என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஆப்பிள்
எமோஜி வெளியிட்டு சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது ஐ.ஓ.எஸ். அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ள எமோஜிக்களில் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயனர்களுக்கு ஆண் கருவுற்று இருப்பதை வெளிப்படுத்தும் எமோஜியை வெளியிட்டு உள்ளது. இத்துடன் திருநங்கைகளை குறிக்கும் எமோஜியும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரு எமோஜிக்களும் ஐ.ஓ.எஸ். 15.4 வெர்ஷன் அப்டேட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் மார்ச் மாத வாக்கிலேயே வெளியிடப்பட்டு விட்டது. எனினும், இம்முறை இந்த அம்சம் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில் ஆப்பிள் நிறுவனம் 35 புதிய எமோஜிக்களை வெளியிட்டு உள்ளது. இதில் கருவுற்று இருக்கும் எமோஜி, இரு பாலினத்திற்கும் சமமான எமோஜி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஆண் கருவுற்று இருக்கும் எமோஜியை வெளியிட்டு இருந்தது. 2019 வாக்கில் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடி, திருநங்கை எமோஜி உள்ளிட்டவைகளை 2019 வாக்கில் வெளியிட்டதை அடுத்து தற்போது இந்த எமோஜிக்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆரம்பத்தில் ஆப்பிள் வெளியிட்ட புது எமோஜிக்களை பார்த்த நெட்டிசன்கள், இது ஆண் கருவுற்று இருக்கும் எமோஜி இல்லை என்றும் அது வெறும் தொப்பை தான் என்றும் கூறி வந்தனர். இதுபற்றி பலர் நக்கலடித்து வந்தாலும், சிலர் ஆப்பிள் மீது எதிர்ப்பை தெரிவிக்கும் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டனர்.
ஐ.ஓ.எஸ். 15.4 அப்டேட்டில் சிரி விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைக்கு புது குரல் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆஃப்லைனில் தேதி மற்றும் நேரம் சார்ந்த விவரங்களை வழங்குவது, சஃபாரி பிரவுசரில் மாற்றங்கள் என பல்வேறு புது அம்சங்களை ஆப்பிள் வழங்கி இருக்கிறது. மேலும் இந்த அப்டேட் கொண்டு ஐபோன் பயனர்கள் முகக்கவசம் அணிந்த நிலையில், ஐபோன்களை அன்லாக் செய்ய முடியும்.
எனினும், இந்த அம்சம் ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும்.
Next Story






