என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.
    • ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது

    மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் முதல் பாதியில் [ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில்] இந்த வளர்ச்சியானது ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 நிதியாண்டின் தொடக்கத்தில் எட்டிய வளர்ச்சியை விட இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.

    இந்த வளர்ச்சியில் ஐபோன்களின் ஏற்றுமதியே முன்னிலையில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது. அதவாது, 6.5 பில்லியன் டாலரில் ஐபோன் ஏற்றுமதியின் பங்கு 70 சதவீதம் ஆகும். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ஆன்லனில் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. இதற்கு முந்திய மாடல்களில் இருந்து அதிக அப்கிரேடுகளுடன் இவை தயாரிக்கடுவதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

     

    • வாட்ஸ்அப் செயலி உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.
    • பயனர் தேவையை பூர்த்தி செய்ய வாட்ஸ்அப் அடிக்கடி புது அம்சங்களை வழங்குகிறது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியில் பயனர்களுக்கு பயன்தரும் வகையில், அடிக்கடி புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அம்சம் விரைவில் வழங்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் வெளியிட உள்ளது.

    இந்த அப்டேட், ஆங்கிலம் மொழியில் குரல் பதிவாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் இனி மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

    முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த அம்சம் ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.
    • சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிஸ்னஸ் கைமாறுகிறது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன் லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடைப்பட்ட காலத்தில் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன் 97 நிறுவனம் மற்றும் பே.டி.எம். நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    அதன்படி சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிசினஸ் கைமாறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக ஆன்லன் டிக்டிங் தொழில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தத்க்கது.

    • எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி சமீபத்தில் தான் மாற்றப்பட்டது.
    • பல சமூக வலைதளங்களில் துப்பாக்கி எமோஜி மாற்றப்பட்டு இருக்கிறது.

    உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்திய பதிவு ஒன்றில் எலான் மஸ்க் துப்பாக்கி எமோஜி சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன என்பதை விளக்குகிறது.

    இது தொடர்பாக அவர் துப்பாக்கி எமோஜி கடந்த 2013 முதல் தற்போதைய 2024 ஆண்டு வரை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்பதை விளக்கும் படமும், அத்துடன் "துப்பாக்கி எமோஜிக்கள் மாறிக் கொண்டே வருவது தூக்கத்தை கெடுக்கும் மூளை வைரஸுடன் ஒத்துப்போகிறது, ஒரு முக்கிய கோட்பாடு போலியான தீங்கை உண்மையான தீங்குடன் சமன்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.



    எலான் மஸ்க்-இன் இந்த பதிவுக்கு ஒருத்தர், "துப்பாக்கி எமோஜியை நீக்கிவிட்டு, அதிபயங்கர ஆயுதங்களுடன் வெடி குண்டு எமோஜியை அவர்கள் மாற்றிய விதம் எனக்கு பிடித்திருந்தது," என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவவர், "நவீனத்துவத்தை தவிர்த்துவிட்டு, பழைய பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி ஆரஞ்சு நிற தண்ணீர் துப்பாக்கியாக இருந்து உண்மையான கைப்பாக்கியாக கடந்த ஜூலை மாதம் தான் மாற்றப்பட்டது. திடீரென ஏன் இப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து எக்ஸ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

    • சுதந்திர தினத்தை ஒட்டி விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்.
    • பல்வேறு விசேஷ நாட்களில் டூடுல் வெளியிடுவதை கூகுள் வழக்கமாக கொண்டுள்ளது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கும் நிறுவனம் கூகுள். உலக அளவில் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுலை தனது வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    அந்த வகையில், இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. டூடுலில் இந்திய பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.

    வழக்கம் போல விசேஷ டூடுலை க்ளிக் செய்ததும் இந்திய சுதந்திர தின சிறப்புகள், அதுபற்றிய வலைத்தள பதிவுகள் அடங்கிய சிறப்பு வலைப்பக்கம் திறக்கிறது.

    • இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம், வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும்.
    • இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். இந்த எண்ணிக்கையை தற்போது 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியுள்ளது

    இதன்மூலம் பயனாளர்கள் ஒரே பதிவில் 20 போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பதிவிட முடியும். இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும்.
    • சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது.

    சுதந்திர தினம் அன்று (ஆகஸ்ட் 15) ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற பல ஆன்லைன் வலைதளங்கள் பெரிய விற்பனை நிகழ்வை நடத்தும். அதேபோல் சியோமி தனது அதிகாரப்பூர்வ Mi.com இணையதளத்தில் இதேபோன்ற விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது.

    மேலும் இந்த தளத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்ற ஆன்லைன் தளங்களிலும் (அமேசான் போன்றவை) வழங்கப்படும். சுதந்திர தின விற்பனை இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கும் சியோமி என்று அறிவித்துள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி மாடல் ரூ.27,999 விற்பனையாகிறது.

    அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படும். 512ஜிபி வேரியண்ட் வாங்க விரும்புவோர் ரூ.31,999 செலவழிக்க வேண்டும்.

    உங்கள் பட்ஜெட் ரூ. 15,000க்கு குறைவாக இருந்தால், சியோமி அதன் பட்ஜெட் ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை வழங்குகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14,499 என்றும் மாறி இருக்கிறது.

    கூகுள் டிவி மூலம் இயங்கும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. சியோமி 55X ஜிடிவி 55 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.34,999-க்கு விற்பனையாகிறது.

    சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது. இந்த டிவிக்களில் 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், HDR10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    அமேசானில் ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி 12 5ஜி, நோட்13 ப்ரோ+, சியோமி 14 மற்றும் பல அமேசான் சுதந்திர தின (Amazon Great Freedom Festival) விற்பனையின்போது தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது
    • Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது

    ஐ-போன்கள், ஐ-பாட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் bypass செய்து தகர்க்கப்பட வாய்ப்புள்ளது, சேவை மறுப்பு எனப்படும் Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும், பாதுகாப்பைக் தகர்க்கும் spoofing தாக்குதல் மூலமும் ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆப்பிள் மென்பொருள்களான, 17.6 and 16.7.9 க்கு முந்தைய iOS and iPadOS வெர்ஷன்கள்,13.6.8 க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 10.6 க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 17.6 க்கு முந்தைய Safari வெர்ஷன்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த எச்சரிக்கை குறித்து ஆப்பிள் நிறுவனத்தில் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்தவாரம்தான் ஆப்பிள் சாதனங்களில் செக்கியூரிட்டி அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது குறிபிடத்தக்கது. 

    • கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன.
    • முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.

    ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புது விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்தை சேர்ந்த பலர் இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.

    பத்து நிமிடங்கள் ஓடும் புது விளம்பர வீடியோ கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது "Apple at Work – The Underdogs" சீரிசின் கீழ் வெளியாகி இருக்கும் ஐந்தாவது வீடியோ ஆகும்.

     


    வீடியோவில் நான்கு கதாபாத்திரங்கள் "அன்டர்டாக்ஸ்" என்று காட்டப்படுகின்றன. இவை பணியாற்றும் இடங்களில் ஆப்பிள் சாதனங்கள் மற்றும் மென்பொருள் மூலம் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சமீபத்திய வீடியோவில், கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன. இது தொடர்பாக காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் ரெயில் மற்றும் டக்டக் வண்டிகளில் பயணம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இவை தாய்லாந்தின் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த வீடியோவில், தாய்லாந்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, இன்றைய கால சூழல் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இதற்கு தாய்லாந்தை சேர்ந்த பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    • தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது.
    • அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அதிக பொய் சொல்லும்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏஐ தொழில்நுட்பம் பற்றி தொடர்ச்சியாக கருத்து பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில், அவர் ஏஐ ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் பற்றி மனம்திறந்துள்ளார்.

    சமீபத்திய பேட்டியில், "ஏஐ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. சின்ன விஷயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருக்கிறது."

    "தற்போது சின்ன விஷயங்களாக இருப்பவை, நாளடைவில் பெரிதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது இன்னும் அதிகளவு பொய் சொல்லும்," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகீரக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது," என்றார்.

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    • அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

    அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    ×