search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோபோன் நெக்ஸ்ட்
    X
    ஜியோபோன் நெக்ஸ்ட்

    பிரகதி ஓ.எஸ்.உடன் விரைவில் விற்பனைக்கு வரும் ஜியோபோன் நெக்ஸ்ட்

    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. பின் செப்டம்பரில் விற்பனைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு தீபாவளி பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி ஓ.எஸ். கொண்டிருக்கும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. பிரகதி ஓ.எஸ். இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களை சேர்ந்த தலைசிறந்த குழு இதனை உருவாக்கி இருக்கிறது.

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    இந்த ஓ.எஸ்.-இல் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆட்டோமேடிக் ரீட்-அலவுட், ஆன்-ஸ்கிரீன் எழுத்துக்களை மொழிபெயர்க்கும் வசதி, பில்ட்-இன் கேமரா ஏ.ஆர். பில்ட்டர்கள், ஜியோ மற்றும் கூகுள் செயலிகள் பிரீ-லோட் செய்யப்பட்டு இருக்கும். 

    ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த பிராசஸரில் சிறப்பான கனெக்டிவிட்டி, லொகேஷன் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×