என் மலர்tooltip icon

    கணினி

    வோடபோன் ஐடியா நிறுவனம் ரெட் எக்ஸ் என்ற பெயரில் புதிய சலுகையை தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.



    வோடபோன் ஐடியா நிறுவனம் வோடபோன் ரெட் எக்ஸ் பெயரில் புதிய லிமிட்டெட் எடிஷன் போஸ்ட்பெயிட் சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. மாதம் ரூ. 999 கட்டணத்தில் கிடைக்கும் வோடபோன் ரெட் எக்ஸ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

    இதுதவிர ரூ. 20,000 மதிப்புள்ள பலன்களும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இதில் சர்வதேச ரோமிங், பிரீமியம் வாடிக்கையாளர் சேவை, விமான நிலையங்களின் ஓய்வறைக்கான அனுமதி, ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரத்யேக சலுகைகள் உள்ளிட்டவை அடங்கும்.

    இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வழக்கமான வோடபோன் ரெட் சலுகைகளுடன் கிடைக்கிறது. வோடபோன் ரெட் எக்ஸ் சலுகையில் ஒரு வருடத்திற்கான நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 மற்றும் வோடபோன் பிளே போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. 

    வோடபோன் ரெட் எக்ஸ்

    இதுதவிர ரூ. 2,999 மதிப்புள்ள ஐ-ரோம் சலுகையை பெற முடியும். இந்தியா மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்கள் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்யும் போது 10 சதவிகிதம் தள்ளுபடி பெற முடியும்.

    மேலும் வோடபோன் ரெட் எக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மட்டும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அதிகபட்சம் இரண்டு முறை ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    வோடபோன் ரெட் எக்ஸ் சலுகையின் பொது பலன்களை பொருத்தவரை அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மாதம் 150 ஜி.பி. டேட்டா எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

    புதிய வோடபோன் ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் வோடபோன் இந்தியா வலைத்தளம் மற்றும் மை வோடபோன் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    செப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் செப்-சோல் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    செப்ரானிக்ஸ் நிறுவனம் AAC கோடெக் உதவியுடன் 11 மணிநேர பேட்டரி லைஃப் கொண்ட, செப்-சோல் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இந்த இயர்போன்கள், உங்களது ஆடியோ அனுபவத்தை சிக்கலற்றதாக மாற்றும் விதமாக, ஒரு நெக்பேண்ட் வடிவமைப்பில் காந்த சக்தியுடைய இயர்பீசஸ் கொண்ட இன்-இயர் வகை இயர்போன்களுடன் கிடைக்கிறது. ஸ்டைலான தோற்றத்தில் உயர்ந்த தரத்திலான பிரீமியம் மாட் ஃபினிஷில், இந்த இயர்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த இயர்போன் ஆண்டிராய்டு/ ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் இயங்கும். இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் வருவதால் உங்கள் ஆர்வத்தைத் துரத்தி, கேள்விகள் கேட்டு, உடனடி பதில்களையும் பெற்றிட முடியும். பட்டனை அழுத்துவதன் மூலம், செப்-சோல் வயர்லெஸ் இயர்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை இயக்க முடியும்.

    செப்ரானிக்ஸ் செப்-சோல்

    சத்த அளவு மற்றும் மீடியா கட்டுப்பாடுகளுக்கான பட்டன்கள் போன்ற இதன் நிறைவான அம்சங்களே, இதனைச்செல்லும் வழியெங்கும் இசையைக் கேட்பவர்களுக்குச் சிறந்த தேர்வாக மாற்றுகிறது. டூயல் பேரிங் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் வசதியுடன் வருவதால், இந்த இயர்போனை இரு சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள முடியும். 

    இந்த இயர்போன் உட்கட்டமைக்கப்பட்ட மைக்கும் அழைப்பு வந்தால் வைப்ரேஷன் அலர்ட் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது. புதிய செப்-சோல் இயர்போன் கருப்பு, கிரே, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியா முழுவம் அனைத்து முன்னணி சில்லறை விற்பனையகங்களிலும் இந்த செப்-சோல் இயர்போன் ரூ. 2499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆஃபீஸ் ஆப் எனும் ஒற்றை செயலியில் மூன்று முக்கிய சேவைகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஆஃபீஸ் செயலி வெளியிடப்பட்டுள்ளது. புதிய செயலி ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வொர்டு, எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் என மூன்று பிரபல செயலிகளை ஒற்றை தளத்தில் வழங்குகிறது.

    புதிய செயலி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டிய நிலையை நீக்கி விடுகிறது. பொது பிரீவியூ வகையில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஆஃபீஸ் செயலி ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவும், ஐ.ஒ.எஸ். பயனர்கள் ஆப்பிள் டெஸ்ட் ஃபிளைட் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்.

    மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ்

    புதிய ஆஃபீஸ் ஆப் மொபைல் சாதனங்களில் தகவல்களை உருவாக்கும் பணியை எளிமையாக்குகிறது. உதாரணத்திற்கு புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை எடிட் செய்யக்கூடிய வொர்டு ஃபைலாகவோ அல்லது டேபில்களை அச்சிடப்பட்ட பக்கத்தில் இருந்து எக்செல் ஆக மாற்ற முடியும்.

    புதிய செயலியுடன் க்ரோமியம் சார்ந்து இயங்கும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. புத்தம் புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரில் என்டர்பிரைஸ் டேப் பக்கமும், மைக்ரோசாஃப்ட் 365 ஃபைல்களை நேரடியாக இயக்கும் வசதி கொண்டிருக்கும்.

    மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தற்சமயம் விண்டோஸ் 10, விண்டோஸ் 8எக்ஸ், விண்டோஸ் 7, மேக் ஒ.எஸ்., ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கிறது.
    ஆன்லைன் மூலம் உடனடியாக பான் கார்டு வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித்துறை துவங்க இருக்கிறது.



    வருமான வரித்துறை சார்பில் நிரந்தர கணக்கு எண்ணுடன் ‘பான் கார்டு’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையை பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பரிசீலனைக்கு பிறகு சில நாட்கள் கழித்து பான் கார்டு வழங்கப்படுகிறது.

    இந்த காலதாமதத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் உடனடியாக பான்கார்டு வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வர உள்ளது. அதன்படி ஆன்லைனில் பான்கார்டு பெற ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை மட்டுமே பதிவு செய்தால் போதும்.

    பான் கார்டு

    அதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் மூலம் உடனடியாக பான் கார்டு வழங்கப்படும். பான் கார்டு பெற வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 8 நாட்களில் ஆன்லைன் மூலம் உடனடியாக 62 ஆயிரம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் நாடு முழுவதும் வரி செலுத்தும் அனைவருக்கும் இத்தகைய முறையில் பான் கார்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பான்கார்டில் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
    வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தகவல்கள் திருடப்பட்டது பற்றி ஏற்கனவே அரசுக்கு தகவல் தெரிவித்ததாக வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.



    இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்திய சைபர் தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.-விடம் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கூறியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆனால் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என்று உறுதி அளித்துள்ளது.

    ஸ்பைவேர் கோப்புப்படம்

    உளவு பார்த்தது தெரிந்த உடனேயே அந்த மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஒ. நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். சைபர் தாக்குதல் நிகழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எசுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பயனாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது" என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
    பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இருந்து இந்திய வாக்காளர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. புதிய தகவல் தெரிவித்துள்ளது.



    இந்தியாவில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை 20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் இந்திய வாக்காளர்களை பற்றிய தனிப்பட்ட விவரங்களை இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது. 

    இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ.யிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணையை தொடங்கியது. ஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஆகிய இரு நிறுவனங்களிடமும் முழுமையான விளக்கத்தையும், தகவல்களையும் கேட்டது. 

    அந்த தகவல்களை இரு நிறுவனங்களும் அளித்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருவதாக சி.பி.ஐ. நேற்று தெரிவித்தது. அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான், வழக்குப்பதிவு செய்யலாமா, வேண்டாமா என்பதை சி.பி.ஐ. முடிவு செய்யும்.
    சிக்கன நடவடிக்கை காரணமாக 18,000 பேரை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    உலகின் முன்னணி கம்ப்யூட்டர்  நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசன்ட் நிறுவனம் இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே சென்னையில் தான் அதிக கிளைகளை கொண்டுள்ளது. காக்னிசன்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அதில், 2 லட்சம் பேர் இந்தியர்கள்.

    உலகில் பல்வேறு நாடுகளிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் செயல்படும் பல முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்து வழங்குவது, கம்ப்யூட்டர் நிர்வாக மேலாண்மையை மேற்கொள்வது போன்றவற்றை காக்னிசன்ட் செய்து வருகிறது. 

    இதேபோல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பல பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் காக்னிசன்ட் செய்து வந்தது. தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து காக்னிசன்ட் விலக உள்ளது. இதன் காரணமாக காக்னிசன்ட் நிறுவனத்துக்கு வரும் வருமானம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காக்னிசன்ட்

    இதை சரிக்கட்டவும், ஏற்கனவே உள்ள செலவினங்களை குறைக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று காக்னிசன்ட் முடிவு செய்து இருக்கிறது. முதற்கட்டமாக 7000 பணியாளர்கள் நீக்கப்பட உள்ளனர். ஆரம்ப கட்ட பணிகளில் உள்ளவர்கள், நடுநிலை பணியில் உள்ளவர்கள் இந்த வேலை நீக்கத்துக்கு ஆளாவார்கள்.

    மேலும் 5000 ஊழியர்கள் திறமை மேம்படுத்துவதற்காக உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், திறமை குறைவானவர்கள் நீக்கப்படுவார்கள். அது மட்டும் அல்லாமல் வரும் மாதங்களில் படிப்படியாக பலரை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 18,000 பேரை பணி நீக்கம் செய்வதற்கு காக்னிசன்ட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சியோமி நிறுவனம் இந்தியாவில் பண்டிகை காலத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனைக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளது.



    இந்தியாவில் பண்டிகை கால விற்பனையின் போது சியோமி நிறுவனம் 1.2 கோடி சாதனங்களை விற்றதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 40 சதவகிதிம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்தது.

    இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி நிறுவனம் மொத்தம் 85 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 37 சதவிகிதம் அதிகம் ஆகும். இந்திய சந்தையில் ஒரு மாத காலத்தில் வேறு எந்த நிறுவனமும் இத்தனை ஸ்மார்ட்போன்களை இதுவரை விற்றதில்லை என சியோமி தெரிவித்துள்ளது.

    அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 7எஸ் மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல்கள் முன்னணி்யில் இருந்தது. அமேசான் இந்தியா தளத்தின் பட்ஜெட் போன் பிரிவில் ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ரெட்மி நோட் 8 ப்ரோ

    ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி நிறுவனம் மொத்தம் ஆறு லட்சத்திற்கும் அதிக Mi டி.வி.க்களை விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 48 சதவிகிதம் அதிகம் ஆகும். ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் அதிகம் விற்பனையான டி.வி. மாடல்களில் Mi டி.வி. இருக்கிறது.

    இத்துடன் Mi சாதனங்கள் பிரிவில் மொத்தம் முப்பது லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் Mi பேன்ட் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து Mi பவர் பேங்க், Mi ஏர் பியூரிஃபையர் 2எஸ் உள்ளிட்டவை அதிகம் விற்பனையாகின.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ 360 மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    புதிய மோட்டோ 360 மூன்றாம் தலைமுறை மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவம் கொண்ட OLED டிஸ்ப்ளே, 360x360 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருகிறது. இதன் பக்கவாட்டுகளில் இரண்டு பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேல்புறம் உள்ள பட்டன் கொண்டு யூசர் இன்டர்ஃபேசில் ஸ்கிரால் செய்யலாம். 

    மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்

    கீழ்புறம் உள்ள பட்டன் கொண்டு ஆப் லான்ஸ் ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்யலாம். இதில் ஆல்வேஸ் ஆன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புதிய மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் வியர் ஒ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் என்.எஃப்.சி., ஜி.பி.எஸ். மற்றும் இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 355 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய ஒருமணி நேரம் மட்டும் போதும்.

    மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் விலை 350 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 24,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நவம்பர் மாத மத்தியில் துவங்குகிறது. இதன் விற்பனை டிசம்பர் மாத வாக்கில் துவங்குகிறது. புதிய மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். 13.2 இயங்குதளம் வெளியிடப்படுகிறது. இதில் புதிய எமோஜிக்கள், டீப் ஃபியூஷன் போன்று பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளத்தை கடந்த மாதம் வெளியிட்டது. பின் சில வாரங்களுக்கு பின் 13.13 அப்டேட் வெளியிடப்பட்டது. 

    இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2 இயங்குதளங்களை வெளியிட்டுள்ளது. இரு பதிப்புகளிலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐபோன் 11 சீரிஸ் மாடலின் டீப் ஃபியுஷன் கேமரா அம்சம் முதன்மையாக இருக்கிறது.

    இந்த அம்சம் ஏ13 நியூரல் என்ஜின் பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை அதிக தரத்தில் வழங்கும். இந்த அப்டேட் புதிய எமோஜிக்களை வழங்குகிறது. இவை ஆப்பிள் அனுமதித்த யுனிகோட் 12.0 தளம் சார்ந்து இயங்குகிறது. 

    ஐ.ஒ.எஸ். 13 எமோஜி

    இவற்றில் காது கேட்க செய்யும் கருவியுடன் இருக்கும் நபர், சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நபர் என பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    இதுதவிர மக்கள் கைகோர்த்து இருக்கும் எமோஜி பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிரி பிரைவசி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் சிரி, டிக்டேஷன் ஆடியோ ரெக்கார்டிங் ஹிஸ்ட்ரியை அழிக்க முடியும். இந்த அப்டேட் மூலம் சிரி ஐபோனில் வரும் குறுந்தகவல்களை வாசிக்க செய்யும் அம்சத்தை மீண்டும் வழங்குகிறது.

    புதிய அம்சங்கள் தவிர ஐபோன் மற்றும் ஐபேட் இயங்குதளங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டு, அவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 200 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை ரூ. 698 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படவில்லை. இத்துடன் இந்த சலுகை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். இல்லாமல் 200 ஜி.பி. டேட்டா மட்டும் 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கிடைக்கிறது. விரைவில் மற்ற வட்டாரங்களிலும் இந்த சலுகைக்கான அறிவிப்பு வெளியாகலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பி.எஸ்.என்.எல். ரூ. 698 சலுகை நவம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை அறிவித்தது. முன்னதாக பி.எஸ்.என்.எல். அறிவித்த இலவச வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளியன்று இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.



    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘லேண்ட்லைன்’ மற்றும் ‘பிராட்பேண்ட்’ வாடிக்கையாளர்கள் வரம்பற்ற (அன்லிமிடெட்) அழைப்புகளை செய்யும் வசதியை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

    இதன்படி வாடிக்கையாளர்கள், எந்த ஒரு ‘லேண்ட்லைன்’ மற்றும் செல்போன் எண்கள் வைத்திருக்கும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வரம்பற்ற அழைப்புகளை செய்யலாம். இந்த சலுகை அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல். இயக்குனர் விவேன் பன்சால் கூறும் போது, 

    “எங்களுடைய வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பும் இந்த வேளையில் பி.எஸ்.என்.எல். ‘லேண்ட்லைன்’ மூலம் சிறந்த அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம். 

    இதனால் விழாக்காலத்தை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம். எனவே நல்வாழ்த்துகள் என்பது சிறப்பான இணைப்பை கொடுப்பதினாலேயே தெரிவிக்கமுடியும். ‘பாரத் பைபர் சேவை’யின் கீழ் மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் அடுத்த சில மாதங்களில் இணைக்கப்படும். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் வழங்கப்படும். ‘பிராட்பேண்ட்’ சேவையில் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட இருக்கிறது''. என தெரிவித்தார்.
    ×