என் மலர்
நீங்கள் தேடியது "Apple Arcade"
ஆப்பிள் நிறுவனம் புதிதாக கேமிங் மற்றும் டி.வி. சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. #AppleEvent #AppleSpecialEvent
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஆர்கேட் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஆர்கேட் மொபைல் சாதனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கான கேமிங் சந்தா சேவையாகும்.
புதிய சேவையில் பயனர்களுக்கு அதிகளவு கேம்களை வழங்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் வால்ட் டிஸ்னி மற்றும் பல்வேறு பிரபல கேமிங் நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த சேவை ஐபேட், மேக் மற்றும் ஆப்பிள் டி.வி.யில் பயன்படுத்த முடியும்.
ஆப்பிள் ஆர்கேட் சேவையில் விளம்பரங்களோ அல்லது கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியிருக்காது. இந்த சேவை விரைவில் துவங்கப்படும் என்றும் இது உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிகமான நாடுகளில் கிடைக்கும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.

ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவையில் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பல்வேறு தரவுகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சேவை நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் மற்றும் கேபிள் டி.வி. உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. புதிய சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் நிகழ்ச்சிகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் இதர கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவையில் விளம்பரங்கள் இன்றி நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் டவுன்லோடு வசதியும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை உலகம் முழுக்க 100 நாடுகளில் துவங்கப்படும் என்றும் விரைவில் இந்த சேவை துவங்கப்பட இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.






