என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.
உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் கொண்டு உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உபெர் செயலியை இன்ஸ்டால் செய்யாதவர்களும் உபெர் ரைடுகளை முன்பதிவு செய்யலாம்.
உபெர் செயலியில் மேற்கொள்ளப்படும் பயனாளர் பதிவு, ரைடு முன்பதிவு, பயணத்திற்கான ரசீது உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என உபெர் இந்தியா தெரிவித்துள்ளது. உலகளவில் இதுபோன்ற வசதி முதல்முறையாக இந்தியாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விரைவில் டெல்லியில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதன்பின் நாடு முழுக்க பல்வேறு நாகரங்களில் இந்த அம்சம் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த அம்சம் ஆங்கில மொழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் பல்வேறு மொழிகளில் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடல் புது ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 பேன் எடிஷன் (எப்.இ.) அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போனின் புது ரெண்டர்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
புதிய ரெண்டர்களின் படி கேலக்ஸி எஸ்21 எப்.இ. நான்கு நிறங்களில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரோப்பாவில் இதன் விலை 660 யூரோக்கள் மற்றும் 705 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்படலாம்.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 6.41 இன்ச் அமோலெட் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1 வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. செல்பி கேமரா, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஜாக் டார்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான பராக் அகர்வால் அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியரான பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.-யில் படித்தவர் ஆவார்.
"நிறுவனர்களிடம் இருந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நிறுவனம் தயாராகி விட்டதால், நான் ட்விட்டரில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன். ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பராக் மிகச்சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் இவரின் பணி அபாரமாக இருந்துள்ளது. இது அவர் தலைமை வகிப்பதற்கான நேரம்," என ஜாக் டார்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Deep gratitude for @jack and our entire team, and so much excitement for the future. Here’s the note I sent to the company. Thank you all for your trust and support 💙 https://t.co/eNatG1dqH6pic.twitter.com/liJmTbpYs1
— Parag Agrawal (@paraga) November 29, 2021
பராக் அகர்வால் 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியாக பதவியேற்றார். முன்னதாக இவர் யாஹூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏ.டி. அண்ட் டி லேப்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை திடீரென உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்தும் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கட்டணங்களை விட குறைவாகவே இருக்கிறது.
புதிய விலை உயர்வை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை துவக்க விலை ரூ. 91 ஆக மாறி இருக்கிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை விலை 21.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகை விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 155 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சலுகை விலை ரூ. 179 என துவங்குகிறது. இந்த பிரீபெயிட் சலுகைகள் சந்தையில் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது. புதிய விலை டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை மாற்றியமைத்து இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது. தற்போது ஏர்டெல் பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் விலை ரூ. 99 முதல் துவங்குகின்றன. முன்னதாக ஏர்டெல் தனது ரூ. 49 சலுகையை நீக்கியது. இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படவில்லை.
எஸ்.எம்.எஸ். பலன்கள் அடங்கிய சலுகை கட்டணங்கள் தற்போது ரூ. 179 முதல் துவங்குகின்றன. முன்னதாக இந்த சலுகை விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 219 சலுகையின் விலை தற்போது ரூ. 265 என மாறி இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல பிரீபெயிட் சலுகையான ரூ. 598 சலுகை கட்டணம் தற்போது ரூ. 719 என மாறி இருக்கிறது. இதில் பயனர்கள் 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா பெற முடியும். மற்ற பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய விலை பட்டியல் நவம்பர் 26 ஆம் தேதி அமலுக்கு வரும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இதுவரை சலுகை கட்டணங்கள் விலையை உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
யூடியூப் ஷார்ட்ஸ் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ரியல்மியின் புதிய ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கெண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடலில் எல்.பி.டி.டி.ஆர்.5 ரேம், யு.எப்.எஸ். 3.1 பிளாஷ் மெமரி, 6.51 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா சென்சார்கள், முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆட்டோபோக்கஸ், ஓ.ஐ.எஸ். மற்றும் இ.ஐ.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் தங்களின் ஐபோனை தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.
இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது.

முதலில் பயனர்களுக்கு ரிப்பேர் மேனுவல் வழங்கப்படும். இதனை வாசித்து சாதனத்தை சரி செய்யும் நம்பிக்கை பயனருக்கு ஏற்படும் பட்சத்தில், அவர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்களை வாங்க முன்பதிவு செய்யலாம். சரி செய்த பின் பாழாகி போன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய பயனர்கள் ஆப்பிளிடம் திரும்ப வழங்கலாம்.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய வைக்க ஆப்பிள் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 தனித்தனி உதிரிபாகங்களை வாங்கிட முடியும். ஐபோனை தொடர்ந்து எம்1 மேக் மாடல்களை சரிசெய்யும் வசதியையும் ஆப்பிள் வழங்க இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடல் அதிரடி தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. புதிய ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து பழைய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விலை பண்டிகை காலக்கட்டத்தின் போது அதிரடியாக குறைக்கப்பட்டன.
அதிக விலை காரணமாக ஐபோன் 13 மாடலை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில், புதிய ஐபோன் 13 வாங்க சரியான நேரம் வந்துள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் ரூ. 24 ஆயிரம் வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஆப்பிள் விற்பனையாளரான ஐஸ்டோர் இந்தியா ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மாத தவணையில் ஐபோனை வாங்குவோருக்கும் வழங்கப்படுகிறது.
இத்துடன் பழைய ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். அந்த வகையில் ஐபோன் 13 மாடலை கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை சேர்த்து ரூ. 55,900 விலையில் வாங்கிடலாம்.
பொறியியல் மாணவர் மறு உருவாக்கம் செய்த ஐபோன் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் மாடல் 80 ஆயிரத்து 1 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 59,51,074) விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பொறியியல் மாணவர் ஒருவர் பழைய ஐபோன் எக்ஸ் மாடலை மறுஉருவாக்கம் செய்து அதில் யு.எஸ்.பி. சி போர்ட்-ஐ பொருத்தினார்.
நல்ல வேளையாக ஐபோனும் ஆப்பிள் தயாரித்ததை போன்றே சரியாக இயங்குகிறது. மாணவர் முயற்சியில் யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் என்ற பெருமையுடன், இந்த மாடல் ஏலத்தில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. முன்னதாக இதுபோன்ற மாடிபிகேஷன்கள் பலமுறை ஐபோன்களில் செய்யப்பட்டு இருக்கின்றன.

எனினும் பாஸ்ட் சார்ஜிங், டேட்டா டிரான்ஸ்பர், ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர அம்சங்களை இதுவரை யாரும் வெற்றிகரமாக மாற்றியமைக்கவில்லை. அந்த வரிசையில், யு.எஸ்.பி. சி மாட் கொண்ட இந்த ஐபோன்- டேட்டா டிரான்ஸ்பர், பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இதர பயன்களை வழங்குகிறது. தோற்றத்திலும் இந்த ஐபோனில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை.
பார்ப்பதற்கும் இது வழக்கமான ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. சி போர்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. "யு.எஸ்.பி. சி ஐபோனினை ஆப்பிள் வெளியிட காத்திருந்தேன். பொருத்தவரை போதும் என நினைத்து எனக்கென நானே ஒன்றை உருவாக்கி கொண்டேன்," என பொறியியலில் முதுகலை பட்டம் பயின்று வரும் கென் பிலோயல் தெரிவித்தார்.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 500 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
தற்போது இதன் தினசரி டேட்டா அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இதே விலை கொண்ட சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது.

கூடுதல் டேட்டாவினை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதே சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் டிரையல் ஒரு மாதத்திற்கும், ஷா அகாடமி சந்தா ஒரு வருடத்திற்கும், இலவச ஹலோ டியூன் சந்தா, வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.
அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.






