search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி 5 ஸ்மார்ட்போன்
    X
    ரியல்மி 5 ஸ்மார்ட்போன்

    ஆன்லைனில் மட்டுமின்றி ஸ்டோர்களிலும் ரியல்மி 5 விற்பனை தொடங்கியது

    நான்கு ரியர் கேமிராக்களுடன், கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்பி கேமிரா போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட ரியல்மி 5 ஸ்மார்ட்போன்கள் ஸ்டோர்களில் விற்பனையை தொடங்கியுள்ளது.
    ரியல்மி 5 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்ட ‘ப்ளாஷ் சேல்’ விற்பனையின்போது சுமார் 1,20,000 போன்கள் விற்பனை ஆகின.

    3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.9,999  4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான போன் ரூ.10,999  4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.11,999  என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ப்ளூ மற்றும் பர்ப்பிள் ஆகிய இரு நிறங்களில் வெளியாக உள்ளது. 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ்3+ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்பி கேமிராவும் உள்ளது.

    ரியல்மி 5

    ஆன்லைன் மூலமாக ரியல்மி 5 ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு ரியல்மி தளம், ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல, ரியல்மி 5 போனை இன்று முதல் ஸ்டோர் விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளது.

    இதையடுத்து ரியல்மி மற்றும் இதர ஸ்டோர்களில் இனி ரியல்மி 5 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நேற்று முதல் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
    Next Story
    ×