என் மலர்

  நீங்கள் தேடியது "Triumph Motorcycles"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மாடலை மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
  • புது மாடலில் ஸ்டைலிங் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

  L மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2023 போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெயிண்ட் மூலம் ஸ்டைலிங் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

  இந்திய சந்தையில் புதிய போன்வில் ஸ்பீடுமாஸ்டர் - ஜெட் பிளாக், சபையர் பிளாக், பியுஷன் வைட் மற்றும் கார்டோவன் ரெட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் ஜெட் பிளாக் மற்றும் கார்டோவன் ரெட் நிறங்கள் சிங்கில் டோன் பினிஷ், சபையர் பிளாக் பியுஷன் வைட் டூயல் டோன் பினிஷ் கொண்டுள்ளது.


  விலை விவரங்கள்:

  - டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் ஜெட் பிளாக் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம்

  - டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் கார்டோவன் ரெட் ரூ. 12 லட்சத்து 18 ஆயிரம்

  -டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் சபையர் பிளாக் பியுஷன் வைட் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரம்

  அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  2023 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் வட்ட வடிவ ஹெட்லேம்ப், க்ரோம் பில்லர் கேப் கொண்ட டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீடர்கள், எக்சாஸ்ட் கேனிஸ்டரில் ஸ்லாஷ் கட் டிசைன், வயர் ஸ்போக் வீல்களை கொண்டுள்ளது.

  இந்த மாடலில் 1200 சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76.9 ஹெச்பி பவர், 106 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்தது.
  • இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள் உள்ளன.

  டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2023 போன்வில் T120 பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  2023 போன்வில் T120 பிளாக் எடிஷன் - சபையர் பிளாக், மேட் சபையர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய பெயிண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஜெட் பிளாக் நிற வேரியண்ட் உடன் இணைகிறது. ஜெட் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 11 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். இதன் சபையர் பிளாக், மேட் சபையர் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  இதன் அம்சங்கள் போன்வில் T120 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இதில் 1200 சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 78.9 ஹெச்.பி. பவர், 105 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

  ஹார்டுவேரை பொருத்தவரை கிராடில் பிரேம், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், முன்புறம் டூயல் டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • இந்த மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

  டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஸ்கிராம்ப்ளர் 900 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முன்னதாக இதே மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் என அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்கிராம்ப்ளர் 900 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

  விலை விவரஙகள்:

  டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 ஜெட் பிளாக் ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம்

  டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 மேட் காக்கி ரூ. 9 லட்சத்து 58 ஆயிரம்

  டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 கார்னிவல் ரெட் மற்றும் ஜெட் பிளாக் ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம்

  அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


  ஜெட் பிளாக் மற்றும் மேட் காக்கி நிறங்கள் மோனோ டோன் பினிஷ் கொண்டுள்ளன. கார்னிவல் ரெட் மற்றும் ஜெட் பிளாக் நிறம் மட்டும் டூயல் டோன் தீம் கொண்டுள்ளது. இது இந்த சீரிசில் விலை உயர்ந்த மாடல் ஆகும். இவை தவிர, ஸ்டைலிங், அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை ஒரே மாதிரி வழங்கப்பட்டுள்ளன.

  ஸ்கிராம்ப்ளர் 900 மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், வயர்-ஸ்போக் வீல்கள், டெயில் செட் மற்றும் ட்வின் பாட் எக்சாஸ்ட் டிசைன் உள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை ஸ்கிராம்ப்ளர் 900 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இது 64.1 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 மாடல் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Triumph  டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான புதிய மோட்டார்சைக்கிள்களை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவுக்கான பொது மேளாலர் ஷோயப் ஃபரூக் உறுதி செய்திருக்கிறார்.

  தற்சமயம் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 14 பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அடுத்த மாதத்தில் மேலும் ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் வரும் வாரங்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

  பி.எஸ். 4 இல் இருந்து பி.எஸ். 6-க்கு மாறும் வழிமுறை அதிக சிக்கல் நிறைந்தது. இதற்கு வாகன உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகளவு முதலீடு அத்தியாவசியமானதாகும். எனினும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மோட்டார்சைக்கிள்களில் பி.எஸ். 6 புகை விதி கட்டாயமாகிறது.  இதன் காரணமாக பெரும்பாலான இந்திய உற்பத்தியாளர்கள் அதிகம் விற்பனையாகும் தங்களது மாடல்களை பி.எஸ்.6 விதிகளுக்கு அப்டேட் செய்துவிட்டு, விற்பனையாகாத மாடல்களின் விற்பனையை அடுத்த ஆண்டு வாக்கில் குறைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த ஆண்டு இதுவரை மட்டும் சுமார் நான்கு மோட்டார்சைக்கிள்களை டிரையம்ப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. 2019 ஸ்டிரீட் ட்வின், 2019 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர், டைகர் 800 எக்ஸ்.சி.ஏ. உள்ளிட்டவை இதுவரை இந்தியாவில் அறிமுகாகி இருக்கிறது. இந்த வரிசையில் விரைவில் 2019 டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 இணையும் என எதிர்பார்க்கலாம்.
  ×