என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    விவோ நிறுவனம் பன்டச் ஓ.எஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.


    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஓ.எஸ். பீட்டா பில்டுகளை வெளியிடும் பணிகளை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் துவங்கி உள்ளன. விவோ நிறுவனம் பன்டச் ஓ.எஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 12 பீட்டா அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் எக்ஸ், வி, வை மற்றும் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கிய அப்டேட்டிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் விவோ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்களும் இடம்பெற்று இருக்கின்றன. 

    விவோ எக்ஸ்70 ப்ரோ பிளஸ் மாடலுக்கு நவம்பர் மாத இறுதியில் புது அப்டேட் வழங்கப்படுகிறது.

     விவோ எக்ஸ்60

    விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ், எக்ஸ்60 ப்ரோ மற்றும் எக்ஸ்60 மாடல்களுக்கு டிசம்பர் இறுதியில் அப்டேட் கிடைக்கும்.

    விவோ எக்ஸ்70 ப்ரோ, வி21இ, வி20 2021, வி20, வை21, வை51ஏ மற்றும் வை31 மாடல்களுக்கு ஜனவரி 2022 வாக்கில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

    விவோ எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50, வி20 ப்ரோ, வி20 எஸ்.இ., வை33எஸ், வை20ஜி, வை53 எஸ் மற்றும் வை12 எஸ் மாடல்களுக்கு மார்ச் 2022 இறுதியில் அப்டேட் கிடைக்கும்.

    விவோ எஸ்1 மற்றும் வை19 மாடல்களுக்கு ஏப்ரல் 2022 துவக்கத்தில் புது அப்டேட் வழங்கப்படுகிறது.

    விவோ வி17 ப்ரோ, வி17, எஸ்1 ப்ரோ, வை73, வை51, வை20, வை20ஐ மற்றும் வை30 ஸ்மார்ட்போன்களுக்கு ஏப்ரல் 2022 இறுதியில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படுகிறது.
    பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின.

    இந்த நிலையில் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் பேஸ்புக்கின் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

     பேஸ்புக்

    அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப வலைதளம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இது பற்றிய கேள்விக்கு யூகங்கள், வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய பெயர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றே இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சுத்தம் செய்ய மென்மையான சிறு துணியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    ஆப்பிள் நிறுவனம் அன்லீஷ்டு 2021 நிகழ்வில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றில் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச், 16 இன்ச் மேக்புக் ப்ரோ, ஏர்பாட்ஸ் 3 போன்ற சாதனங்கள் அடங்கும். விர்ச்சுவல் நிகழ்வு நிறைவுற்றதும் ஆப்பிள் துணி ஒன்றை தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது.

    இந்த துணியை கொண்டு ஐபோன், ஐபேட், மேக்புக், ஏர்பாட்ஸ் மற்றும் இதர ஆப்பிள் நிறுவன சாதனங்களை சுத்தம் செய்ய முடியும். துணிக்கான விவர குறிப்பில் அனைத்து ஆப்பிள் சாதனங்களின் டிஸ்ப்ளேக்கள், நானோ-டெக்ஸ்ச்சர் கிளாஸ் சுத்தம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     பாலிஷிங் துணி

    மென்மையான துணியின் மீது ஆப்பிள் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்தியாவில் இந்த துணியின் விலை ரூ. 1900 ஆகும். இது ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த துணியினை தற்போது சந்தையில் கிடைக்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என ஆப்பிள் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் சாதனங்கள் அப்டேட் செய்யப்பட்டன.


    ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆப்பிள் மியூசிக் சேவையில் துவங்கி, ஏர்பாட்ஸ் 3, மேக்புக் ப்ரோ என புதிய இயர்பட்ஸ், பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

    இத்துடன் ஆப்பிள் வாய்ஸ் பெயரில் புதிய சந்தா முறை அறிவிக்கப்பட்டது. இதில் சிரியை கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை இயக்க முடியும். 

    இத்துடன் ஹோம்பாட் மினி சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகின. அந்த வகையில் ஹோம்பாட் மினி கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை சிறப்பாக இயக்க முடியும். ஹோம்பாட் மினி புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் விலை ரூ. 9,900 ஆகும்.

    ஏர்பாட்ஸ் 3

    ஏர்பாட்ஸ் 3

    ஆப்பிள் நிகழ்வில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் 3 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள புதிய சென்சார்கள் இசையின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    இதில் அடாப்டிவ் இ.கியூ. அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 விலை ரூ. 18,500 ஆகும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் புதிதாக ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் சேர்க்கப்படுவதாக ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.

     எம்1 சீரிஸ் பிராசஸர்

    எம்1 சீரிஸ் பிராசஸர்கள்

    ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ பெயரில் புதிய பிராசஸர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. எம்1 மேக்ஸ் மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதில் அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி, நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 கோர்கள் கொண்ட சிபயு மற்றும் 32 கோர்கள் கொண்ட ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இதன் 16 கோர் நியூரல் என்ஜின் ஒரே நொடியில் பல கோடி செயல்களை புரியும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி யுனிபைடு மெமரி  வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. மேலும் இது 10 கோர் சிபியு மற்றும் 16 கோர் ஜிபியு கொண்டுள்ளது. இந்த பிராசஸரும் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     புதிய மேக்புக் ப்ரோ

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள்

    ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மேஜிக் கீபோர்டு, ஹெட்போன் ஜாக், மேக்சேப் வசதி, ரெட்டினா டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக்புக் ப்ரோ எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ சிப்செட்களுடன் கிடைக்கின்றன. இவை மேக்புக் ப்ரோ மாடல்களில் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான செயல்திறன் வழங்குகின்றன. மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 1080 பிக்சல் பேஸ்டைம் ஹெச்.டி. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த வீடியோ, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர். போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய மேக்புக் ப்ரோ மாடலில் லிக்விட் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். டிஸ்ப்ளே, மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேக் ஓ.எஸ். மான்டெரி மூலம் இயங்கும் புதிய மேக்புக் ப்ரோ அதிகபட்சம் 8 டிபி வரையிலான ஸ்டோரேஜ், அதிகபட்சம் 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மேக்புக் ப்ரோவில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 21 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்குகிறது.

    ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கும் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,94,900 என்றும் ரூ. 2,39,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் விலை ரூ. 2,39,900, ரூ. 2,59,900 மற்றும் ரூ. 3,29,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் வழங்க இருக்கும் இரண்டு புதிய சக்திவாய்ந்த சிப்செட்களை அறிமுகம் செய்தது.


    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சிப்செட்களை அறிமுகம் செய்தது. இவை எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ என அழைக்கப்படுகிறன. எம்1 மேக்ஸ் மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதில் அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி, நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 கோர்கள் கொண்ட சிபயு மற்றும் 32 கோர்கள் கொண்ட ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இதன் 16 கோர் நியூரல் என்ஜின் ஒரே நொடியில் பல கோடி செயல்களை புரியும் திறன் கொண்டிருக்கிறது.

     ஆப்பிள் எம்1 ப்ரோ

    புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி யுனிபைடு மெமரி  வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. மேலும் இது 10 கோர் சிபியு மற்றும் 16 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிராசஸரும் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பாரத் பைபர் மற்றும் டி.எஸ்.எல். சந்தாதாரர்களுக்கு அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது. இதே சலுகை பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    அந்தமான் நிகோபர் தீவுகள் தவிர்த்து நாடு முழுக்க ஒரே கட்டண முறையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பாரத் பைபர் சேவையில் பைபர்-டுஹோம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 449 முதல் துவங்குகிறது.

     கோப்புப்படம்

    நான்கு மாதங்களுக்கான இலவச சேவையை பெற பாரத் பைபர், டி.எஸ்.எல்., லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை வாடிக்கையாளர்கள் ஒரே கட்டமாக 36 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்படி 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 40 மாதங்களுக்கு சேவையை பயன்படுத்தலாம்.

    36 மாதங்கள் மட்டுமின்றி 24 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது மூன்று மாதங்களும், 12 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது கூடுதலாக ஒரு மாதத்திற்கும் இலவச பிராட்பேண்ட் சேவையை பெறலாம். இந்த சலுகையை பெற 1800003451500 என்ற எண்ணிற்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
    வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    இந்தியா முழுக்க இரவு நேரம் வாட்ஸ்அப் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி இரவு 11.30 மணி முதல் காலை 6.00 மணி வரை முடக்கப்படுவதாக வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவலை மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்யவில்லை எனில், பயனர்களின் அக்கவுண்ட்கள் டி-ஆக்டிவேட் செய்யப்படும். டி-ஆக்டிவேட் ஆன வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ இயக்க மாதம் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தகவலை சரியாக மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்வோருக்கு புதிதாக பாதுகாப்பான அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் சார்பிலும் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ளது போன்று வாட்ஸ்அப் இரவு நேரங்களில் முடக்கப்படாது என்பது உறுதியாகிவிட்டது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 18 ஆம் தேதி அன்லீஷ்டு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய எம்1எக்ஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள், புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம். 

    இத்துடன் மேக்ஓ.எஸ். மாண்டெரி பற்றிய விவரங்களும் அறிவிக்கப்படலாம். முன்னதாக இந்த ஓ.எஸ். 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. புதிய எம்1எக்ஸ் 10 சி.பி.யு. கோர்கள் மற்றும் 16 சி.பி.யு. கோர்கள் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. 



    முந்தைய தகவல்களின்படி புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட இண்டஸ்ட்ரியல் டிசைன், அதிக ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்டி கார்டு போர்ட்கள், மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் தள்ளுபடிகளுடன் சிறப்பு விற்பனை நடைபெற்றது.


    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நேற்று (அக்டோபர் 10) நிறைவுற்றது. சிறப்பு விற்பனை மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல்வேறு சாதனைகளை படைத்தது என ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. விற்பனையை வெற்றிபெற செய்ததற்கு வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் நன்றி தெரிவித்தது.

    மேலும் வாரம் முழுக்க நடைபெற்ற சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரூ. 11,500 கோடியை சேமித்துள்ளனர். இதுதவிர விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கினால் ஆயிரம் புர்ஜ் கலிபா கட்டிடங்களை விட உயரமாக இருக்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    சிறப்பு விற்பனையில் மொத்தம் 3.75 லட்சம் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இந்த விற்பனையின் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒரு வாட்ச் விற்பனையாகி இருக்கிறது. ஒரு மணி நேரத்தில் விற்பனையான தேநீர் தூள் கொண்டு 50 லட்சம் கோப்பை தேநீர் போட முடியும். 

    மேலும் 24 மணி நேரத்தில் 1.2 லட்சம் சாக்லேட்கள் விற்பனையாகி இருக்கின்றன. சிறப்பு விற்பனையின் போது விற்ற ஷூ பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கினால் இமய மலையை விட 100 மடங்கு உயரமாக இருக்கும். இதில் விற்பனையான எண்ணெய் கொண்டு 9 லட்சம் பிரென்ச் பிரைஸ் செய்ய முடியும். 

    அமேசான் பிரைம் மாதாந்திர சலுகை சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறது.


    அமேசான் தனது பிரைம் சேவையில் மிகவும் பிரபலான ரூ. 129 மாதாந்திர சலுகையை மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக இந்த சலுகை நீக்கப்பட்டது. 

    இதையடுத்து அமேசான் பிரைம் மூன்று மாதங்கள் மற்றும் வருடாந்திர சலுகைகளை மட்டுமே வழங்கிவந்தது. தற்போது அமேசான் பிரைம் ரூ. 129 மாதாந்திர சலுகை மீண்டும் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதனை பெற அனைத்து மின்னணு பரிவர்த்தனை முறைகளையும் பயன்படுத்த முடியாது.

     அமேசான் பிரைம்

    முன்பை போன்று இல்லாமல், அமேசான் பிரைம் ரூ. 129 சலுகையை கிரெடிட் கார்டு அல்லது தேர்வு செய்யப்பட்ட டெபிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்ய முடியும். ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வங்கிகள் மூலமாகவே ரூ. 129 சலுகையை பெற முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது.

    ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்குகிறது.


    ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்' எனும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் கொண்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். 

    இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ. 249 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், முழு கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரம் அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

     ஏர்டெல் சலுகை

    இந்த சலுகை அதிகபட்சம் 150 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பொருந்தும் என ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் தொகை இருவழிகளில் வழங்கப்படுகிறது. 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் முதல் தொகையாக ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படும். 

    மீதமுள்ள ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் வழங்கப்படும். இந்த சலுகை பற்றிய முழு விவரங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போன சில மணி நேரங்களில் டெலிகிராம் செயலி கோடிக்கணக்கில் புது பயனர்களை பெற்று இருக்கிறது.


    பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் உலகம் முழுக்க சுமார் 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக பேஸ்புக் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது. பேஸ்புக் சேவைகள் முடங்கிய சில மணி நேரங்களில் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாளராக இருக்கும் டெலிகிராம் புதிய பயனர்கள் எண்ணிக்கையில் திடீர் வளர்ச்சியை பதிவு செய்தது. 

    வாட்ஸ்அப் இயங்காத காரணத்தால், டெலிகிராம் செயலியை பலர் இன்ஸ்டால் செய்ய துவங்கினர். இதன் காரணமாக சில மணி நேரங்களில் டெலிகிராம் சேவையில் சுமார் 7 கோடி பேர் புதிதாக இணைந்தனர். 

     வாட்ஸ்அப்

    மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக பயனர்கள் இன்ஸ்டால் செய்த போதும், டெலிகிராம் புதிய பயனர்களால் ஏற்பட்ட திடீர் நெரிசலையும் கச்சிதமாக கையாண்டது என டெலிகிராம் நிறுவனர் பவேல் டுரோவ் தெரிவித்தார். அமெரிக்காவில் மட்டும் செயலி இன்ஸ்டால் ஆக சற்று நேரம் ஆனது.

    ×