என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களின் சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனம் மூன்றே நாட்களில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்று இருக்கிறது. சியோமியின் எம்.ஐ. வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகை விற்பனையால் இது சாத்தியமானது என சியோமி தெரிவித்து இருக்கிறது.
அமேசான் தளத்தில் விற்பனையான பத்து டிவிக்களில் எட்டு மாடல்கள் எம்.ஐ. மற்றும் ரெட்மி பிராண்டை சேர்ந்தவை ஆகும். ரெட்மி டிவி எக்ஸ் 50 இன்ச், எம்ஐ டிவி 4ஏ 32 இன்ச் மற்றும் எம்ஐ டிவி 5எக்ஸ் 43 இன்ச் மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

தற்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களுக்கு ரூ. 3500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எம்ஐ டிவி 5எக்ஸ் சீரிஸ் மாடலுக்கு ரூ. 3 ஆயரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என பல்வேறு செயலிகளை நிர்வகித்து வருகிறது. உலகம் முழுக்க பேஸ்புக் சேவையை சுமார் 285 கோடி வாடிக்கையாளர்களும், வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமை சுமார் 138 கோடி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 4) இரவு 9 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கின. சேவை முடங்கியதை அறியாத பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டது என நினைத்து பல்வேறு செட்டிங்களை மாற்றி சோதனை செய்தனர். பலர் செயலிகள் இயங்காததை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின் சில நிமிடங்களில் சர்வர் டவுன் எனும் ஹேஷ்டேக் ட்விட்டரை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் வலைதளம் முடங்கி இருப்பதாக அறிவித்தது. இதே போன்று மற்ற தளங்களும் இந்த தகவலை வெளியிட்டன.
‘முடங்கிய சேவை திரும்ப செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விரைவில் சரியாகி விடும்’ என பேஸ்புக் அறிவித்தது. எனினும், நீண்ட நேரம் இந்த பிரச்சினை சரியாகவே இல்லை. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சேவைகள் சரியாகின. உலகம் முழுக்க சுமார் 7 மணிநேரம் இதன் சேவைகள் முடங்கி, பின் செயல்பாட்டுக்கு வந்தது.
7 மணிநேர முடக்கத்தால் பேஸ்புக் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவின் நாஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 700 கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் மீண்டும் சரியாகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எந்தளவு நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்’ என மார்க் சூக்கர்பர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி ஐபோன் மாடல் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் 2021 சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கியது.
சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 12 மினி மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் தற்போது ரூ. 38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் ஐபோன் 12 மினி ரூ. 59,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பு விற்பனையில் ஐபோன் 12 மினி 128 ஜிபி விலை ரூ. 43,999 என்றும் 256 ஜிபி விலை ரூ. 53,999 என்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பு காரணமாக தற்போது மிக குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஐபோன் மாடலாக ஐபோன் 12 மினி இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மினி தற்போது ரூ. 69,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாங்கும் இந்திய பயனர்களுக்கு ஏர்பாட்ஸ்-ஐ இலவசமாக வழங்குகிறது.
ஆப்பிள் இந்தியா நிறுவனம் ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோருக்கு மட்டும் பொருந்தும். மேலும் இது அக்டோபர் 7 ஆம் தேதி துவங்குகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து ஐபோன் 12 மினி விலை ரூ. 59,900 என துவங்குகிறது. ஐபோன் 12 விலை ரூ. 65 ஆயிரம் என துவங்குகிறது. இந்தியாவில் ஏர்பாட்ஸ் விலை ரூ. 14,900 ஆகும்.

முன்னதாக ஆப்பிள் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கியது. இந்த சலுகை கல்வி சலுகையின் அங்கமாக வழங்கப்பட்டது.
நார்டு 2 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்பட்ட வார்ப் சார்ஜர் வெடித்ததற்கான காரணத்தை ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகளை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. ஒன்பிளஸ் நார்டு பயன்படுத்துவோரில் சிலர், தங்களின் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில், ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ஒன்பிளஸ் நார்டு 2 வார்ப் சார்ஜர் வெடித்து சிதறியது. இந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. ஸ்மார்ட்போனை சார்ஜருடன் இணைத்த சில நிமிடங்களிலேயே சார்ஜர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒன்பிளஸ் நிறுவனத்தை ட்விட்டரில் தொடர்பு கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒன்பிளஸ், மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சார்ஜர் வெடித்து சிதறியது என தெரிவித்து இருக்கிறது. தற்போது வெடித்து சிதறிய சார்ஜருக்கு மாற்றாக ஒன்பிளஸ் சார்பில் வேறு சார்ஜர் கொடுக்கப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1 கொண்டிருக்கும் கேலக்ஸி எப்42 5ஜி பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மாப்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி மேட் பிளாக் மற்றும் மேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி விலை முறையே ரூ. 20,999 மற்றும் ரூ. 22,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 17,999 மற்றும் ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அக்டோபர் 2 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டுடியோ 3 லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த வயர்லெஸ் ஹெட்போன் பிரிட்டன் நாட்டு வடிவமைப்பாளர் சாமுவேல் ராஸ் நிர்வகிக்கும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் ஹெட்போன் ஏ-கோல்டு-வால் (A-COLD-WALL) பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹெட்போன் ஸ்லேட் நிற பேலெட் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் இந்த ஹெட்போன் 2017 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட பீட்ஸ் ஸ்டுடியோ 3 போன்றே காட்சியளிக்கிறது. இதில் பீட்ஸ் நிறுவனத்தின் பியூர் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் மற்றும் ஆப்பிள் டபிள்யூ1 சிப் வழங்கப்பட்டு உள்ளது.

பீட்ஸ் ஸ்டுடியோ 3 வயர்லெஸ் ஏ-கோல்டு-வால் லிமிடெட் எடிஷன் மாடல் விலை 349.95 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஹெட்போன்களின் சர்வதேச விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடலில் குவால்காம் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்களின் விற்பனை பல்வேறு நாடுகளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 ப்ரோ டியர்டவுன் வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஐபோன் 13 ப்ரோ மாடலில் 3095 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 12 ப்ரோவில் வழங்கப்பட்ட 2815 எம்.ஏ.ஹெச். பேட்டரியை விட அதிகம் ஆகும். அதிக திறன் இருப்பதால் ஐபோன் 13 ப்ரோ முந்தைய மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது.

ஐபோன் 13 ப்ரோ மாடலில் உள்ள பேட்டரி எல் வடிவம் கொண்டிருக்கிறது. மேலும் இதனை சன்வுடா எலெக்ட்ரிக் கோ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இத்துடன் புதிய ஐபோனில் சாம்சங் வழங்கிய 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் குவால்காம் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கியது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களின் விற்பனை இன்று துவங்கியது. இன்று காலை 8 மணிக்கு இந்திய சில்லறை விற்பனை மையங்களில் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியது.
சில்லறை விற்பனை மையங்கள் மட்டுமின்றி முன்னணி ஆன்லைன் வலைதளங்களிலும் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் 30-க்கும் அதிக நாடுகளில் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கி இருக்கிறது.

புதிய ஐபோன்கள் இந்திய விலை விவரம்
இந்தியாவில் ஐபோன் 13 128 ஜிபி விலை ரூ. 79,900 என துவங்குகிறது. இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடல்கள் விலை முறையே ரூ. 89,900 மற்றும் ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 13 ப்ரோ 128 ஜிபி விலை ரூ. 1,19,900, 256 ஜிபி விலை ரூ. 1,29,900, 512 ஜிபி ரூ. 1,49,900, 1 டிபி ரூ. 1,69,900 ஆகும்.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி விலை ரூ. 1,29,900, 256 ஜிபி ரூ. 1,39,900, 512 ஜிபி ரூ. 1,59,900 மற்றும் 1 டிபி விலை ரூ. 1,79,900 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி ரூ. 69,900, 256 ஜிபி ரூ. 79,900 மற்றும் 512 ஜிபி ரூ. 99,900 ஆகும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஜி20 டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி20 டேப்லெட் மாடலை செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் 8 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு, மெட்டல் டிசைன், டால்பி அட்மோஸ் மற்றும் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

இதன் அம்சங்கள் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவோ டேப் எம்8 மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் மாடல்களுக்கான புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 749 விலையில் புதிய ஜியோபோன் ஆல்-இன்-ஒன் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. முன்னதாக ஜியோபோன் ரூ. 39 மற்றும் ரூ. 69 விலை சலுகைகள் நீக்கப்பட்டு ரூ. 75 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது.
புதிய 336 நாட்கள் சலுகை 28 நாட்கள் என 12 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி இந்த சலுகையில் மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்பவர்களும் இந்த சலுகையை பெறலாம். மற்ற பலன்களுடன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான இலவச சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ஜியோபோனிற்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சலுகை ஆகும்.
கூகுள் நிறுவனம் பிக்சல் பிராண்டிங்கில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலாமாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கூகுளின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போன் பாஸ்போர்ட் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த மாடல் 2021 ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேல் இந்த ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போன் எல்.டி.பி.ஒ. ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, அன்டர் டிஸ்ப்ளே கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் சாம்சங் கேலக்ஸி போல்டு சீரிஸ் மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.






