search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ
    X
    ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ

    ஆப்பிள் ஷாட் ஆன் ஐபோன் போட்டியில் வென்ற இந்தியர்..

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ (Shot on iPhone Macro) போட்டியை சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்த போட்டியில் கலந்து கொள்வோர் தங்களின் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேக்ரோ மோட் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்பிக்க வேண்டும். 

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் அல்ட்ரா வைடு லென்ஸ் மூலம் மேக்ரோ புகைப்படங்களை எடுக்கும் வசதியை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. இந்த அம்சம் ஐபோன் 13 மினி, ஐபோன் 13 போன்ற மாடல்களில் வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் சமர்பித்த புகைப்படங்களில் சிறப்பான புகைப்படங்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்து வெற்றியாளர்களை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ போட்டியின் வெற்றியாளர்கள் விவரங்களை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி இறுதி சுற்றுக்கு பத்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சீனா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். வெற்றியாளர்கள் எடுத்த புகைப்படங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்படும். இது மட்டும் இன்றி ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா அக்கவுண்ட், சில நகரங்களின் விளம்பர பதாகை உள்ளிட்டவைகளில் பதிவிடப்படும். 

     ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ

    சமீபத்திய ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ வெற்றியாளர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். கோலாப்பூர் பகுதியில் வசிக்கும் பிரஜ்வால் சவுக்லே ஐபோன் 13 ப்ரோ மாடல் கொண்டு தான் எடுத்த புகைப்படத்தினை ஆர்ட் இன் நேச்சர் எனும் தலைப்பில் சமர்பித்தார். புகைப்படத்தில் இவர் சிலந்தி வலையில் தண்ணீர் துளிகளை மிக தெளிவாக படம்பிடித்து இருக்கிறார். 

    இவரின் புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வுக்குழுவில் இடம்பெற்று இருந்தவர்களில் ஒருவரான ஆரெம் டூப்ளெசிஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். "எளிமை, கிராபிக் மற்றும் அழகிய புகைப்படத்திற்கு இது உண்மையான சான்று. சிலந்தி வலை போன்றே மிக தத்ரூபமாக தண்ணீர் துளிகள் காட்சியளிக்கின்றன. எளிமையாக கூற வேண்டுமெனில் இது அட்டகாசமாக உள்ளது," என தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×