search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இரண்டு 400சிசி மாடல்களை அறிமுகம் செய்த டிரையம்ப் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    இரண்டு 400சிசி மாடல்களை அறிமுகம் செய்த டிரையம்ப் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

    • ஸ்கிராம்ப்லர் 400X மாடல், வழக்கமான ஸ்கிராம்ப்லர் மாடல் போன்று காட்சியளிக்கவில்லை.
    • இரு மாடல்களிலும் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிவித்து இருக்கிறது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் உற்பத்தி இந்தியாவிலேயே நடைபெற இருக்கிறது.

    இரண்டு 400சிசி மோட்டார்சைக்கிள்களும் தோற்றத்தில் மிகவும் புதிதாக காட்சியளிக்கின்றன. அதனிநவீன தோற்றம் கொண்ட இந்த மாடல்களில் ஸ்பீடு 400 மட்டும் ஸ்பீடு டுவின் 900 போன்று காட்சியளிக்கிறது. ஸ்கிராம்ப்லர் 400X மாடல், வழக்கமான ஸ்கிராம்ப்லர் மாடல் போன்று காட்சியளிக்கவில்லை. இதன் சஸ்பென்ஷன் ஸ்பீடு 400 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் ஹேன்ட் கார்டுகள், ஸ்ப்லிட் சீட்கள் மற்றும் வித்தியாசமான எக்சாஸ்ட் உள்ளது. இரு மாடல்களிலும் 398சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்பி பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X மாடல்களில் 43mm பிஸ்டன், 150mm டிராவல், மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், எல்இடி லைட்கள், பார்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.

    டிரையம்ப் ஸ்பீடு 400 மாடல் கார்னிவல் ரெட், கேஸ்பியன் புளூ மற்றும் ஃபேன்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கிராம்ப்லர் 400X மாடல் காக்கி கிரீன், கார்னிவல் ரெட் மற்றும் ஃபேன்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஜூலை 5-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. வினியோகம் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.

    Next Story
    ×