என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ (Shot on iPhone Macro) போட்டியை சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்த போட்டியில் கலந்து கொள்வோர் தங்களின் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேக்ரோ மோட் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்பிக்க வேண்டும்.
ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் அல்ட்ரா வைடு லென்ஸ் மூலம் மேக்ரோ புகைப்படங்களை எடுக்கும் வசதியை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. இந்த அம்சம் ஐபோன் 13 மினி, ஐபோன் 13 போன்ற மாடல்களில் வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் சமர்பித்த புகைப்படங்களில் சிறப்பான புகைப்படங்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்து வெற்றியாளர்களை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ போட்டியின் வெற்றியாளர்கள் விவரங்களை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி இறுதி சுற்றுக்கு பத்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சீனா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். வெற்றியாளர்கள் எடுத்த புகைப்படங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்படும். இது மட்டும் இன்றி ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா அக்கவுண்ட், சில நகரங்களின் விளம்பர பதாகை உள்ளிட்டவைகளில் பதிவிடப்படும்.

சமீபத்திய ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ வெற்றியாளர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். கோலாப்பூர் பகுதியில் வசிக்கும் பிரஜ்வால் சவுக்லே ஐபோன் 13 ப்ரோ மாடல் கொண்டு தான் எடுத்த புகைப்படத்தினை ஆர்ட் இன் நேச்சர் எனும் தலைப்பில் சமர்பித்தார். புகைப்படத்தில் இவர் சிலந்தி வலையில் தண்ணீர் துளிகளை மிக தெளிவாக படம்பிடித்து இருக்கிறார்.
இவரின் புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வுக்குழுவில் இடம்பெற்று இருந்தவர்களில் ஒருவரான ஆரெம் டூப்ளெசிஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். "எளிமை, கிராபிக் மற்றும் அழகிய புகைப்படத்திற்கு இது உண்மையான சான்று. சிலந்தி வலை போன்றே மிக தத்ரூபமாக தண்ணீர் துளிகள் காட்சியளிக்கின்றன. எளிமையாக கூற வேண்டுமெனில் இது அட்டகாசமாக உள்ளது," என தெரிவித்து இருக்கிறார்.
2020-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் பணம் பரிவர்த்தனை சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இருப்பினும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த வாட்ஸ்ஆப்பை 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் என்.பி.சி.ஐ அமைப்பு விரிவு செய்துள்ளது.
ஏற்கனவே 4 கோடி பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ்ஆப் பே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது, தற்போது கூடுதலாக 6 கோடி பயனர்களுக்கு விரிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 4 கோடியாக-ஆக உயர்ந்த நிலையில் தற்போது 10 கோடியாக அதிகரித்துள்ளது. விரைவில் 50 கோடியாக மாற்றும் அளவிற்கு வாட்ஸ்ஆப் சேவையை விரிவுப்படுத்துவோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான், குரோமா, விஜய் சேல்ஸ் ஆகிய இணையதளங்களில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய போன்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் ஐபோன் 13 விலை ரூ.79,900-ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விற்பனையில் இந்த போனின் விலை கிட்டத்தட்ட ரூ.6000 குறைக்கப்பட்டு ரூ.73,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான், குரோமா, விஜய் சேல்ஸ் ஆகிய இணையதளங்களில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர ஹெச்.டி.எஃப்.சி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் அல்லது உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போன் ரூ.69,900 விலையில் தொடங்குகிறது. இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.64,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குரோமாவில் இந்த போனை வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக்கும் (HDFC கார்ட்) அமேசானில் எஸ்பிஐ கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, மலேசியா உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் பயமுறுத்தல்களை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் 10-ல் 6 குழந்தைகள் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாக சர்ப்ஷார்க் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள குழந்தைகள் 8 முதல் 12 வயதுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல் கடந்த 2020ம் ஆண்டு 144 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது தான் என கூறப்படுகிறது.
2-ல் ஒரு குழந்தைகள் சைபர் வன்முறைக்கு ஆளாகிறார்கள், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பிஷ்ஷிங் அல்லது ஹாக்கிங்கிற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1.2 கோடி குழந்தைகள் கடந்த மூன்று வருடங்களில் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குழந்தைகளுக்கு இணையம் குறித்த கல்வி அறிவை தரவேண்டிய கட்டாயத்தில் சமூகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வருமானம் வரும் நாடுகளை விட ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைனில் வரும் பாதிப்புகளை சமாளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல் மூலம் ரூ.5.03 கோடி அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் பயமுறுத்தல்களை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பீட்டா வெர்ஷன் 2.22.9.8 வாட்ஸ்ஆப்பில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்த செயலியில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
வாட்ஸ்ஆப்பில் வாட்ஸ்ஆப் பிசினஸ் என்ற செயலியும் தனியாக இருக்கிறது. வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த செயலி பல அம்சங்களை வழங்குகிறது. இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் தற்போது புதிய அம்சமும் இடம்பெறுகிறது.
இதன்படி வாட்ஸ்ஆப் ப்சினஸ் பயனர்கள் தங்களுடைய ஷார்ட் லிங்கை வாடிக்கையாளர்களின் செயலியில் பகிர முடியும். இதன்மூலம் ஒருவரது வணிகம் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு முன் க்யூஆர் கோட் மட்டுமே ஷேர் செய்யும் வகையில் இருந்த நிலையில் அதற்கு பதில் ஷேர் ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருவருடைய போன் நம்பர் இல்லாமலேயே அவரது பிஸ்னஸ் அக்கவுண்டை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பீட்டா வெர்ஷன் 2.22.9.8 வாட்ஸ்ஆப்பில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் டிவி, யூடியூப் மியூசிக், யூடியூப் ஸ்டூடியோ உள்ளிட்ட பல அம்சங்கள் சரியாக இயங்கவில்லை என கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக யூடியூப் இருக்கிறது. யூடியூப்பில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் யூடியூப் தளம் நேற்று இரவு சில மணி நேரம் முடங்கியதாக பல பயனர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக யூடியூப்பில் உள்ள சைட்பார் மற்றும் லைப்ரேரி அம்சங்கள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல யூடியூப் டிவி, யூடியூப் மியூசிக், யூடியூப் ஸ்டூடியோவும் சரியாக இயங்கவில்லை.
இந்த பிரச்சனை குறித்து யூடியூப் நிறுவனமும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், நேற்று ஏற்பட்ட முடக்கத்தில் பலரால் யூடியூப்பில் லாகின் செய்ய முடியவில்லை, செட்டிங்ஸ் சரியாக வேலை செய்யவில்லை, வீடியோக்கள் கூட சரியாக பார்க்க முடியவில்லை என பலர் புகார் அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 10,000 பயனர்கள் யூடியூப் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
யூடியூப்பில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிட்டது. சில பிரச்சனைகளை சரி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறியுள்ளது.
இந்த போன்களுக்கு 12 மாத வாரண்டியும், போன் பிடிக்கவில்லை என்றால் 7 நாட்களில் திரும்பித்தரும் திட்டத்தையும் ஃபிளிப்கார்ட் வைத்துள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட போன்களை விற்கும் தனி சேவையை வழங்கி வருகிறது.
இதில் ஆப்பிள், கூகுள், சாம்சங், ரியல்மி, ரெட்மி ஆகிய போன்களை வாடிக்கையாளர்கள் நல்ல விலைக்கு விற்கவும், வாங்கவும் முடியும்.
ஃபிளிப்கார்டில் விற்கப்படும் இந்த போன்கள் குறைந்த அளவே முந்தைய வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், முழுதாக பாதிப்பில்லாமல் இயக்கூடியதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஃபிளாக்ஷிப் போன்கள் முதல் மிட்ரேஞ்ச் சாதனங்கள் வரை இதில் விற்கப்படுகின்றன.
பயன்படுத்தப்பட்ட போன்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கும் ஃபிளிப்கார்ட் 47 தர ஆய்வை நிபுணர்களால் செய்யப்பட்டு பிறகே விற்பனைக்கு வைக்கிறது.
பயன்படுத்தப்பட்ட போன்களில் தரத்தை வைத்து அந்த போன் 5 வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த போன்களுக்கு வாடிக்கையாளர்கள் 12 மாத வாரண்டியும் பெறமுடியும். இந்த போன்களை 7 நாட்களில் திரும்பித்தரும் திட்டத்தையும் ஃபிளிப்கார்ட் வைத்துள்ளது.
இந்த பயன்படுத்தப்பட்ட போன்களுக்கு தற்போது தள்ளுபடி, சலுகைகளை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஐபோன் எஸ்இ போன் 32 ஜிபி வேரியண்டை ரூ.8,449-க்கு வாங்க முடியும், ஐபோன் 6எஸ் ஸ்மார்ட்போனை ரூ.11,999 (32ஜிபி) ஐபோன் 6 பிளஸ் ரூ.13,499, ஐபோன் 7 ரூ.14,499க்கும் வாங்க முடியும். 64ஜிபி ஐபோன் எக்ஸ் மாடலை ரூ.30,999க்கு பெற முடியும்.
அதேபோல பிக்ஸல் 3 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் (128 ஜிபி) ரூ.15,999க்கு கிடைக்கும். 64ஜிபியின் விலை ரூ.13,899க்கும், பிக்ஸல் 3ஏ எக்ஸ் எல் ரூ.14,275க்கும் கிடைக்கும்.
சாம்சங் போனை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்20 (128 ஜிபி) ரூ.37,999க்கும், சாம்சங் கேலக்ஸி எஃப்62 ரூ.16,990க்கும், சாம்சங் கேலக்ஸி எஃப்12 கேப் ரூ.9997க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் என அனைத்து வகையான தளங்களிலும் இந்த இரட்டை தம்ஸ்அப் பட்டன் வழங்கப்படவுள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பயனர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸில் கேம்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.
இந்நிலையில் நெட்ஃபிலிக்ஸ் தற்போது ‘Two Thumbs up' என்ற அம்சத்தை கொண்டு வருகிறது. பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படும் பகுதியை மேம்படுத்தப்படுத்துவதற்காக இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போத் நெட்ஃபிலிக்ஸில் தம்ஸ் அப், தம்ஸ் டவுன் என்ற இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இதில் தம்ஸ் அப் எனக்கு பிடித்துள்ளது என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தம்ஸ் டவுன் எனக்கு பிடிக்கவில்லை என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தம்ஸ் அப் பட்டன், இந்த வீடியோ எனக்கு மிக விருப்பமானதாக இருக்கிறது என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளத்ஹு.
இப்போது ஒரு நிகழ்ச்சி அல்லது திரைப்படத்திற்கு இரண்டு தம்ஸ் அப் பட்டனை ஒருவர் தருகிறார் என்றால், அவருக்கு அதே வகையான நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் அல்லது அதே இயக்குநர் இயக்கிய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் என அனைத்து வகையான தளங்களிலும் இந்த இரட்டை தம்ஸ்அப் பட்டன் வழங்கப்படவுள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ‘Two Thumbs Up' என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நெட்ஃபிலிக்ஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தை பார்த்த பயனர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த வீடியோக்களுக்கு பக்கத்தில் இருக்கும் Two Thumbs Up கிளிக் செய்து தனது விருப்பதை தெரிவிக்கலாம்.
இதன்மூலம் அந்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை போலவே இருக்கும் மற்ற திரைப்படங்களை அல்லது அந்த திரைப்பட இயக்குநரின் மற்ற படைப்புகளை நெட்ஃபிலிக்ஸ் பரிந்துரை செய்யும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடத்தில் நடந்தது போலவே இந்த வருட நிகழ்ச்சியும் ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான WWDC நிகழ்ச்சியை ஜூன் 6-ம் தேதி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களில் நடந்தது போலவே ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஐஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ்9 பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேசமயம் இந்த ஆண்டு ஆப்பிள் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்ட புதிய சாதனத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆப்பிள் ஐஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ்9 அப்டேட்டில் நோட்டிஃபிகேஷன், புதிய ஆரோக்கியத்தை அளவிடும் அம்சங்கள் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
அதேபோல மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகுமெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ட்சுவல் ரியாலிட்டி ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் மென்பொருட்களும் இதில் இடம்பெறவுள்ளன.
இதனால் ஹெட்செட் மூலமே நாம் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அம்சம் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக ஆப்பிள் புதிய மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ மாடல்கள், அப்டேட் செய்யப்பட்ட மேக் மினி, 24 இன்ச் ஐமேக் ஆகியவற்றையும் இந்த வருடம் வெளியிடலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் ஸ்னேப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், இந்த புதிய போனில் மீடியாடெக் வழங்கப்படவுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7-inch FHD+ OLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்படுகிறது. அதேபோல இதில் MediaTek Dimensity 8100 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் ஸ்னேப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், இந்த புதிய போனில் மீடியாடெக் வழங்கப்படவுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 50MP சோனி IMX766 ஷூட்டர் OIS, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்ஸல் டெலிமேக்ரோ ஷூட்டர் ஆகியவை வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த கேமராவின் முன்பக்கம் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி சென்சார் வழங்கப்படவுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை 5000mAh பேட்டரி 150W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வழங்கப்படவுள்ளது.
இந்த போனிற்கான டீசர் தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி 43 Y1S ப்ரோ ஸ்மார்ட்டிவி இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்த டிவியில் 4கே UHD ரெஷலியூஷன், கோடிக்கணக்கான நிறங்கள், ஒவ்வொரு பிரேமிலும் துல்லியமான காட்சிகளை வழங்கும் 10 bit கலர் டெஃப்த் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதிலுள்ள அதிநவீன காமா இன்ஜின் அம்சம், பயனர்களுக்கு ரியல் டைம் இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது. மேலும் இந்த டிவி HDR10, HDR10+ மற்றும் HLG ஃபார்மட்டுகளை வழங்குகிறது.
கேம் விளையாடுபவர்களுக்காக இந்த டிவியில் Auto Low latency mode தரப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச்சை இந்த டிவியுடன் இணைக்கலாம்.
இதில் உள்ள ஸ்மார்ட் ஸ்லீப் கண்ட்ரோல் அம்சம், நாம் தூங்கிவிட்டால் தானாக டிவி அணைந்துவிடும்படி செய்கிறது.
இந்த டிவியில் சினிமா ஒலியை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குவதற்காக டால்பி ஆடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 24W அவுட்புட் தரும் 2 ஃபுல்ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த டிவியின் விலை இந்தியாவில் ரூ.29,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
இந்த செய்தி ஆப்பிள் சப்போர்ட் பக்கத்தில் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களின் சார்ஜிங் பற்றிய கவலைகளை போக்க புதிய சார்ஜர் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சார்கர் 35W சக்தியை கொண்டுள்ளதாகவும், கேலியம் நைட்ரைட் என்ற செமி கண்டெக்டரை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மற்ற பவர் சார்ஜர்களை விடவும் சக்தி வாய்ந்தது எனவும், இதில் ஒரு போர்ட்டுக்கு பதில் இரண்டு போர்ட் தரப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் ஆப்பிள் பயனர்கள் ஒரு சார்ஜர் மூலம் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
குறிப்பாக ஐபோன், ஆப்பிள் வாட்ச் என எதை வேண்டுமானாலும் இதில் சார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஆப்பிள் சப்போர்ட் பக்கத்தில் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






