என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் சிறிய வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 சீரிசில் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இவை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் பெயரில் முறையே 6.3 மற்றும் 6.8 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் இரு மாடல்களுடன் மற்றொரு மாடலை புதிதாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் இணையத்தில் வெளியாகியுள்ளது. கேலக்ஸி நோட் சிறிய வெர்ஷன் SM-N770F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நம்பரில் N என்ற எழுத்தே ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் சீரிஸ் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி நோட் சீரிஸ் மாடல்கள் SM-N9xx என்ற மாடல் நம்பர்களை கொண்டிருந்தன.
முன்னதாக 2014 ஆம் ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி நோட் 3 நியோ மாடலில் SM-N750 எனும் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் SM-N770F என்ற பெயரில் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 3 நியோவின் மேம்பட்ட மாடலாக வெளியாகும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்தளவு குறைவாக இருக்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் எஸ் பென் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
கூகுளின் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனின் விவரம் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 ஸ்டேபில் அப்டேட் கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஒன்பிளஸ் 7டி பெற இருக்கிறது. ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கூகுளின் முதன்மை செயலிகள் மற்றும் சேவைகள் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
கடந்த வாரம் ஹூவாய் நிறுவனம் தனது மேட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10 தளத்துடன் வெளியிட்டது. எனினும், இதில் கூகுள் சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கிடைக்கும் புதிய அம்சங்களை பார்ப்போம்:

பிரைவசி கண்ட்ரோல்: பிரைவசி செட்டிங்களை மிக எளிமையாக ஒற்றை இடத்தில் மாற்றிமையக்க முடியும். இதனால் பயனர்கள் தங்களின் டேட்டா எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தீர்மானிக்க முடியும்.
லொகேஷன் கண்ட்ரோல்: உங்களின் லொகேஷன் செயலிகளுடன் எப்போது பகிரப்படுகிறது என்பதை தீர்மானிக்க முடியும். இதற்கு எல்லா நேரமும், பயன்பாட்டில் இருக்கும் போது மட்டும் அல்லது எப்போதும் வேண்டாம் என மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. பயனர்கள் இதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் ரிப்ளை: குறுந்தகவல்களுக்கு நீங்கள் அனுப்ப நினைக்கும் பதில்கள் பரிந்துரைக்கப்படும். இதில் வெளியே உணவகம் செல்ல நண்பர் அழைக்கும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து வழியை அறிந்து கொள்ள முடியும்.
ஜெஸ்ட்யூர் நேவிகேஷன்: ஜெஸ்ட்யூர்களை கொண்டு நேவிகேஷன் சேவையை வேகமாக இயக்க முடியும். இதன் மூலம் அம்சங்களை திரையை தொடாமலேயே இயக்கலாம்.
டார்க் தீம்: இந்த அம்சம் கொண்டு ஸ்மார்ட்போன் பேட்டரி தீர்ந்து போகும் சமயத்தில் அதனை சிறிது நேரத்திற்கு பேக்கப் வழங்கும் வகையில் சேமிக்க முடியும்.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் ரூ. 4 லட்சத்திற்கான கப்பீடு வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ. 599 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ரூ. 4 லட்சத்திற்கான காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது.
84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் காப்பீடு திட்டத்தை பாரதி ஆக்சா வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வாடிக்கையார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் இது மற்ற வட்டாரங்களிலும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த சலுகையில் வழங்கப்படும் காப்பீடு சலகை 18 முதல் 54 வயதுடைய அனைவருக்கும் வழங்கப்பசுகிறது. இதற்கென மருத்துவ பரிசோதனை எதுவும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏறப காப்பீடு திட்டத்தின் நகல் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காப்பீடு திட்டத்தை முழுக்க டிஜிட்டல் முறையில் மேற்கொண்டு, நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல்முறை ரீசார்ஜ் செய்து எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் தேங்ஸ் அல்லது ஏர்டெல் ரீடெயிலர் மூலம் காப்பீடு சலுகையை பெற்றுக் கொள்ள முடியும்.
அமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ என்ற பெயரில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4 ஆம் தேதி நள்ளிரவு வரை சலுகை திட்டத்தை அறிவித்து உள்ளது. அமேசானின் ‘பிரைம்’ வாடிக்கையாளர்கள் 28 ஆந் தேதி மதியம் 12 மணி முதல் இந்த சலுகையை பெறலாம்.
இந்த விற்பனை காலத்தில் இதுவரை இல்லாத பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அளிக்கப்படுகின்றன. விதவிதமான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேமராக்கள், டி.வி., சமையலறை உபகரணங்கள், அழகுசாதன, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, பஜாஜ் ஃபின்செர்வ் மூலம் வாங்கும் பொருட்களுக்கு சுலப தவணை அளிக்கப்படுகின்றன.

அதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதமும், அனைத்து வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 75 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. உள்நாட்டு விமான பயணத்துக்கான டிக்கெட் ‘புக்’ செய்பவர்களுக்கு ரூ.2,500 ‘கேஷ் பேக்’ தரப்படும். குறிப்பாக அமேசான் இணையதளத்தில் மாபெரும் இந்திய திருவிழா குறித்த பக்கத்தை பார்ப்பவர்களுக்கு ரூ.900 மதிப்பில் சலுகைகள் காத்திருக்கின்றன.
சாம்சங், விவோ, ஒன்பிளஸ், சியோமி, ஓப்போ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதுடன், ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6 ஆயிரம் வரையில் கவர்ச்சிகரமான ‘எக்ஸ்சேஞ்ச்’ சலுகையும் அளிக்கப்பட உள்ளது.
மேலும், ‘பவர் பேங்க்’ மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் குறைவான விலையில் அளிக்கப்படுகிறது. பிரபல நிறுவனங்களின் மடிக்கணினி வகைகள் சுலபதவணை திட்டத்தில் ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் முன்பதிவினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் மேற்கொள்ளலாம்.
புதிய ஆப்பிள் சாதனங்களை முன்பதிவு செய்வோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு மாத தவணை முறை சேவையை பயன்படுத்தும் போது ரூ. 6,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடியும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 11 ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை 64 ஜி.பி. மாடலுக்கு ரூ. 64,900 என்றும் 128 மற்றும் 256 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 69,900 மற்றும் ரூ. 79,900 விலையில் துவங்குகிறது.

ஐபோன் 11 ப்ரோ மாடலையும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை ரூ. 99,900 என துவங்குகிறது. இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,13,900 மற்றும் ரூ. 1,31,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,23,900 மற்றும் ரூ. 1,41,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடலை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க மாடலான 40எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 40,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 44எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 43,900, 40எம்.எம். ஜி.பி.எஸ். + செல்லுலார் ரூ. 49,900, 44எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ரூ. 52,990, 40எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரூ. 65,900, 40எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானிஸ் லூப் ரூ. 69,900, 44எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானிஸ் லூப் விலை ரூ. 73,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இவற்றின் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.
தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் காண்டாக்ட்களின் ஸ்டேட்டஸ் மியூட் செய்யும் போது, அவை சற்றே மறைக்கப்பட்ட நிலையில், கீழ்புறமாக தெரியும். புதிய 2.19.260 பீட்டா பதிப்பில் மியூட் செய்யப்பட்டவற்றை முழுமையாக மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
புதிய அம்சம் ஹைடு மியூட்டெட் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பீட்டா 2.19.260 பதிப்பை பயன்படுத்துவோர் புதிய அம்சத்தை பயன்படுத்த முடியும். ஒருவேளை செயலியை அப்டேட் செய்த பின்பும், இந்த அம்சம் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை ரீ-இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.

இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் பேமன்ட் வசதி வழங்குவதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மெக்சிகோவிலும் இதே அம்சம் சோதனை செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.222 பதிப்பில் வாட்ஸ்அப் ஃபிரம் ஃபேஸ்புக் எனும் டேக்லைன் சேர்க்கப்பட்டது.
இத்துடன் செயலியில் கைரேகை மூலம் லாக் செய்யும் வசதியும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் செயலியை மற்றவர்கள் எளிதில் பயன்படுத்த விடாமல் செய்யும். இது கைரேகை பதிவிட்டால் மட்டுமே செயலியை பயன்படுத்த வழி செய்யும்.
புகைப்படம் நன்றி: Saigopi/Twitter
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ ஏஸ் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இரு ஒப்போ ஸ்மார்ட்போன்களில் ஒன்று 65 வாட் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடனும், மற்றொன்று சாதாரன சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்துவிடுகிறது. இதே பதிவு ஒப்போவின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கிலும் பதிவிடப்பட்டது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ஒப்போவின் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேட்டரி 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது. ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 வாட் சார்ஜர் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ ஏஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், வரும் நாட்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் டீசர் வடிவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 209 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் டேட்டா தவிர இதர பலன்களும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் தினசரி டேட்டா மட்டுமின்றி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. புதிய சலுகை அனைத்து வட்டாரங்களிலும் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

வோடபோன் நிறுவனம் ரூ. 250 விலைக்குள் சுமார் நான்கு மாதாந்திர காம்போ சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 169, ரூ. 199, ரூ. 209 மற்றும் ரூ. 229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ரூ. 250 விலையில் மூன்று சலுகைகளை முறையே ரூ. 169, ரூ. 199 மற்றும் ரூ. 249 கட்டணங்களில் வழங்கி வருகிறது.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது சேவையின் குறைந்த பட்ச ரீசார்ஜ் தொகையை ரூ. 24 இல் இருந்து ரூ. 20 ஆக குறைத்தது. தற்சமயம் ரூ. 59 விலையில் வாராந்திர சலுகையை வழங்கி வருகிறது. வோடபோன் நிறுவனம் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்குகிறது.
இந்த சலுகைக்கான வேலிடிட்டி ஏழு நாட்கள் ஆகும். அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோனின் ரூ. 59 விலை சலுகையில் டேட்டா தவிர மற்ற பலன்கள் வழங்கப்படவில்லை,
வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் எங்கெல்லாம் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அந்தந்த நாட்டின் விதிகளுக்கேற்ப வரிகளை செலுத்தவேண்டும்.
சில நாடுகளில் வரி குறைவாக இருக்கும். சில நாடுகளில் அதிகமாக இருக்கும். அப்படி அதிகப்படியான வரியை தவிர்க்க பெருநிறுவனங்கள் பல்வேறு வரி தவிர்ப்பு முறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ரூ.13 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையில் கூகுள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசு உடனான வரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வரி ஏய்ப்புக்கான அபராத தொகை 500 மில்லியன் யுரோ (ரூ.3 ஆயிரத்து 933 கோடி) மற்றும் வரி பாக்கி தொகை 465 மில்லியன் யுரோ (ரூ.3 ஆயிரத்து 659 கோடி) ஆகியவற்றை செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.
நான்கு ரியர் கேமிராக்களுடன், கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்பி கேமிரா போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட ரியல்மி 5 ஸ்மார்ட்போன்கள் ஸ்டோர்களில் விற்பனையை தொடங்கியுள்ளது.
ரியல்மி 5 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்ட ‘ப்ளாஷ் சேல்’ விற்பனையின்போது சுமார் 1,20,000 போன்கள் விற்பனை ஆகின.
3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.9,999 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான போன் ரூ.10,999 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.11,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ப்ளூ மற்றும் பர்ப்பிள் ஆகிய இரு நிறங்களில் வெளியாக உள்ளது. 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ்3+ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்பி கேமிராவும் உள்ளது.

ஆன்லைன் மூலமாக ரியல்மி 5 ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு ரியல்மி தளம், ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல, ரியல்மி 5 போனை இன்று முதல் ஸ்டோர் விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து ரியல்மி மற்றும் இதர ஸ்டோர்களில் இனி ரியல்மி 5 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நேற்று முதல் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் அந்நிறுவனம் ஆர்கேட் கேமிங் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் 2019 ஆப்பிள் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு (செப்டம்பர் 10) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
டிம் குக் அறிமுக உரையுடன் துவங்கிய நிகழ்வில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் ஆர்கேட் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவையும் அறிமுகமானது.

ஆப்பிள் ஆர்கேட்:
ஆப்பிள் ஆர்கேட் சேவை இந்தியாவில் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதே தினத்தில் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளமும் அறிமுகமாகிறது. இதற்கான மாத கட்டணம் ரூ. 99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இவற்றில் சில கேம் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது.

ஆப்பிள் டி.வி. பிளஸ்:
ஆர்கேட் கேமிங் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் 100 சேவையும் ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த சேவை உலகம் முழுக்க 100 நாடுகளில் கிடைக்கும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைக்கான மாத கட்டணம் ரூ. 99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஐபோன், ஐபேட், ஆப்பிள் டி.வி., மேக் அல்லது ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களை வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. டி.வி. சேவையில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. இவற்றில் சில நிகழ்ச்சிகளுக்கான முன்னோட்டமும் ஆப்பிள் நிகழ்வில் வெளியிடப்பட்டன.
ஜியோவின் சலுகை அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களும் தங்களது சலுகைகளை மாற்றியமைத்து வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
நம் நாட்டில் பொதுத்துறையைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. முக்கியமாக இந்நிறுவனத்தின் பெருமளவு வருவாய் அதன் ஊழியர்களுக்கே செல்வதால், அந்நிறுவனம் மாபெரும் சவால்களை கண்டு வருகிறது.

அதில், ஜியோ, ஏர்டெல், வோடாபோன் போன்றவை தினமும் பயனாளர்களுக்கு பல ஆஃபர்களை அளித்து அவர்களை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் பி.எஸ்.என்.எல் தற்போது களம் இறங்கியுள்ளது.
பயனாளர்களுக்கு ரூ. 1,999 விலையில் தினமும் 33 ஜி.பி டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்தியா முழுவதிலுமுள்ள லேண்ட்லைன் சேவையில் வாய்ஸ் கால் வசதியும் கிடைக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் வி ஃபைபர் , மற்றும் ஜியோ பைபர் போன்றவற்றின் (250mbps ) வேகத்தை விட பி.எஸ்.என்.எல் வேகம் குறைவாக உள்ளது.
தினசரி அளவை கடந்தால் 4 mbps வேகம் குறையும். இந்த பிராட்பேண்ட் சலுகையில் பயனாளர்களுக்கு தினமும் 33 ஜி.பி டேட்டா. இதன் வேகம் 100 mbps, நாள் தோறும் வழங்கப்படும் டேட்டா அளவை தாண்டினால் அதன் வேகம் 4 mbps குறையும். மேலும்,சில ஆஃபர்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவன இணையதளத்தில் இது குறித்த முழு விவரங்களைப் பெறலாம்.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய ஆஃபரை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் தொலைத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், இதனால் ஏற்பட்டுள்ள போட்டியும் பல சலுகைகளை பயனாளர்களுக்கு அளித்து வருகிறது.

அதில், ஜியோ, ஏர்டெல், வோடாபோன் போன்றவை தினமும் பயனாளர்களுக்கு பல ஆஃபர்களை அளித்து அவர்களை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் பி.எஸ்.என்.எல் தற்போது களம் இறங்கியுள்ளது.
பயனாளர்களுக்கு ரூ. 1,999 விலையில் தினமும் 33 ஜி.பி டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்தியா முழுவதிலுமுள்ள லேண்ட்லைன் சேவையில் வாய்ஸ் கால் வசதியும் கிடைக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் வி ஃபைபர் , மற்றும் ஜியோ பைபர் போன்றவற்றின் (250mbps ) வேகத்தை விட பி.எஸ்.என்.எல் வேகம் குறைவாக உள்ளது.
தினசரி அளவை கடந்தால் 4 mbps வேகம் குறையும். இந்த பிராட்பேண்ட் சலுகையில் பயனாளர்களுக்கு தினமும் 33 ஜி.பி டேட்டா. இதன் வேகம் 100 mbps, நாள் தோறும் வழங்கப்படும் டேட்டா அளவை தாண்டினால் அதன் வேகம் 4 mbps குறையும். மேலும்,சில ஆஃபர்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவன இணையதளத்தில் இது குறித்த முழு விவரங்களைப் பெறலாம்.






