என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

சோனி PS5
சிறப்பு சலுகையுடன் விற்பனைக்கு வரும் சோனி PS5 - எப்போ தெரியுமா?
சோனி நிறுவனம் தனது புதிய PS5 கேமிங் கன்சோலின் அடுத்த விற்பனை தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சோனி பிளே ஸ்டேஷன் 5 (PS5) ரி-ஸ்டாக் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சோனி PS5 டிஜிட்டல் எடிஷன் மற்றும் ஸ்டாண்டர்டு எடிஷன் விற்பனை நாளை (ஏப்ரல் 22) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது ரி-ஸ்டாக் இது ஆகும். இம்முறை சோனி PS5 டிஜிட்டல் எடிஷன் மற்றும் ஸ்டாண்டர்டு எடிஷன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய தலைமுறை கேமிங் கன்சோல் மட்டுமின்றி சோனி நிறுவனம் இந்த முறை பண்டில் (bundle) சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் PS5 ஸ்டாண்டர்டு எடிஷன் மற்றும் கிரான் டூரிஸ்மோ 7 சேர்த்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்த கட்டணம் ரூ. 54 ஆயிரத்து 490 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய PS5 விலை மாற்றம் இன்றி ரூ. 49 ஆயிரத்து 990 என்றே இருக்கிறது. எனினும், ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள கிரான் டூரிஸ்மோ 7 கேம் புதிய ரி-ஸ்டாக் விற்பனையில் ரூ. 499-க்கு வழங்கப்படுகிறது. PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய விற்பனைகளை போன்றே இம்முறையும் சோனி PS5 கன்சோல் ShopatSC வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட், விஜய் சேல்ஸ் கேம்ஸ்திஷாப், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா மற்றும் பிரீபெயிட் கேம் கார்டு உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும். அனைத்து தளங்களிலும் அதிகளவு யூனிட்கள் இம்முறை விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.
Next Story






