search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
    X

    ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

    • ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
    • கட்டமைப்பில் உள்ள குறைபாடு காரணமாக ஆண்ட்ராய்டு இந்த தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு என எச்சரிக்கை.

    ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரகால பதில் குழு (Indian Computer Emergency Response Team) உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பயனாளர்களின் முக்கியமான தகவல்களை பெறுவதற்கு இந்த தாக்குதலை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. கட்டமைப்பு, சிஸ்டம், கூகுள் ப்ளே சிஸ்டம் அப்டேட்ஸ் ஆகியவற்றில் உள்ள குறைபாடு காரணமாக இந்த தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் பொருத்தமான அப்டேட்ஸ்களை புதுப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

    கிடைக்கும் பாதுகாப்பு அப்டேட்ஸ்களை இன்ஸ்டால் செய்ய அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. உங்களுக்கு இந்த பாதுகாப்பு அப்டேட்ஸ் கிடைக்கவில்லை என்றால், பயனர்கள் நம்பிக்கையில்லா செயலிகள், தெரியாத இணையதளம், சந்தேகத்திற்குரிய லிங்க்ஸ் ஆகிவற்றைய தவிர்க்க ஆலோசனை வழங்கியுள்ளது. அப்டேட்ஸ் செய்துவிட்டால் பயனர்கள் அவர்களுடைய சாதனங்களை கடுமையான பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×