என் மலர்
தொழில்நுட்பம்

பி.எஸ்.என்.எல்.
4 மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பாரத் பைபர் மற்றும் டி.எஸ்.எல். சந்தாதாரர்களுக்கு அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது. இதே சலுகை பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
அந்தமான் நிகோபர் தீவுகள் தவிர்த்து நாடு முழுக்க ஒரே கட்டண முறையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பாரத் பைபர் சேவையில் பைபர்-டுஹோம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 449 முதல் துவங்குகிறது.

நான்கு மாதங்களுக்கான இலவச சேவையை பெற பாரத் பைபர், டி.எஸ்.எல்., லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை வாடிக்கையாளர்கள் ஒரே கட்டமாக 36 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்படி 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 40 மாதங்களுக்கு சேவையை பயன்படுத்தலாம்.
36 மாதங்கள் மட்டுமின்றி 24 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது மூன்று மாதங்களும், 12 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது கூடுதலாக ஒரு மாதத்திற்கும் இலவச பிராட்பேண்ட் சேவையை பெறலாம். இந்த சலுகையை பெற 1800003451500 என்ற எண்ணிற்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
Next Story






