search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ரெனோ ஏஸ்
    X
    ஒப்போ ரெனோ ஏஸ்

    முப்பது நிமிடங்களில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்

    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    ஒப்போ ரெனோ ஏஸ் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இரு ஒப்போ ஸ்மார்ட்போன்களில் ஒன்று 65 வாட் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடனும், மற்றொன்று சாதாரன சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

    அதில் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்துவிடுகிறது. இதே பதிவு ஒப்போவின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கிலும் பதிவிடப்பட்டது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ஒப்போவின் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    ஒப்போ ரெனோ ஏஸ்

    ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேட்டரி 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது. ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 வாட் சார்ஜர் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ ஏஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், வரும் நாட்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் டீசர் வடிவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×