என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவன சாதனங்கள் உற்பத்திக்காக சீனாவை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆப்பில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் முடிவு குறித்த புது தகவலை பிரபல ஆப்பிள் வல்லுனர் மிங் சி கியோ தெரிவித்து உள்ளார்.
சீனாவில் இருந்து ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றும் முடிவு சிறப்பான ஒன்று தான், ஆனால் இவ்வாறு செய்யும் போது சீனாவை சேர்ந்த ஆப்பிள் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் போது வீண் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக ஆப்பிள் தனது சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

இதோடு சீனாவுக்கு அடுத்தப்படியாக உற்பத்திக்கான சிறந்த சூழல் கொண்ட நாடுகளில் வியட்நாம் முதன்மையானது என அவர் தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் அரசியல் மோதல்கள் காரணமாகவும் ஆப்பிள் தனது உறிபத்தியை சீனாவில் இருந்து மாற்ற முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியான மற்ற தகவல்களின் படி ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் வியட்நாமில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். முந்தைய தகவல்களில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
நிறுவனங்கள் சார்பில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும் முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக சர்வதேச சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 599 என துவங்குகிறது.
சர்வதேச பயணம் தற்போது மிக எளிமையாகி விட்டது. இதன் காரணமாக பல இந்தியர்கள் வியாபாரம் மற்றும் ஓய்வு போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வி நிறுவனம் புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
சர்வதேச பயணத்தை எளிமையாக்க, வி ரோமிங் சலுகைகள் உதவுகின்றன. சமீபத்தில் வி நிறுனம் பூ. 151 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருந்தது. இதில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ரூ. 82 சலுகையில் சோனி லிவ் சந்தா வழங்கப்பட்டது.
வி போஸ்ட்பெயிட் பயனர்கள் ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரேசில் மற்றும் இதர நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது வி அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றின் விலை ரூ. 599 என துவங்கி, அதிகபட்சம் ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் அதிகப்படுத்த தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபோன் மற்றும் இதர உதிரிபாகங்கள் உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சீனாவுக்கு அடுத்து இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடுகளில் ஆப்பிள் தனது உற்பத்தியை தற்போது இருப்பதை விட அதிகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனக்கான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றம் செய்யும் முடிவு எடுக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காரணம் காட்டி சீனாவை உற்பத்திக்காக சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கும் மேற்கத்திய நிறுவனங்களையும் தங்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் மேற்கொள்ளச் செய்யும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப் என 90 சதவீத சாதனங்கள் வெளி நிறுவன உற்பத்தியாளர்களால் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஷாங்காய் மற்றும் சீனாவின் இதர நகரங்களில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்ய சாதகமான சந்தையாக பார்க்கிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் பெருமளவு உற்பத்தி பணிகளை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். சில உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வி நிறுவனம் புதிதாக பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் டேட்டா ஆட் ஆன் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 151 ஆகும். இதில் மொத்தம் 8GB வரையிலான டேட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
முன்னதாக ரூ. 82 விலையில் வி அறிவித்த பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் சோனி லிவ் மொபைல் சந்தா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெலிகாம் சந்தையில் வி நிறுவனத்துக்கு போட்டியாளரான ஏர்டெல் சமீபத்தில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்து இருந்தது. இவற்றின் விலை ரூ. 399 மற்றும் ரூ. 899 ஆகும். இவை முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன.
வி அதிகாரப்பூர்வ வலைதள விவரங்களின் படி புதிய ரூ. 151 பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் மொத்தம் 8GB டேட்டா, மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இவை தவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் திரும்புவது பற்றிய முடிவு குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் ட்விட்டர் பதிவு வைரல் ஆகி வருகிறது.
உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி இருந்தது. இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் வர வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக கூறப்பட்டது. எனினும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊழியர்கள் அலுவலகம் திரும்ப மேலும் சில காலம் ஆகும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பதிவுக்கு, எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில், “உங்களின் உடற்பயிற்சி ஆடைகளை உடுத்திக் கொண்டு, டி.வி. பாருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சி ஆடைகளை அணிந்து கொண்டு டி.வி. பார்ப்பதால் யாருக்கும் எந்த பயனும் இருக்க முடியாது. இதையே எலான் மஸ்க் கூறி இருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற கட்டாயப்படுத்தவில்லை. எனினும், வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம் குறித்து ட்விட்டர் ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை முந்தைய திட்டப்படி ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் பட்சத்தில், இந்த விவகாரம் குறித்து எலான் மஸ்க் வேறு முடிவுகளை எடுக்கலாம்.
முன்னதாக பல சமயங்களில் சீன மக்களின் பணி கலாச்சாரம் குறித்து எலான் மஸ்க் புகழ்ந்து இருக்கிறார். மேலும் அமெரிக்கர்கள் வேலை செய்வதை தவிர்க்கவே விரும்புவர் என்றும் தெரிவித்து இருக்கிறார். ட்விட்டர் வலைதளத்தில் உள்ள போலி அக்கவுண்ட் மற்றும் பாட்களின் எண்ணிக்கை, அதன் மதிப்பை மாற்றலாம் என்பதால் ட்விட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் ஒத்தி வைத்துள்ளார்.
போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல். இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
போக்கோ X4 GT ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் LCD பேனல், FHD+ ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் இருவித ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், மூன்று கேமரா சென்சார்கள், 5000mAh பேட்டரி மற்றும் 67W சார்ஜிங் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
போக்கோ X4 GT எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.6 இன்ச் LCD டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர்
- 6GB ரேம், 128GB மெமரி
- 8GB ரேம், 256GB மெமரி
- 48MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP லென்ஸ்
- 20MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 67W பாஸ்ட் சார்ஜிங்
புதிய போக்கோ X4 GT ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் IMEI வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. மேலும் போக்கோ X4 GT மாடல் ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் மே 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வில் புதிய ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களை அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் ஆப்பிளஅ நிறுவனம் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வாட்ச் 8, பட்ஜெட் விலையில் வாட்ச் SE மற்றும் புதிய வாட்ச் எக்ஸ்டிரீம் எடிஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபோன் 14 அறிமுக நிகழ்விலேயே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உயரமான ப்ரோபைல், சிறப்பான கேமரா மாட்யுல்கள் இடம்பெற்று இருக்கலாம். இரு ப்ரோ மாடல்களிலும் மூன்று கேமரா சென்சார்கள், 48MP வைடு, 12MP அல்ட்ரா வைடு மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடலில் 8K வீடியோ வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலில் அதிகபட்சமாக 8GB ரேம், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் உடலின் வெப்பநிலையை கணக்கிடும் அம்சம் வழங்கப்படலாம். இத்துடன் அதிவேக பிராசஸர், மேம்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் அம்சங்கள், கார் கிராஷ் டிடெக்ஷன் அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது.
வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றி தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் க்ரூப்களில் இருந்து வெளியேறுவதில் மாற்றம் செய்யப்படுகிறது. புது மாற்றத்தின் படி பயனர்கள் க்ரூப்களில் இருந்து வெளியேறும் போது ஒருவர் க்ரூப்-இல் இருந்து வெளியேறி இருக்கிறார் என யாருக்கும் நோட்டிபிகேஷன் செல்லாது. இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அனைவருக்குான ஸ்டேபில் அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்படும் போது, தேவையற்ற க்ரூப்களில் இருந்து பயனர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வெளியேறி விட முடியும். புது அப்டேட் பற்றிய தகவலை வாட்ஸ்அப் சார்ந்த விவரங்களை மட்டும் வெளியிடும் தனியார் வலைதளம் ஒன்று தெரிவித்து உள்ளது. இதே தகவலை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஒருவர் வாட்ஸ்அப் க்ரூப்-இல் இருந்து வெளியேறும் பட்சத்தில் அந்த நபர் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட க்ரூப் அட்மினுக்கு மட்டுமே அதற்கான நோட்டிபிகேஷன் செல்லும். இதன் படி ஒருவர் க்ரூப்-இல் இருந்து வெளியேறி இருப்பது க்ரூப்-இல் உள்ள மற்றவர்களால் பார்க்க முடியாது.
தற்போதைய வெர்ஷனில் யாரேனும் க்ரூப்-இல் இருந்து வெளியேறினால் அனைவருக்கும் அதுபற்றிய நோட்டிபிகேஷன் தெரியும் வகையில் ஆட்டோ ஜெனரேட் செய்யப்பட்ட நோட்டிபிகேஷன் முறை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட் பேட்டரி என்ஜின் வழங்கி இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும்.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 அப்டேட் ஒருவழியாக வழங்கப்பட்டது. நார்டு ஸ்மார்ட்போன்களுக்கு புது ஓஏ.எஸ். அப்டேட் ஓவர் தி ஏர் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அப்டேட் இந்திய யூனிட்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் ஐரோப்பாவுக்கான நார்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வெளியிடப்பட இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். அப்டேட் உடன் ஏப்ரல் 2022 மாதத்துக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் இருந்து வந்த பிழைகளை சரி செய்து, ஸ்மார்ட்போன் இயக்கத்தை மேம்படுத்தி உள்ளது. இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு போன் ஜூலை 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 10.5 வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புது அப்டேட் மூலம் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட் பேட்டரி என்ஜின் வழங்கி இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும். இத்துடன் புது டெக்ஸ்ச்சர்கள் மூலம் டெஸ்க்டாப் ஐகான்கள் ஆப்டிமைஸ் செய்யப்பட்டு உள்ளன. டார்க் மோட் தற்போது பல்வேறு லெவல்களில் அட்ஜஸ்ட் செய்யும் வசதியை பெற்று இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை எப்படி பெற வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களின் விலையும் எப்போதும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும். அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால், முன்னணி வலைதளங்கள், ஆப்பிள் ரிசெல்லர்கள் ஐபோன் மற்றும் இதர சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகளை அவ்வப்போது வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் ஐஸ்டோர் இந்தியா தளம் ஐபோன் SE3 மாடலுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. ஐஸ்டோர் இந்தியா சலுகைகளின் படி ஐபோன் SE3 மாடலை அனைத்து சலுகைகளுடன் வாங்கும் போது குறைந்த பட்சமாக ரூ. 29 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.

புதிய ஐபோன் SE3 (64GB) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஐஸ்டோர் வழங்கும் கேஷ்பேக் சலுகையை சேர்க்கும் போது ஐபோன் SE3 விலை ரூ. 42 ஆயிரத்து 900 என மாறி விடுகிறது. இத்துடன் ஐபோன் 8 64GB மாடலை நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் போது ஐபோன் SE3 (64GB) மாடலை ரூ. 29 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.
இதேபோன்று ஐபோன் 8 64GB மாடல் நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், ஐஸ்டோர் கேஷ்பேக் சலுகையும் சேர்த்தால், ஐபோன் SE3 (128GB) மாடலை ரூ. 34 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். எக்சேன்ஜ் இன்றி ஐஸ்டோர் கேஷ்பேக் மட்டும் சேர்க்கும் பட்சத்தில் இதன் விலை ரூ. 47 ஆயிரத்து 900 என மாறும்.
இந்தியாவில் ஐபோன் SE3 (256GB) மாடல் ரூ. 58 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் ஐஸ்டோர்
கேஷ்பேக் சேர்த்தால் ஐபோன் SE3 (256GB) மாடல் விலை ரூ. 57 ஆயிரத்து 900 என மாறும். இத்துடன் ஐபோன் 8 64GB மாடலை நல்ல நிலையில் எக்சேன்ஜ் செய்யும் போது ஐபோன் SE3 டாப் எண்ட் மாடலை ரூ. 44 ஆயிரத்து 990 விலையில் வாங்கிடலாம்.
ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனம் மே 18 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுக தேதி பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரியல்மி நிறுவனத்தின் டெக்லைஃப் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதில் 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே, ஸ்கின் மற்றும் பாடி டெம்பரேச்சர் மாணிட்டர், இதய துடிப்பு டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ரியல்மி நிறுவனம் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்த ரியல்மி டெக்லைஃப் S100 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 மாடல் இரண்டு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் இத்துடன் செவ்வக வடிவம் கொண்ட டையல், பக்கவாட்டில் நேவிகேஷன் பட்டன், 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு பில்ட் இன் அம்சங்களான ரிமைண்டர்கள், காலண்டர் மற்றும் வானிலை சார்ந்த அப்டேட்கள் வழங்கப்படுகிறது.






