search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்தியாவில் குறைந்த விலை பைக்-ஐ அறிமுகம் செய்த டிரையம்ப்
    X

    இந்தியாவில் குறைந்த விலை பைக்-ஐ அறிமுகம் செய்த டிரையம்ப்

    • டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • எல்இடி லைட்டிங் தவிர இந்த மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது.

    டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X மாடல்களை கடந்த மாதம் அறிவித்த நிலையில், டிரையம்ப் இந்தியா நிறுவனம் ஸ்பீடு 400 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 மாடல் ரெட்ரோ-மாடன் பாடிவொர்க் கொண்டிருக்கிறது.

    இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட், எல்இடி இன்டிகேட்டர்கள், அகலமான ஹேன்டில்பார், நட் வடிவ ஃபியூவல் டேன்க் உள்ளது. இத்துடன் ஒற்றை பீஸ் சீட், டியுபுலர் கிராப் ரெயில், அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்பி பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

    எல்இடி லைட்டிங் தவிர இந்த மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துன் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும்.

    Next Story
    ×