிலிண்டர் 4 ஸ்டிரோக் லிக்விட் கூல்டு டி.ஒ.ஹெச்.சி. என்ஜின் வழங்கப்படுகிறது. ரோட்ஸ்டர் மாடலில் இந்த என்ஜின் 29.7 பி.எஸ். திறன், 29 நியூட்டன் மீட்டர் டார்க் இழவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
யெஸ்டி அட்வென்ச்சர் மாடலில் இந்த என்ஜின் 30.2 பி.எஸ். திறன், 29.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு வாகன விற்பனையில் புது சாதனை படைத்துள்ளது.
ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 8405 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சிறப்பான வருடாந்திர விற்பனையாக அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் லம்போர்கினி வாகன விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளில் 12 சதவீத வளர்ச்சியை லம்போர்கினி பதிவு செய்து இருக்கிறது.

வாகனங்கள் விற்பனையை பொருத்தவரை அமெரிக்காவில் 2472 யூனிட்களும், சீனாவில் 935 யூனிட்களும், ஜெர்மனியில் 706 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் 564 யூனிட்களும், இத்தாலியில் 359 யூனிட்களை லம்போர்கினி விற்பனை செய்துள்ளது.
மாடல்களை பொருத்தவரை உலகம் முழுக்க லம்போர்கினி உருஸ் 5021 யூனிட்கள், ஹரிகேன் 2586 யூனிட்கள், அவென்டெடார் 798 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
கே.டி.எம். இந்தியா நிறுவனம் 2022 250 அட்வென்ச்சர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 2.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய கே.டி.எம். மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு மிக எளிய நிதி சலுகைகள் மற்றும் சிறப்பு மாத தவணை முறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் 2022 கே.டி.எம். அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் ஃபேக்டரி ரேசிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் நிறம் தவிர அம்சங்கள் மற்றும் உபகரணங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

2022 கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலில் 248சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. திறன், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பவர் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கே.டி.எம். மோட்டார்சைக்கிளில் டிரெலிஸ் ஃபிரேம், போல்ட்-ஆன் சப்-ஃபிரேம், அப்சைடு டவுன் ஃபோர்க், மோனோ ஷாக், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 200 எம்.எம். கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடல் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் நேற்று முன்தினம் தனது கோடியக் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான முதல் நாளிலேயே புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் முழுமையாக விற்றுத்தீர்ந்தது. இந்தியாவில் சி.பி.யு. முறையில் கொண்டுவரப்படும் கோடியக் பேஸ்லிப்ட் விலை ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
முன்னதாக இந்த மாடல் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 7 சீட்டர் கோடியக் மாடலில் மேம்பட்ட என்ஜின் மற்றும் புது தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.
காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்த தேதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை ஜனவரி 20, 2022 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் நாட்டின் பல்வேறு விற்பனை மையங்களை வந்தடைந்தது. ஏற்கனவே டொயோட்டா ஹிலக்ஸ் பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பார்ச்சூனர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

புதிய டொயோட்டா ஹிலக்ஸ் எமோஷனல் ரெட், கிரே மெட்டாலிக், வைட் பியல் சி.எஸ்., சில்வர் மெட்டாலிக் மற்றும் சூப்பர் வைட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த மாடல் மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
அறிமுக நிகழ்வை தொடர்ந்து ஹிலக்ஸ் பிக்கப் டிரக் முன்பதிவு ஜனவரி 20 ஆம் தேதியே துவங்க இருக்கிறது. இதன் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் இந்திய சந்தையில் நீண்ட காலம் சோதனை செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் ஜனவரி மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், அக்சஸரீஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மஹிந்திராவின் எண்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடலான கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. ரூ. 61,055 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொலிரோ நியோ மாடலுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மராசோ எம்.பி.வி. மாடலுக்கு ரூ. 40,200 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. அல்டுராஸ் ஜி4 பிளாக்ஷிப் மாடலுக்கு ரூ. 81,500 வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 69,003 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650 சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பிளாக்ஷிப் மாடல்களான இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியது. இரு மாடல்களின் துவக்க விலை தற்போது ரூ. 2,85,970 என மாறி இருக்கிறது.
புதிய விலை விவரம்
காண்டினென்டல் ஜி.டி. 650 பிரிடிஷ் ரேசிங் கிரீன் ரூ. 3,02,780
காண்டினென்டல் ஜி.டி. 650 ராக்கெட் ரெட் ரூ. 3,02,780
காண்டினென்டல் ஜி.டி. 650 வெண்ட்யூரா ஸ்டார்ம் ரூ. 3,11,193
காண்டினென்டல் ஜி.டி. 650 டக்ஸ் டீலக்ஸ் ரூ. 3,11,193
காண்டினென்டல் ஜி.டி. 650 மிஸ்டர் கிளீன் ரூ. 3,26,887

இண்டர்செப்டார் 650 கேன்யான் ரெட் ரூ. 2,85,970
இண்டர்செப்டார் 650 ஆரஞ்சு கிரஷ் ரூ. 2,85,970
இண்டர்செப்டார் 650 வெண்ட்யூரா புளூ ரூ. 2,85,970
இண்டர்செப்டார் 650 பேக்கர் எக்ஸ்பிரஸ் ரூ. 2,94,383
இண்டர்செப்டார் 650 டவுன்-டவுண் டிராக் ரூ. 2,94,383
இண்டர்செப்டார் 650 சன்செட் ஸ்ட்ரிப் ரூ. 2,94,383
இண்டர்செப்டார் 650 மார்க் 2 ரூ. 3,10,001
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இரு மாடல்களிலும் வட்ட வடிவ ஹெட்லைட், ஹாலோஜென் பல்பு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 648சிசி, பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. திறன், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது மற்றொரு புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் 2022 இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் 60 லட்சம் யூனிட்களை எட்டியதாக அறிவித்து இருக்கிறது. 60 லட்சத்து யூனிட் குருகிராம் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
'இந்தியாவில் சுசுகி களமிறங்கி இந்த ஆண்டுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறது. இரண்டாம் அலையின் தாக்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள செமிகண்டக்டர் தட்டுப்பாடு போன்ற சிக்கலான சூழ்நிலைகளிலும் இந்த மைல்கல் எட்டியதில் பெருமை கொள்கிறோம்,' என சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிர்வாக இயக்குனர் சடோஷி யுச்சிடா தெரிவித்தார்.

சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில், அக்சஸ் 125, ஜிக்சர் 250, ஜிக்சர் 150, பர்க்மேன் ஸ்டிரீட் மற்றும் அவெனிஸ் 125 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் ஐந்தாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக உருவெடுத்தது.
முன்னதாக சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி அவெனிஸ் விலை ரூ. 86,700, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அவெனிஸ் மாடல் டி.வி.எஸ். என்டார்க் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
யமஹா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்கூட்டர் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் புதிய ரெட்ரோ ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் யமஹா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்கூட்டர் வட்ட வடிவ ஹெட்லைட், ஓவல் வடிவ டெயில் லைட், இண்டிகேட்டர், மெட்டாலிக் ரக பெயிண்ட், அலாய் வீல் மற்றும் அதிநவீன உபகரணங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
உபகரணங்களை பொருத்தவரை இந்த ஸ்கூட்டரில் செங்குத்தாக பொருத்தப்படும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்புறம் இரட்டை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இரு ஸ்டோரேஜில் ஒன்று யு.எஸ்.பி. சார்ஜர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் போர்க், டுவின் கியாஸ் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது.

யமஹா உருவாக்கி வரும் புதிய ஸ்கூட்டர் 125சி.சி. என்ஜின் கொண்டிருக்குமா அல்லது 110 சி.சி. என்ஜின் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆஸ்டர் மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்டர் மாடல் ரூ. 9.78 லட்சம், எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆஸ்டர் மாடலின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி எம்.ஜி. ஆஸ்டர் எஸ்.யு.வி. விலை தற்போது ரூ. 9.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.73 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எம்.ஜி. ஆஸ்டர் மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதன் 1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் பெறலாம். 1.3 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.






