search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிசம்பர் முதல் புதிய விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை அறிமுகம் செய்யும் டிரையம்ப்
    X

    டிசம்பர் முதல் புதிய விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை அறிமுகம் செய்யும் டிரையம்ப்

    இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Triumph



    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான புதிய மோட்டார்சைக்கிள்களை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவுக்கான பொது மேளாலர் ஷோயப் ஃபரூக் உறுதி செய்திருக்கிறார்.

    தற்சமயம் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 14 பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அடுத்த மாதத்தில் மேலும் ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் வரும் வாரங்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

    பி.எஸ். 4 இல் இருந்து பி.எஸ். 6-க்கு மாறும் வழிமுறை அதிக சிக்கல் நிறைந்தது. இதற்கு வாகன உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகளவு முதலீடு அத்தியாவசியமானதாகும். எனினும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மோட்டார்சைக்கிள்களில் பி.எஸ். 6 புகை விதி கட்டாயமாகிறது.



    இதன் காரணமாக பெரும்பாலான இந்திய உற்பத்தியாளர்கள் அதிகம் விற்பனையாகும் தங்களது மாடல்களை பி.எஸ்.6 விதிகளுக்கு அப்டேட் செய்துவிட்டு, விற்பனையாகாத மாடல்களின் விற்பனையை அடுத்த ஆண்டு வாக்கில் குறைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு இதுவரை மட்டும் சுமார் நான்கு மோட்டார்சைக்கிள்களை டிரையம்ப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. 2019 ஸ்டிரீட் ட்வின், 2019 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர், டைகர் 800 எக்ஸ்.சி.ஏ. உள்ளிட்டவை இதுவரை இந்தியாவில் அறிமுகாகி இருக்கிறது. இந்த வரிசையில் விரைவில் 2019 டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 இணையும் என எதிர்பார்க்கலாம்.
    Next Story
    ×