என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 6 மாடல்களில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினையை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களுக்கான சர்வீஸ் புரோகிராமை அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களின் சில யூனிட்களில் திடீரென பிளாக் ஸ்கிரீன் தோன்றுவதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் 2021 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்கள் இந்த பிரச்சினை மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களை பயன்படுத்துவோர், அதில் உள்ள சீரியல் நம்பரை ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டு இலவச சர்வீஸ் செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ் செய்து கொள்ள பயனரின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 சீரியல் நம்பர் ஆப்பிள் வலைதளத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீரிஸ் 6 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் உற்பத்தியின் போது ஏற்பட்ட பிழையின் காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆப்பிள் வெளியிட்ட தகவல்களின் படி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் 40mm வெர்ஷனில் சில யூனிட்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக அறிவிக்கப்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் சீரற்று இயங்கியதாக பலர் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சினை வாட்ச்ஓ.எஸ். 8.5 அப்டேட்டிற்கு பின் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புது ஹோம்பாட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர், அடுத்த தலைமுறை மாடலில் மிக முக்கிய புது அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஹோம்பாட் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது பில்ட்-இன் கேமரா கொண்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று செயல்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஹோம்பாட் ஸ்பீக்கர் பேஸ் ஐடி வசதி கொண்டிருக்கும் என்றும் இது ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த டி.வி. ஓ.எஸ். கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. பேஸ்டைம் உரையாடல்களை இயக்க ஏதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது ஹோம்பாட் ஸ்பீக்கரில் பில்ட்-இன் கேமராவை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டிஸ்ப்ளே, பில்ட்-இன் கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருப்பதால், அடுத்த தலைமுறை ஹோம்பாட் மாடல் கூகுள் நிறுவனத்தின் கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ் மற்றும் அமேசான் எக்கோ ஷோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இரு மாடல்களிலும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், டிஸ்ப்ளே, கேமரா மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
பேஸ் ஐ.டி. வசதியுடன் புது ஹோம்பாட் மாடல் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தாலும், இந்த மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், புதிய சாதனத்திற்கான டீசரை ஆப்பிள் நிறுவனம் தனது WWDC நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
கூகுள் நிறுவனம் கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கான ஆதரவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் கால் ரெக்காடிங் சேவையை வழங்கி வரும் மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நடவடிக்கை மே 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது மாற்றம், ஆண்ட்ராய்டு தளத்தில் கால் ரெக்காடிங் வசதியை நீக்கி விடும்.
இதன் காரணமாக பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளால், கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வகையில், மே 11, 2022 ஆம் தேதி முதல் பில்ட்-இன் கால் ரெக்காடர் வசதி இல்லாத ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயனர்களால் கால் ரெக்காடிங் அம்சத்தை பயன்படுத்த முடியாது. புதிய மாற்றங்கள் மூன்றாம் தரப்பு கால் ரெக்காடிங் செயலிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இது தவிர வழக்கமான கால் ரெக்காடிங் அம்சம் எவ்வித இடையூறும் இன்றி இயங்கும். இதனால், ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் வாய்ஸ் ரெக்காடர் உள்ள பயனர்களால் தொடர்ந்து இந்த அம்சத்தை இயக்க முடியும். Mi, சில சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் கால் ரெக்காடிங் சேவை தானாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
சமீப காலங்களில் கூகுள் நிறுவனம் கால் ரெக்காடிங் சேவைகளை ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறது. ஆண்ட்ராய்டு 6 தளத்தில் ரியல்-டைம் கால் ரெக்காடிங் வசதியை நிறுத்தியது. பின் ஆண்ட்ராய்டு 10 வெர்ஷனில் மைக்ரோபோன் மூலம் கால் ரெக்காடிங் வசதியை கட்டுப்படுத்தியது.
சோனி நிறுவனம் தனது புதிய PS5 கேமிங் கன்சோலின் அடுத்த விற்பனை தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சோனி பிளே ஸ்டேஷன் 5 (PS5) ரி-ஸ்டாக் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சோனி PS5 டிஜிட்டல் எடிஷன் மற்றும் ஸ்டாண்டர்டு எடிஷன் விற்பனை நாளை (ஏப்ரல் 22) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது ரி-ஸ்டாக் இது ஆகும். இம்முறை சோனி PS5 டிஜிட்டல் எடிஷன் மற்றும் ஸ்டாண்டர்டு எடிஷன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய தலைமுறை கேமிங் கன்சோல் மட்டுமின்றி சோனி நிறுவனம் இந்த முறை பண்டில் (bundle) சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் PS5 ஸ்டாண்டர்டு எடிஷன் மற்றும் கிரான் டூரிஸ்மோ 7 சேர்த்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்த கட்டணம் ரூ. 54 ஆயிரத்து 490 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய PS5 விலை மாற்றம் இன்றி ரூ. 49 ஆயிரத்து 990 என்றே இருக்கிறது. எனினும், ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள கிரான் டூரிஸ்மோ 7 கேம் புதிய ரி-ஸ்டாக் விற்பனையில் ரூ. 499-க்கு வழங்கப்படுகிறது. PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய விற்பனைகளை போன்றே இம்முறையும் சோனி PS5 கன்சோல் ShopatSC வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட், விஜய் சேல்ஸ் கேம்ஸ்திஷாப், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா மற்றும் பிரீபெயிட் கேம் கார்டு உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும். அனைத்து தளங்களிலும் அதிகளவு யூனிட்கள் இம்முறை விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது ஐ.ஓ.எஸ். அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ள எமோஜிக்களில் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயனர்களுக்கு ஆண் கருவுற்று இருப்பதை வெளிப்படுத்தும் எமோஜியை வெளியிட்டு உள்ளது. இத்துடன் திருநங்கைகளை குறிக்கும் எமோஜியும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரு எமோஜிக்களும் ஐ.ஓ.எஸ். 15.4 வெர்ஷன் அப்டேட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் மார்ச் மாத வாக்கிலேயே வெளியிடப்பட்டு விட்டது. எனினும், இம்முறை இந்த அம்சம் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில் ஆப்பிள் நிறுவனம் 35 புதிய எமோஜிக்களை வெளியிட்டு உள்ளது. இதில் கருவுற்று இருக்கும் எமோஜி, இரு பாலினத்திற்கும் சமமான எமோஜி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஆண் கருவுற்று இருக்கும் எமோஜியை வெளியிட்டு இருந்தது. 2019 வாக்கில் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடி, திருநங்கை எமோஜி உள்ளிட்டவைகளை 2019 வாக்கில் வெளியிட்டதை அடுத்து தற்போது இந்த எமோஜிக்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆரம்பத்தில் ஆப்பிள் வெளியிட்ட புது எமோஜிக்களை பார்த்த நெட்டிசன்கள், இது ஆண் கருவுற்று இருக்கும் எமோஜி இல்லை என்றும் அது வெறும் தொப்பை தான் என்றும் கூறி வந்தனர். இதுபற்றி பலர் நக்கலடித்து வந்தாலும், சிலர் ஆப்பிள் மீது எதிர்ப்பை தெரிவிக்கும் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டனர்.
ஐ.ஓ.எஸ். 15.4 அப்டேட்டில் சிரி விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைக்கு புது குரல் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆஃப்லைனில் தேதி மற்றும் நேரம் சார்ந்த விவரங்களை வழங்குவது, சஃபாரி பிரவுசரில் மாற்றங்கள் என பல்வேறு புது அம்சங்களை ஆப்பிள் வழங்கி இருக்கிறது. மேலும் இந்த அப்டேட் கொண்டு ஐபோன் பயனர்கள் முகக்கவசம் அணிந்த நிலையில், ஐபோன்களை அன்லாக் செய்ய முடியும்.
எனினும், இந்த அம்சம் ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும்.
சியோமி மற்றும் போக்கோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் ஏராளமான மாடல்களை இன்னமும் ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவில்லை. எனினும், பல்வேறு மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 வெளியிடுவதற்கான பணிகளில் சியோமி நிறுவனம் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கும் ரெட்மி, சியோமி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலை சியோமி யு.ஐ. வலைதளம் வெளியிட்டு உள்ளது.
சியோமி யு.ஐ. வலைதளம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி 2021 ஆண்டுக்கு பின் அறிமுகம் செய்யப்பட்ட தியோமி, ரெட்மி மற்றும் போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக புது ஃபர்ம்வேர் வரும் மாதங்களில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், தங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றி சியோமி மற்றும் போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கும் சியோமி மாடல்கள்:
சியோமி நிறுவனத்தின் Mi 10s, Mi 11, Mi 11 லைட் மற்றும் Mi மிக்ஸ் 4 போன்ற மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட இருப்பதாக சியோமி யு.ஐ. வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- Mi 10S
- Mi 11
- Mi 11 ப்ரோ
- Mi 11 அல்ட்ரா
- Mi 11i
- Mi 11X
- Mi 11X ப்ரோ
- சியோமி 11i / ஹைப்பர்சார்ஜ்
- சியோமி 11T / ப்ரோ
- Mi 11 லைட் 4G/5G/LE/ லைட் NE 5G
- சியோமி 12S
- சியோமி 12S ப்ரோ
- சியோமி 12
- சியோமி 12 ப்ரோ
- சியோமி 12 லைட்
- சியோமி 12X
- சியோமி 12X (இந்தியா)
- சியோமி 12X ப்ரோ (இந்தியா)
- சியோமி மிக்ஸ் 4
- சியோமி மிக்ஸ் ஃபோல்டு / ஃபோல்டு 2
- சியோமி CIVI / CIVI S
- சியோமி பேட் 5 சீரிஸ்
ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கும் போக்கோ போன்கள் பட்டியல்:
- போக்கோ F3/GT
- போக்கோ X3 GT / X3 ப்ரோ
- போக்கோ F4/ ப்ரோ /GT
- போக்கோ M3 ப்ரோ 5G /M4 ப்ரோ 5G/M4 ப்ரோ 4G
- போக்கோ M4 5G

ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்:
- ரெட்மி 10/பிரைம்/2022/பிரைம் 2022
- ரெட்மி 10 5G / பிரைம்+ 5G
- ரெட்மி 10C / ரெட்மி 10 (இந்தியா)
- ரெட்மி நோட் 10/10S/ப்ரோ/ப்ரோ மேக்ஸ் /ப்ரோ 5G
- ரெட்மி நோட் 10T/10 5G
- ரெட்மி நோட் 11/NFC/11S/ப்ரோ 4G/ப்ரோ 5G/ப்ரோ+ 5G
- ரெட்மி நோட் 11 ப்ரோ / ப்ரோ+ / 11E ப்ரோ
- ரெட்மி நோட் 11T/11 5G/4G
- ரெட்மி 40/ப்ரோ/ப்ரோ+/கேமிங்/K40S
- ரெட்மி K50/ப்ரோ/கேமிங்
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுபற்றிய விவரங்களை மோட்டோரோலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ G52 அம்சங்கள்:
- 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் மேக்ஸ்விஷன் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB / 6GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் My UX
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் / டெப்த் கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே மற்றும் போர்சிலெயின் வைட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது பிரிபலமான ஐபோன் மாடல் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் விற்பனையை இந்த ஆண்டு நிறுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் 2019 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
மூன்று ஆண்டுகள் பழைய மாடல், ஐபோன் SE 3 மாடலுக்கு நேரடி போட்டியாளர் போன்ற காரணங்களுக்காக ஐபோன் 11 விற்பனை இந்த ஆண்டே நிறுத்தப்பட்டு விடும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 11 மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 900 என துவங்குகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 3 அல்லது ஐபோன் SE 2022 மாடலின் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

விற்பனை நிறுத்தத்தை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விலையை குறைக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 12 சீரிஸ் விலை ரூ. 65 ஆயிரத்து 900 என துவங்குகிறது. ஐபோன் 12 விலையை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரத்து 672 ஆக குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை தற்போது 999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 170 என துவங்குகிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 12 மாடலின் விலை தற்போதைய ஐபோன் 11 விலையில் கிடைக்கும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட் ஐபோன் 13 சீரிஸ் விற்பனை அடுத்த சில ஆண்டுகளுக்கு தடையின்றி நடைபெறும்.
சியோமி பேட் 5 இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லெட் மாடலின் வெளியீட்டு தேதியையும் சியோமி அறிவித்து விட்டது. முன்னதாக ஃபிளாக்ஷிப் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி நிகழ்விலேயே புதிய சியோமி பேட் 5 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. வெளியீட்டு தேதியை புது டீசர் மூலம் சியோமி அறிவித்து இருக்கிறது. தற்போதைய டீசரின் படி புதிய சியோமி பேட் 5 மாடலில் ஸ்டைலஸ், கீபோர்டு டாக் போன்ற அக்சஸரீக்களை இணைத்து பயன்படுத்துவதற்கான சப்போர்ட் வழங்கப்படும் என உறுதியாகி இருக்கிறது.

சியோமி பேட் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 11.2 இன்ச் 2560x1600 WQXGA 16:10 டிஸல்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10
- ஆக்டா கோர் கவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6GB LPDDR4X ரேம்
- 128GB / 256GB UFS 3.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 11
- 13MP பிரைமரி கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- யு.எஸ்பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
- வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
- 8,720mAh பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சீன சந்தையில் சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், சர்வதேச சந்தையில் சியோமி பேட் 5 மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையை போன்றே இந்தியாவிலும் சியோமி பேட் 5 மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இதன் விற்பனை நடைபெறும்.
வாட்ஸ்அப் செயலியில் உங்களின ப்ரோபைலுக்கு QR கோட் உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருந்து வருகிறது. இந்த செயலியில் உங்களின் ப்ரோபைலை இணைய முகவரி வடிவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.22.9.8 வெர்ஷனில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதே தகவலில் புதிதாக ஷேர் ப்ரோபைல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு உங்களின் ப்ரோபைலை லிண்க் வடிவில் உருவாக்க முடியும்.
இந்த அம்சத்தை செயல்படுத்துவதற்கான பட்டன் செட்டிங்ஸ் டேபில், உங்களின் ப்ரோபைல் புகைப்படத்தின் அருகில் இடம்பெற்று இருக்கும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் உங்கள் ப்ரோபைலை QR கோட் வடிவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

- முதலில் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
- அடுத்து திரையின் மேல் வலபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- இந்த மெனுவில் இருந்து செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- இனி QR கோட் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் இடம்பெற்று இருக்கும்.
- மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் QR கோட் உங்களின் கேலரியில் சேவ் ஆகி விடும்.
ஐபோனில் செய்வது எப்படி?
- ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
- திரையின் கீழ்புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இனி வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் உள்ள QR கோட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்து QR கோடினை உங்களது கேலரியில் சேவ் செய்து கொள்ளலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஓ.எஸ். அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் தனது பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 12 சார்ந்த அப்டேட் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கேலக்ஸி M62 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 அப்டேட் வழங்கப்பட்டது. தற்போது சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாம்-மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், முதற்கட்டமாக இந்த அப்டேட் தாய்லாந்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் மற்ற சந்தைகளிலும் இந்த அப்டேட் வெளியிடப்படும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி A32 4ஜி மாடலுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. தாய்லாந்தில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அப்டேட் A326BXXU4BVC8 எனும் firmware வெர்ஷனை கொண்டிருக்கிறது. ஓ.எஸ். அப்டேட் உடன் இந்த ஸ்மார்ட்போனிற்கு மார்ச் மாதத்திற்கான செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது வழங்கப்பட்டு இருக்கும் செக்யூரிட்டி பேட்ச் சாம்சங் மற்றும் கூகுள் மென்பொருள்களில் கண்டறியப்பட்டு இருக்கும் சுமார் 50-க்கும் அதிக மென்பொருள் பிழைகளை சரி செய்துள்ளது. மேலும் சாதனத்தின் பெர்பார்மன்ஸ் அப்டேட், டிவைஸ் ஸ்டேபிலிட்டி உள்ளிட்டவை புது அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
டாடா பிளே சேவையில் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா ஸ்கையில் இருந்து தற்போது டாடா பிளே என பெயர் மாற்றப்பட்டு இருக்கும் டி.டி.ஹெச். சேவை வழங்கும் நிறுவனம் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேக் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. இது குறைந்த விலையில் OTT பலன்களை வழங்கும் சலுகை ஆகும்.
டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் இரோஸ் நௌ, ஷீமாரோமி, ஜீ5 மற்றும் ஹங்காமா என நான்கு OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இதனை ஆக்டிவேட் செய்ததும், பயனர்கள் OTT தரவுகளை தங்களின் சாதனங்களில் உள்ள செயலியில் பார்த்து ரசிக்க முடியும்.

மிகவும் குறைந்த விலை சலுகை என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விலை ரூ. 49 ஆகும். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் தவிர ரூ. 149 மற்றும் ரூ. 299 விலைகளில் பேசிக் மற்றும் பிரீமியம் சலுகைகளை டாடா பிளே வழங்கி வருகிறது.
டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் சலுகையில் பயனர்கள் தரவுகளை தொலைகாட்சி மற்றும் இணையதளத்தில் ஸ்டிரீம் செய்ய முடியாது. குறிப்பிட்ட OTT தளங்களின் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க பயனர்கள் டாடா பிளே பின்ஜ் செயலியை சம்பந்தப்பட்ட சாதனங்களில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். முன்னதாக டாடா பிளே பின்ஜ் சலுகை டிரீம் டிடிஹெச் என அழைக்கப்பட்டு வந்தது.






