என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
இன்ஸ்டாகிராம் சேவையில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் அனைவரிடமும் பிறந்த தேதி விவரங்களை பதிவிட அந்நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
செயலியை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி விவரங்களை பதிவிடக் கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் அறிவிப்பு வெளியான எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இதனை செயல்படுத்த துவங்கி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்ய இன்ஸ்டாகிராம் முடிவு செய்துள்ளது. பிறந்த தேதி விவரங்களை கொண்டு ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கவும் இன்ஸ்டாகிராம் திட்டமிட்டிருக்கலாம்.

புதிய திட்டத்தை செயல்படுத்த இன்ஸ்டாகிராம் தரவுகளை பார்க்க முயற்சிக்கும் போது இடையில் பிறந்த தேதி விவரங்களை பதிவிட வலியுறுத்திகிறது. மேலும் இந்த ஆப்ஷனை நிராகரித்து விட்டு செயலியை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.
"இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன்பாக, இந்த அக்கவுண்ட் ஏதேனும் வியாபாரம் அல்லது பெட் சார்ந்து இருந்தாலும் பிறந்த தேதியை வழங்க வேண்டும்," என்பதை திரிவிக்கும் திரை இன்ஸ்டாகிராமில் குறுக்கிடுகிறது. "இதன் மூலம் இளம் சமுதாயத்தினரை பாதுகாக்க முடியும். மேலும் உங்களின் பிறந்த தேதியை வைத்துக் கொண்டு விளம்பரங்கள் உள்பட, உங்களின் அனுபவத்தை மேம்படுத்துவோம். இது உங்களின் பொது ப்ரோபைலின் அங்கமாக இருக்காது," என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.
கூகுள் குரோம் பிரவுசரில் ஏற்பட்டுள்ள புது பாதுகாப்பு குறைபாடு, அதில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்ற விவரங்களை பார்ப்போம்.
சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-IN வெளியிட்டுள்ள தகவல்களில் அதிக பிழைகள் நிறைந்த கூகுள் குரோம் வெர்ஷன்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மென்பொருளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக CERT-IN தெரிவித்து உள்ளது. இந்த பிழை காரணமாக ஹேக்கர்கள் ஆர்பிடரி குறியீடுகளை பயன்படுத்தி பயனரின் மிக முக்கிய தகவல்களை அபகரிக்க முடியும். ஹேக்கர் பாதுகாப்பு தடைகளை எதிர்கொண்டு, பஃபர் ஓவர்ஃபுளோ செய்ய முடியும்.
இந்த குறைபாட்டில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41-க்கு அப்டேட் செய்வது அவசியம் ஆகும். இதற்கு முன் வெளியான வெர்ஷன்களை ஹேக்கர்கள் எளிதில் குறிவைத்து மிக முக்கிய தகவல்களை அபகரித்து விட முடியும். இந்த குறைபாடுகள் இருப்பது பற்றி கூகுள் நிறுவமும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அவற்றை பட்டியலிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 8 மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து புதிய வாட்ச் மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக மார்க் குர்மான் வெளியிட்ட தகவல்களில் புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் உடல் வெப்பநிலையை கண்டறியும் சென்சார் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது மிங் சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் தனது புதிய வாட்ச் மாடலில் உடல் வெப்பநிலையை கண்டறியும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த வசதியை முந்தைய ஆப்பிள் வாட்ச் 7 மாடலிலேயே வழங்க ஆப்பிள் முயற்சி செய்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் இதனை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த ஆண்டு அறிமுகமாகும் வாட்ச் மாடலில் இந்த அம்சம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களால் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 கொண்டு உடலின் வெப்ப நிலையை கண்டறிந்து கொள்ள முடியும். இது தெர்மோமீட்டர் போன்று செயல்பட்டு பயனருக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை தெரிவிக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபோன் 14 வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்து இருக்கிறது. இதில் மின்சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் Fab Grab Fest பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்தஉ இருக்கிறது. ஒரு வாரம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் டிஜிட்டல் சாதனங்கள், கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள், டேப்லெட்கள், லேப்டாப், அக்சஸரீக்கள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களுக்கு ஏராளமான சலுகைகள், கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
நேற்று (மே 1) தொடங்கிய சிறப்பு விற்பனை மே 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து சலுகைகளும் சாம்சங் வலைதளம்,ஸ சாம்சங் ஸ்டோர்களில் கிடைக்கும்.
சலுகை விவரங்கள்:
- சாம்சங் டி.வி.க்களை வாங்கும் போது அதிகபட்சம் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை நியோ QLED டி.வி., மற்றும் கிரிஸ்டல் 4K UHD டி.வி மாடல்களுக்கும் அடங்கும்.
- சாம்சங் நிறுவனத்தின் அனைத்து விதமான டிஜிட்டல் சாதனங்களுக்கும் 57 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. விண்ட்-ஃபிரீ ஏ.சி., டுவின் கூலிங் பிளஸ் டபுள் டோர் குளிர்சாதன பெட்டி, கர்ட் மேஸ்ட்ரோ டபுள் டோர் குளிர்சாதன பெட்டி மற்றும் ஏ.ஐ. இகோ பபுள் வாஷிங் மெஷின்கள் வழங்கப்படுகின்றன.
- சாம்சங் ஷாப் ஆப் மூலம் பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ. 4 ஆயிரத்து 500 வரை சேமிக்க முடியும். ஸ்மார்ட்போன், டேப்லெட், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் அக்சஸரீக்களுக்கு 50 சதவீத வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- சாம்சங் கேலக்ஸி புக் 2 லேப்டாப் மாடலுக்கு 16 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வங்கி சலுகைகள்:
இத்துடன் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சார்ந்த சலுகைகளை வழங்க சாம்சங் நிறுவனம் பல்வேறு தனியார் வங்கிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது.
கூகுள் நிறுவனம் பயனர் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் தனது தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் செய்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றியமைத்து உள்ளது. இதன் மூலம் பயனர்கள் இனி தங்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் சர்ச் ரிசல்ட்களில் இருந்து நீக்க கூகுள் நிறுவனத்திடம் வலியுறுத்த முடியும். பயனர்கள் இனி தங்களின் மொபைல் போன் நம்பர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை (PII - personally identifiable information) சர்ச் என்ஜின் ரிசல்ட்களில் இருந்து நீக்க வலியுறுத்த முடியும்.
புதிய கூகுள் பிரைவசி பாலிசி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. PII போன்ற வழிமுறைகளை பின்பற்றி தனிப்பட்ட தகவல்களை திருடுவது, கண்காணிப்பது மற்றும் பணத்தை அபகரிப்பது போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்த முடியும்.

முன்னதாக பயனர்கள் கூகுள் நிறுவனத்திடம் தங்களின் தகவல்களை நீக்கக் கோரும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், இது முகவரி நம்பர், வங்கி விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவ குறிப்புகளோடு நிறுத்தப்பட்டு விட்டன. கூகுள் பிளே ஸ்டோரிலும் பாதுகாப்பு செக்ஷனை கூகுள் உருவாக்கி இருக்கிறது.
கூகுள் மேற்கொண்டு இருக்கும் புதிய நடவடிக்கை தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சார்ந்த பிரச்சினைகளை பெருமளவு தவிர்க்க வழி செய்யும். முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் நம்பர்கள் மட்டுமின்றி லாக் இன் விவரங்களையும் பாதுகாக்க முடியும். பயனர்கள் தங்களின் PII அடங்கிய இணைய முகவரிகளை நீக்கும் வழிமுறைகளை கூகுள் சப்போர்ட் வலைப்பக்கத்திற்கு சென்று மேற்கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் பேமண்ட் சேவையை பயன்படுத்தும் போது கேஷ்பேக் பலன்களை வழங்குகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைக்க அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ காப்பரேட் சப்போர்ட் வலைப்பக்கத்தில் கேஷ்பேக் பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது. வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால், ரூ. 11 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, வாட்ஸ்அப் நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்து இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு முதல் பேமண்ட் சேவையை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

குறைந்தபட்சம் 30 நாட்களாக பேமண்ட் சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை வாட்ஸ்அப் முதற்கட்டமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்குவதற்கான சோதனையை வாட்ஸ்அப் இந்தியாவில் நடத்தியது.
கேஷ்பேக் சலுகையின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் மொபைல் பேமண்ட் சந்தையில் ஆழமாக கால்பதிக்க முடியும். இந்த சந்தையில் தற்போது கூகுள் பே மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் போன்பெ போன்ற சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை வாடகைக்கு விடும் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.
ஆன்லைனில் திரைப்படங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் வழங்கி வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் போன்று திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சந்தாதாரர்களுக்கு வழங்காமல், அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் பயனர்களை குறிப்பிட்ட திரைப்படத்தை குறுகிய காலக்கட்டதிற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் வாடகைக்கு எடுக்கப்படும் திரைப்படம் 30 நாட்களுக்கு அப்படியே இருக்கும். எனினும், தரவுகளை பார்க்க துவங்கினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமே அவை இருக்கும். 48 மணி நேரத்திற்கு பின் திரைப்படத்தை பார்க்க விரும்பினால், மீண்டும் அதனை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

4K ரெசல்யூஷன்:
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோரில் திரைப்படம் ஒன்றை UHD (4K) HD (1080/720p) மற்றும் SD (480p) ரெசல்யூஷனில் வாடகைக்கு எடுக்க ரூ. 499 கட்டணமாக நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. சற்றே குறைந்த ரெசல்யூஷன் அல்லது எஸ்.டி. தரவுகளை வாடகைக்கு எடுக்கும் போது குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் பேட்மேன் திரைப்படத்திற்கு ரூ. 499 வாடகை வசூலிக்கப்படுகிறது. இதே போன்று ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் ரூ. 99 விலையிலும், தி மேட்ரிக்ஸ் ரிசரக்ஷன் ரூ. 149 விலையில் வாடகைக்கு கிடைக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை UHD தரத்தில் வாடகைக்கு எடுக்கும் போது, பயனரின் சாதனம் Copy Protection (HDCP)-Compliant Display சான்று பெற்றிருக்க வேண்டும். இது இல்லாத பட்சத்தில் தரவுகள் SD தரத்திலேயே ஸ்டிரீம் செய்யப்படும். திரைப்படங்களை வாடகைக்கு எடுப்போர் அதற்கான கட்டணத்தை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளலாம்.
முன்னணி பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்யும் ஜெப்ரானில்க்ஸ் நிறுவனம் தனது #ZebronicsForLife பிரச்சாரத்துடன் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஆடியோ சாதனங்களுக்கான விளம்பரத் தூதராக ஜான்வி கபூரை அறிமுகம் செய்துள்ளது.
முன்னணி பாலிவுட் பிரபலமான ஜான்வி கபூர் அவரின் உற்சாக தன்மை, கச்சித நளினம் மற்றும் அவர் செல்லும் இடங்களில் அவர் உண்டாக்கும் உயிர்ப்புத் தன்மை போன்றவற்றிற்காக அடையாளம் காணப்படுகிறார். இது ஜெப்ரானிக்ஸ் வழங்கும் புதுயுக தயாரிப்புகளை கச்சிதமாக பிரதிபலிக்கிறது.
“நான் ஜெப்ரானிக்ஸ்-இன் பிரதிநிதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தனித்துவமான அம்சங்கள், உயர்தர கட்டமைப்பு மற்றும் வசீகரிக்கும் வடிவமைப்புடன் ஒலி சார்ந்த மற்றும் அணியக்கூடிய சாதனங்களை நிறுவனம் வழங்குகிறது. என்னுடன் மிக நெருக்கமாக தொடர்புடைய இன்னொரு விஷயம் என்னவென்றால், தயாரிப்புகள் அடிக்கடி மேம்படுத்தப்படுகின்றன.”
“எந்தத் துறையிலும், நீங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து உங்கள் திறமையை நீங்களே வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த நிறுவனம் அதற்கும் மேலாகவே செய்கிறது. உங்களை தனித்துவமாகக் காட்டும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட இத்தனை வகையான தேர்வுகள், வண்ணங்கள் மற்றும் வகைகள் உங்களுக்குத் தேர்வு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும்” என ஜான்வி கபூர் கூறுகிறார்.
“தற்போது சந்தை மிக வேகமாக மாறி வருகிறது, இதுவரை இல்லாத வேகத்தில் தயாரிப்புகள் சந்தைக்கு வருகின்றன. எங்களுடைய உயர்தர வரிசை டால்பி ஒலிபெருக்கிகள், அலெக்ஸா வசதியுள்ள தயாரிப்புகள், வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் பல தயாரிப்புகள் மூலம் பெருவாரியான மக்களுக்காக முடியாததை முடித்துக் காட்டியுள்ளோம்.”
“சமீப வருடங்களில் எங்களது ஸ்மார்ட்வாட்ச் பிரிவு பன்மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் எங்கள் நிறுவனம் எப்பொழுதும் கொண்டிருக்கும் “அனைவருக்கும் உயர்தரம்” என்ற நோக்கத்தை எட்டியுள்ளோம். ஜான்வி கபூர் இளைஞர்களின் பிரதிநிதியாக மட்டும் இல்லாமல், வேறு யாரிடமும் இல்லாத அளவிற்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் அவரிடம் நிரம்பியுள்ளது.” என ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனருமான ராஜேஷ் தோஷி தெரிவித்தார்.
சியோமி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் டேப்லெட் மாடல் எஸ் பென் சப்போர்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகனஅ 860 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது. சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான டாஸ்க்குகளை செய்ய முடியும்.

சியோமி பென்-ஐ டேப்லெட் மீது பொருத்தினால் காந்த சக்தியால் இணைந்து கொண்டு தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே எனும் ஒற்றை நிறத்தில் தான் கிடைக்கிறது. இதன் 128GB மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சியோமி பேட் 5 விற்பனை அமேசான், Mi ஹோம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை மே 3 ஆம் தேதி துவங்குகிறது. மே 7 ஆம் தேதி வரை சியோமி பேட் 5 மாடல் 128GB மெமரி மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த ஐபோன்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் பத்து லட்சம் "மேட் இன் இந்தியா" ஐபோன் மாடல்களை விற்பனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் மீடியா ரிசர்ச் (CMR) எனும் சந்தை ஆ்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஐபோன்களில் 50 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் ஐபோன்கள் 22 சதவீத வளர்ச்சியை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 விற்பனையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

"எங்களின் தகவல்கள் பெரும்பாலும் மேக் இன் இந்தியா ஐபோன்களின் விற்பனையை குறிக்கின்றன. இவை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஐபோன் 13 விற்பனை ஐபோன் 12 சீரிஸ் விற்பனைக்கு இணையாகவே உள்ளது," என CMR நிறுவன தலைவர் பிரபு ராம் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கியது. ஐபோன் SE மாடலே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஐபோன் ஆகும். இதைத் தொடர்ந்து ஐபோன் 11, ஐபோன் 12 போன்ற மாடல்களும், பின்னர் ஐபோன் 13 மாடல்களின் உற்பத்தியும் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்ககாரரான எலான் மஸ்க் வாங்குகிறார். இதை அடுத்து, டுவிட்டருக்கு, "இனி இருண்ட காலம் தான். அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்," என டுவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் நிறுவனம் விற்கபட்டால் இது தான் ஏற்படும் என அவர் தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் டுவிட்டர் தனிச்சிறப்பு கொண்டிருக்கிறது. டுவிட்டர் தளத்தை உலக தலைவர்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை நிறுவிய எலான் மஸ்க் முயற்சித்து வந்தார்.
அதன்படி அவர் டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க விரும்புவதாகவும் தெரிவித்து வந்தார். டுவிட்டர் நிறுவன பங்கு ஒன்றுக்கு 54.20 டாலர் வரை கொடுக்க தயார் என்றும் அறிவித்து இருந்தார். முன்னதாக, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். இதன் காரணமாக டுவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் எலான் மஸ்க் கொடுக்கும் விலைக்கே டுவிட்டர் நிறுவனத்தை ஒப்படைக்க அதன் நிர்வாகம் ஒப்புக் கொண்டு இருப்தாக தகவல் வெளியாகி வந்தது. அதன்படி டுவிட்டர் நிறுவனத்தின் பங்கு ஒன்றிற்கு 54.2 டாலர்கள் என்ற கணக்கில் வழங்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய டுவிட்டர் ஒப்புக் கொண்டுள்ளது. டுவிட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கான பரிவரத்தனை எப்போது நடைபெறும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை யார் வழிநடத்துவார் போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.
"ஒட்டு மொத்த உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பந்தம் மற்றும் குறிக்கோளை டுவிட்டர் கொண்டிருக்கிறது. எங்களின் குழுக்கள் மற்றும் அவர்களது பணியை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது," என டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.
"தலைசிறந்த ஜனநாயகத்திற்கு சிறந்த அடித்தளமே கருத்து சுதந்திரம் தான். மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விவாதங்கள் நடைபெறும் டிஜிட்டல் டவுன் ஸ்கொயர் தான் டுவிட்டர். இதுவரை இல்லாத வகையில் டுவிட்டர் தளத்தை சிறப்பான ஒன்றாக மாற்ற விரும்புகிறேன். இதற்காக புது அம்சங்களை வழங்க இருக்கிறேன். மேலும் இதன் அல்காரிதம்களை ஓபன் சோர்ஸ் ஆக மாற்றி நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி, ஸ்பாம் பாட்களை வீழ்த்த முடிவு செய்துள்ளேன். டுவிட்டரில் ஏராளமான தனித்துவம் உள்ளது. இதனை வெளிக் கொண்டு வர பயனர்கள் மற்றும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்." என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன்களில் க்ரூப் வாய்ஸ் கால் பயனர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அப்டேட்களின் மூலம் செயலியில் புதுப்புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது. இந்த வரிசையில் தான், தற்போது புது அப்டேட் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் புது அப்டேட் கொண்டு ஒரே சமயத்தில் 32 பேருடன் வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் பேச முடியும். முன்னதாக 2020 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

இது தவிர ஒரே சாட் திரெட்-இல் அதிக பயனர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி, ரி-டிசைன் செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர், disappearing மெசேஜ்களை save செய்து கொள்ளும் ஆப்ஷன், அதிக எமோஜிக்கள், பிரைவசி செட்டிங்களில் அதிக ஆப்ஷன்கள் என ஏராளமான அம்சங்கள் புது பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு உள்ளன.
வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்வோர் இனி, அதிகபட்சமாக 32 பேருடன் வாய்ஸ் கால் பேச முடியும். இதே தகவல் வாட்ஸ்அப் வலைதளத்தில் FAQ பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த அம்சத்தில் நான்கு பேருடன் வாய்ஸ் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு, பின் அந்த எண்ணிக்கை ஏப்ரல் 2020 வாக்கில் இருமடங்காக அதிகரிக்கப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.22.8.80 வெர்ஷனிலும், ஐ.ஓ.எஸ். 2.2.9.73 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு உள்ளது.






