search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்
    X
    மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்

    அசத்தல் அம்சங்கள் நிறைந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ 360 மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    புதிய மோட்டோ 360 மூன்றாம் தலைமுறை மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவம் கொண்ட OLED டிஸ்ப்ளே, 360x360 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருகிறது. இதன் பக்கவாட்டுகளில் இரண்டு பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேல்புறம் உள்ள பட்டன் கொண்டு யூசர் இன்டர்ஃபேசில் ஸ்கிரால் செய்யலாம். 

    மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்

    கீழ்புறம் உள்ள பட்டன் கொண்டு ஆப் லான்ஸ் ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்யலாம். இதில் ஆல்வேஸ் ஆன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புதிய மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் வியர் ஒ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் என்.எஃப்.சி., ஜி.பி.எஸ். மற்றும் இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 355 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய ஒருமணி நேரம் மட்டும் போதும்.

    மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் விலை 350 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 24,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நவம்பர் மாத மத்தியில் துவங்குகிறது. இதன் விற்பனை டிசம்பர் மாத வாக்கில் துவங்குகிறது. புதிய மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×