என் மலர்
பைக்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்
650 சீரிஸ் மாடல்கள் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650 சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பிளாக்ஷிப் மாடல்களான இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியது. இரு மாடல்களின் துவக்க விலை தற்போது ரூ. 2,85,970 என மாறி இருக்கிறது.
புதிய விலை விவரம்
காண்டினென்டல் ஜி.டி. 650 பிரிடிஷ் ரேசிங் கிரீன் ரூ. 3,02,780
காண்டினென்டல் ஜி.டி. 650 ராக்கெட் ரெட் ரூ. 3,02,780
காண்டினென்டல் ஜி.டி. 650 வெண்ட்யூரா ஸ்டார்ம் ரூ. 3,11,193
காண்டினென்டல் ஜி.டி. 650 டக்ஸ் டீலக்ஸ் ரூ. 3,11,193
காண்டினென்டல் ஜி.டி. 650 மிஸ்டர் கிளீன் ரூ. 3,26,887

இண்டர்செப்டார் 650 கேன்யான் ரெட் ரூ. 2,85,970
இண்டர்செப்டார் 650 ஆரஞ்சு கிரஷ் ரூ. 2,85,970
இண்டர்செப்டார் 650 வெண்ட்யூரா புளூ ரூ. 2,85,970
இண்டர்செப்டார் 650 பேக்கர் எக்ஸ்பிரஸ் ரூ. 2,94,383
இண்டர்செப்டார் 650 டவுன்-டவுண் டிராக் ரூ. 2,94,383
இண்டர்செப்டார் 650 சன்செட் ஸ்ட்ரிப் ரூ. 2,94,383
இண்டர்செப்டார் 650 மார்க் 2 ரூ. 3,10,001
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இரு மாடல்களிலும் வட்ட வடிவ ஹெட்லைட், ஹாலோஜென் பல்பு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 648சிசி, பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. திறன், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது மற்றொரு புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் 2022 இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






