என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

     கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

    நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
    முன்னணி ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் கேமிங் சந்தையில் களமிறங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மொபைல் கேமிங் சந்தையில் களமிறங்கியது. ஏற்கனவே இதுபற்றிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட நிலையில், தற்போது ஐந்து மொபைல் கேம்களை நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வெளியிட்டு உள்ளது. 

    ஐந்து கேம்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய முடியும். கேம்கள் அனைத்தும் நெட்ப்ளிக்ஸ் செயலியின் கேம்ஸ் -- டெடிகேடெட் கேம்ஸ் பிரிவில் தோன்றும். இங்கிருந்து கேம்களை நேரடியாக பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

    கேம்களை விளையாட நெட்ப்ளிக்ஸ் சந்தா மட்டுமே போதுமானது. இதில் விளம்பரங்களோ, கூடுதல் கட்டணமோ, இன் ஆப் பர்சேஸ் என எதுவும் இருக்காது. 

     நெட்ப்ளிக்ஸ் கேம்ஸ்

    நெட்ப்ளிக்ஸ் மொபைல் கேம் பட்டியல்

    - ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 1984
    - ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 3 - தி கேம்
    - ஷூட்டிங் ஹாப்ஸ்
    - கார்ட் பிளாஸ்ட்
    - டீட்டர் அப்

    அனைவருக்கும் ஏற்றவாரு எதையாவது வழங்கும் நோக்கில் அதிக கேம்களை வெளியிட விரும்புவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்த கேம்கள் அனைத்தும் பெரியவர்களுக்கானவை. இதனால் கேம்கள் குழந்தைகளுக்கான ப்ரோபைல்களில் இயங்காது. வரும் மாதங்களில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு அதிக கேம்களை வழங்க இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் தெரிவித்து இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை ஒதுக்க ஐபேட் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் மேற்கொண்ட திட்டத்தில் தற்போது 50 சதவீத ஐபேட் யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஆசிய சந்தைகளில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது, ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளிலும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 13 உற்பத்தி சீராக நடைபெற்று வந்தது. உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் அதிக யூனிட்களை வாங்கும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இது சாத்தியமானது.

     ஐபோன் 13

    வரும் மாதங்களில் ஐபேட் மாடல்களை விட ஐபோன் 13 மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே ஐபோன் 13 உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    வாட்ஸ்அப் செயலியின் புதிய பீட்டா வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வெளியாகி இருக்கின்றன.


    வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.

     மெட்டா

    புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடலில் அதை மாற்ற இதை செய்யுங்கள் என அறிவித்து இருக்கிறது.


    2021 மேக்புக் ப்ரோ மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகப்படியான மாற்றங்களை கொண்டிருக்கும் 2021 மேக்புக் ப்ரோ மாடலில் புதிதாக நாட்ச் வைத்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து நாட்ச் அம்சத்திற்கு ஆன்லைனில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில், புதிய மேக்புக் ப்ரோ மாடலில் நாட்ச்-ஐ மறைக்க ஆப்பிள் புது வழிமுறையை அறிவித்து இருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட செயலியை திறந்ததும், நாட்ச் இடையூறை மறைக்க செயலியை குவிட் செய்ய வேண்டும். பின் 'பைண்டர்' ஐகானை க்ளிக் செய்து, சைடுபாரில் உள்ள 'அப்லிகேஷன்ஸ்' ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

     மேக்புக் ப்ரோ

    இனி செயலியை தேர்வு செய்து, 'பைல்' -- 'கெட் இன்போ' அல்லது 'கமாண்ட்-ஐ' க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து 'இன்போ விண்டோ'வில் 'ஸ்கேல் டு பிட் பிலோ பில்ட்-இன் கேமரா' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும், மேக்புக் ப்ரோவில் உள்ள நாட்ச்-இன் கீழ் குறிப்பிட்ட செயலி கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் மாறிவிடும். இதே முறையை அனைத்து செயலிகளுக்கும் பின்பற்றலாம்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் இந்திய விற்பனை விவரங்ளை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. கூகுள் மற்றும் ஜியோ கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் ரூ. 6,499 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 1,999 மற்றும் 18/24 மாதங்கள் மாத தவணை முறை வசதியுடன் கிடைக்கிறது. 

    மாத தவணை ரூ. 300 இல் இருந்து துவங்குகிறது. இத்துடன் பிராசஸிங் கட்டணம் ரூ. 501 வசூலிக்கப்படுகிறது. மாத தவணை இன்றி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனினை ரூ.6,499 விலையில் வாங்கிட முடியும். ஜியோபோன் நெக்ஸ்ட் நவம்பர் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோமார்ட் டிஜிட்டல் நெட்வொர்க்கின் 30 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோ ஸ்டோர் ஆப்லைன் மையங்களிலும் கிடைக்கும்.

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர்
    - அட்ரினோ 308 ஜி.பி.யு.
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) மற்றும் பிரகதி ஓ.எஸ்.
    - டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 8 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது.


    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 29,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பு ஆப்லைன் சந்தை மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த விலை குறைப்பு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 24,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

    இதே விலை சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாற்றப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிளேசிங் பிளாக் மற்றும் ஐசி புளூ நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வீடியோ கால் செய்யும் போது சுந்தர் பிச்சை செய்த தவறை சுட்டிக்காட்டி, ட்வீட் ஒன்றை அவரே பதிவு செய்து இருக்கிறார்.


    கடந்த ஆண்டு பெருந்தொற்று ஆரம்பித்தது முதல் நண்பர்கள், குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க வீடியோ கால் மட்டுமே ஒற்றை தீர்வாக மாறி போனது. வீடியோ கால் சேவைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஜூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் மீட் மற்றும் பல்வேறு இதர செயலிகள் அசுர வளர்ச்சி பெற்றன.

    வீடியோ காலிங் சேவைகளை அதிகம் சார்ந்து இருக்கும் சூழலில் பலர் இவற்றில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களில் அவ்வப்போது சிக்குவதும் வாடிக்கையாகி இருக்கிறது. இதுபோன்ற சிக்கலில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் சிக்கியிருக்கிறார்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    சமீபத்தில் கெர்மிட் தி பிராக் உடன் நடைபெற்ற நேர்காணலில் சுந்தர் பிச்சை பேசும் போது அன்மியூட் செய்ய மறந்துவிட்டார். பின் அதை கவனித்த சுந்தர் சிரித்தப்படி நேர்காணலை தொடர்ந்தார். இந்த சம்பவத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த சுந்தர் பிச்சை, அனைவரிடமும் அன்மியூட் செய்ய மறக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
    மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது லேப்டாப் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் கல்வி துறைக்கென பிரத்யேகமாக குறைந்த விலை லேப்டாப் மாடலை உருவாக்கி வருகிறது. இந்த லேப்டாப் டென்ஜின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் டிஸ்ப்ளே, இன்டெல் செலரான் என்4120 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு யு.எஸ்.பி. ஏ போர்ட், ஒரு யு.எஸ்.பி. சி போர்ட், ஹெட்போன் ஜாக், பேரெல் ரக ஏ.சி. போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     மைக்ரோசாப்ட் லேப்டாப்

    புதிய டென்ஜின் லேப்டாப் சர்பேஸ் பிராண்டிங்கில் லேப்டாப் எஸ்.இ. பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதில் எஸ்.இ. என்பது ஸ்டூடண்ட் எடிஷன் அல்லது ஸ்கூல் எடிஷன் என்ற விரிவாக்கம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ்2 போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை 8 இன்ச் எல்.டி.பி.ஒ. ஒ.எல்.இ.டி. பேனல், 120 வாட் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், கலர் ஓ.எஸ். 12 உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஒப்போ ஸ்மார்ட்போன் கோப்புப்படம்

    முன்னதாக ஒப்போ நிறுவனம் எதிர்கால அணியக்கூடிய சாதனத்திற்கான காப்புரிமை பெற்று இருந்தது. புதிய தொழில்நுட்பம் வெனஸ் அன்லாக்கிங் மெத்தட் மற்றும் வெயின் அன்லாக்கிங் டிவைஸ் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இது முக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு இணையான பயோமெட்ரிக் சிஸ்டம் ஆகும். எல்.ஜி. நிறுவனமும் இதே போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி அதற்கு ஹேண்ட் ஐ.டி. என பெயர் சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. பின் செப்டம்பரில் விற்பனைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு தீபாவளி பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி ஓ.எஸ். கொண்டிருக்கும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. பிரகதி ஓ.எஸ். இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களை சேர்ந்த தலைசிறந்த குழு இதனை உருவாக்கி இருக்கிறது.

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    இந்த ஓ.எஸ்.-இல் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆட்டோமேடிக் ரீட்-அலவுட், ஆன்-ஸ்கிரீன் எழுத்துக்களை மொழிபெயர்க்கும் வசதி, பில்ட்-இன் கேமரா ஏ.ஆர். பில்ட்டர்கள், ஜியோ மற்றும் கூகுள் செயலிகள் பிரீ-லோட் செய்யப்பட்டு இருக்கும். 

    ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த பிராசஸரில் சிறப்பான கனெக்டிவிட்டி, லொகேஷன் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.
    ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜிடிஏ டிரைலஜி டிபெனிடிவ் எடிஷன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

    ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் ரி-மாஸ்டர் செய்யப்பட்ட கிராண்ட் தெப்ட் ஆட்டோ கேம்களை வெளியிட இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஜிடிஏ 3, ஜிடிஏ வைஸ் சிட்டி மற்றும் ஜிடிஏ சான் ஆண்ட்ரியஸ் போன்ற கேம்கள் புது கிராபிக்ஸ் உடன் அடுத்த மாதம் வெளியாக இருக்கின்றன. 

    இந்த கேம்கள் ஜிடிஏ டிரைலஜி டெபனிடிவ் எடிஷன் பெயரில் நவம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகிறது. ரி-மாஸ்டர் செய்யப்பட்ட ஜிடிஏ கேம்கள் பிளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், பிசி மற்றும் நிண்டென்டோ போன்ற சாதனங்களில் வெளியாகிறது. டிரைலஜியின் டிஜிட்டல் வெர்ஷன் மற்றும் சிடி வெர்ஷன் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.

     ஜிடிஏ டிரைலஜி டெபனிடிவ் எடிஷன்

    அடுத்த ஆண்டு ஜிடிஏ டிரைலஜி மொபைல் சாதனங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் கணினிக்கான ஜிடிஏ டிரைலஜி டிபெனிடிவ் எடிஷன் விலை ரூ. 4994.99 ஆகும். கிராண்ட் தெப்ட் ஆட்டோ 3 வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவை ஒட்டி டிரைலஜி டிபெனிடிவ் எடிஷன் வெளியாகிறது.

    ×