என் மலர்tooltip icon

    கணினி

    பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.



    இந்தியாவில் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அனுமதி அளிக்கப்பட்டது முதல் இந்தியா முழுக்க படிப்படியாக பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் தாமதம் நிலவுகிறது. இந்நிலையில், சரிவில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்கும் வகையில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரவை இரு நிறுவனங்களின் இணைப்புக்கு சில தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது.

    டெலிகாம் கோப்புப்படம்

    பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.29,937 கோடி ஒதுக்கும். இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இரு நிறுவனங்களும் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும்வரை, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் துணை நிறுவனமாக எம்.டி.என்.எல். செயல்படும்.

    மறுசீரமைப்பு திட்டத்தின்படி, ரூ.15,000 கோடி மதிப்புக்கு தங்க பத்திரம் வெளியிட்டு பணம் திரட்டப்படும். ரூ.38,000 கோடி மதிப்புள்ள சொத்துகள், இன்னும் 4 ஆண்டுகளில் பணமாக்கப்படும். செலவை குறைப்பதற்காக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் முன்வைக்கப்படும். ஆனால், இரு நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது.

    என மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



    அசுஸ் நிறுவனம் சென்புக் ப்ரோ டுயோ, சென்புக் டுயோ, சென்புக் எடிஷன் 30 லேப்டாப் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இவை தைபெயில் நடைபெற்ற கம்ப்யூடெக்ஸ் 2019 மற்றும் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய அசுஸ் லேப்டாப் மாடல்களுடன் விவோபுக் எஸ்14, விவோபுக் எஸ்15 மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் விவோபுக் எஸ்15 மாடல் ஸ்கிரீன்பேட் 2.0 உடன் வழங்கப்படுகிறது.

     அசுஸ் சென்புக் ப்ரோ டுயோ

    அசுஸ் சென்புக் ப்ரோ டுயோ சிறப்பம்சங்கள்:

    - 15.6 இன்ச் 16:9 4K OLED தொடுதிரை டிஸ்ப்ளே
    - 9th Gen இன்டெல் கோர் ஐ9-9980HK பிராசஸர்
    - NVIDIA GeForce RTX 2060 GPU
    - 32 ஜி.பி. DDR4 2666MHz ரேம்
    - 1 டி.பி. PCIe Gen 3 x4 SSD
    - பேக்லிட் கீபோர்டு
    - 14 இன்ச் ஸ்கிரீன்பேட் பிளஸ் டச் டிஸ்ப்ளே
    - இன்டெல் வைபை 6, ப்ளூடூத் 5.0
    - தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் டிஸ்ப்ளே போர்ட்
    - 2 x யு.எஸ்.பி. 3.1 ஜென் 2 டைப்-ஏ, 1 x ஹெச்.டி.எம்.ஐ. 2.0
    - ஐ.ஆர். ஹெச்.டி. கேமரா
    - அசுஸ் சோனிக் மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம்
    - கார்டனா மற்றும் அலெக்சா குரல் அங்கீகார வசதி
    - 71Wh 8-செல் பேட்டரி
    - விண்டோஸ் 10 ப்ரோ

    அசுஸ் சென்புக் டுயோ

    அசுஸ் சென்புக் டுயோ சிறப்பம்சங்கள்: 

    - 14 இன்ச் 16:9 FHD நானோ எட்ஜ் டிஸ்ப்ளே
    - 10th Gen இன்டெல் கோர் ஐ7-10510U பிராசஸர்
    - NVIDIA GeForce MX250 GPU
    - அதிகபட்சம் 16 ஜி.பி. DDR3 2133MHz ரேம்
    - அதிகபட்சம் 1 டி.பி. PCIe Gen 3 x4 SSD
    - பேக்லிட் கீபோர்டு
    - 12.6 இன்ச் ஸ்கிரீன்பேட் பிளஸ் டச் டிஸ்ப்ளே
    - இன்டெல் வைபை 6, ப்ளூடூத் 5.0
    - 1 x யு.எஸ்.பி. ஜென் 2 டைப்-சி, 1 x யு.எஸ்.பி. 3.1 ஜென் 2 டைப்-ஏ
    - 1 x யு.எஸ்.பி. 3.1 ஜென் 1 டைப்-ஏ, 1 x ஹெச்.டி.எம்.ஐ.
    - 1 x ஆடியோ காம்போ ஜாக், 1 x மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர்
    - ஐ.ஆர். ஹெச்.டி. கேமரா
    - அசுஸ் சோனிக் மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம்
    - கார்டனா மற்றும் அலெக்சா குரல் அங்கீகார வசதி
    - 70Wh 4-செல் பேட்டரி
    - விண்டோஸ் 10 ஹோம்

    அசுஸ் நிறுவனம் தனது சென்புக் மாடல்களை 10th Gen இன்டெல் கோர் பிராசஸர்களுடன் அப்டேட் செய்துள்ளது. அந்த வகையில் சென்புக் 13, சென்புக் 14 மற்றும் சென்புக் 15 மாடல்களில் புதிய பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்

    - அசுஸ் சென்புக் டுயோ - ரூ. 89,990
    - சென்புக் ப்ரோ டுயோ - ரூ. 2,09,990
    - சென்புக் 13 - ரூ. 84,990
    - சென்புக் 14 - ரூ. 84,990
    - சென்புக் 15 - ரூ. 1,24,990
    - விவோபுக் எஸ்431 - ரூ. 54,990
    - விவோபுக் எஸ்532 - ரூ. 69,990

    புதிய அசுஸ் லேப்டாப் மாடல்கள் அமேசான், ப்ளிப்கார்ட், பே.டி.எம். மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் பிக்சல் பட்ஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கூகுள் நிறுவனம் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் இயர்டிப் மாற்றும் வசதி கொண்டிருக்கிறது. இது காதுகளில் சவுகரியமாக பொருந்தி கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஹைப்ரிட் வடிவமைப்பு கொண்டிருப்பதால், காதுகளில் இருக்கும் போது அசவுகரியத்தை ஏற்படுத்தாது. இத்துடன் பிக்சல் பட்ஸ் இயர்பட்ஸ் அடாப்டிவ் சவுண்ட் அம்சம் கொண்டிருக்கிறது. இது பயனர் இருக்கும் சூழலுக்கு ஏற்ப சத்தத்தை மாற்றியமைக்கும்.

    இதில் டூயல் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இது பின்னணியில் உள்ள சத்தத்தை குறைக்கும். இதில் உள்ள வாய்ஸ் அக்செல்லோமீட்டர் அதிக காற்றோட்டமான பகுதிகளிலும் குரலை மிகத் தெளிவாக கேட்க வழிசெய்யும். பிக்சல் பட்ஸ் நீண்ட தூர ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு போன் அருகில் இல்லாத போதும் இணைப்பில் இருக்கும்.

    பிக்சல் பட்ஸ்

    இத்துடன் ஆட்டோமேடிக் டிடெக்‌ஷன், பிளே, பாஸ், வால்யூம் மாற்ற டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளன. பிக்சல் பட்ஸ் இயர்பட்ஸ் இல் வழங்கப்பட்டுள்ள பில்ட் இன் பேட்டரி தொடர்ச்சியாக ஐந்து மணி நேரத்திற்கு பயன்படுத்த வழி செய்யும். பிக்சல் பட்ஸ் வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    கூகுளின் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் கிளியர்லி வைட், ஓ சோ ஆரஞ்சு, கொயட் மின்ட், ஆல்மோஸ்ட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 179 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 12,790) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்குகிறது.
    ஸ்மார்ட் சாதனங்களை உருவாக்குவதில் பெயர்பெற்ற நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.



    ஸ்மார்ட் உபகரணங்களை உற்பத்தி செய்வதில் பிரபலமாக அறியப்படும் நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. கலர்ஃபிட் ப்ரோ 2 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த கலர்ஃபிட் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 மாடலில் 1.3 இன்ச் கலர் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக டைனமிக் வாட்ச் ஃபேஸ்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, மேம்பட்ட பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் உறக்கம், இதய துடிப்பு ஆர்க்கியம் போன்றவற்றை டிராக் செய்யும் வசதியும் கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2

    நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 சிறப்பம்சங்கள்:

    - 1.3 இன்ச் 240x240 பிக்சல் எல்.சி.டி. டச் ஸ்கிரீன்
    - ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி
    - இதய துடிப்பு ஆரோக்கியத்தை டிராக் செய்யும் வசதி
    - உறக்கத்தை டிராக் செய்யும் வசதி
    - அழைப்புகள், டெக்ஸ்ட் என அனைத்து ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்
    - எடை: 35 கிராம்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - ஏழு முதல் பத்து நாட்களுக்கான பேட்டரி
    - 45 நாட்கள் ஸ்டான்ட்-பை

    நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்று (அக்டோபர் 15) முதல் துவங்குகிறது. ஜெட் பிளாக் தவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் டீல் கிரீன் மற்றும் மிஸ்ட் கிரே போன்ற நிறங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 69 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகை வோடபோனின் ஆல் ரவுண்டர் சலுகைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் நிறுவனம் ஏற்கனவே இதேபோன்ற சலுகையை ரூ. 45 விலையில் அறிவித்திருந்தது.

    தற்சமயம் வோடபோன் வழங்கி வரும் ரூ. 35, ரூ. 65, ரூ. 95, ரூ. 145 மற்றும் ரூ. 245 சலுகைகளுடன் புதிய சலுகையும் இணைந்திருக்கிறது. புதிய ரூ. 69 சலுகை அறிவிக்கப்பட்டதும் சில வட்டாரங்களில் ரூ. 65 சலுகை நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    போன் பயன்பாடு

    புதிய ரூ. 69 சலுகையில் வாய்ஸ் கால் சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இச்சலுகை ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், டெல்லி போன்ற வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வாய்ஸ் கால் சேவையை தவிர 150 லோக்கல், எஸ்.டி.டி. அல்லது ரோமிங் நிமிடங்கள், 250 ஜி.பி. 4ஜி அல்லது 2ஜி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    புதிய சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்புக்கான வேலிடிட்டியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இதன் வேலிடிட்டி 28 நாட்களில் துவங்கி அதிகபட்சம் 84 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. பெரும்பாலான ஆல் ரவுண்டர் சலுகைகளை கொண்டு பயனர்கள் அதிக செலவின்றி தங்களின் சேவைக்கான வேலிடிட்டியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
    அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.



    ஹூவாமி பிராண்டு இந்தியாவில் அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.65 இன்ச் சூப்பர் ரெட்டினா கிரேடு AMOLED ஸ்கிரீன், கஸ்டம் மாட்யூலர் டையல், கலர்ஃபுல் லைட் மெட்டல் பாடி, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் மற்றும் 12 ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிக்களை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

    இதில் பயோ டிராக்கர் பிபிஜி பயோ டிராக்கிங் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், ஜி.பி.எஸ். மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஏவியேஷன் கிரேடு அலுமினியம் அலாய் மெட்டல் பாடி மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டன்களை கொண்டிருக்கிறது.

    அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ்.

    அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். சிறப்பம்சங்கள்:

    - 1.65 இன்ச் 348x442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆண்ட்ராய்டு 5 மற்றும் ஐ.ஒ.எஸ். 10.0
    - 12 ஸ்போர்ட் மோட் டிராக்கிங்
    - லோ-பவர் பயோ டிராக்கர் பிபிஜி சென்சார்
    - 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - 3 ஆக்சிஸ் ஜியோமேக்னெடிக் சென்சார்
    - ஏர் பிரெஷர் சென்சார்
    - ஆம்பியன்ட் லைட் சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - ப்ளூடூத் 5
    - 220 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஸ்மார்ட்வாட்ச் ஆப்சிடியன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி துவங்குகிறது.
    வாட்டர் ரெசிஸ்டண்ட், 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹூவாமி நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலை தொடர்ந்து அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.65 இன்ச் சூப்பர் ரெட்டினா கிரேடு AMOLED ஸ்கிரீன், கஸ்டம் மாட்யூலர் டையல், கலர்ஃபுல் லைட் மெட்டல் பாடி, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் மற்றும் 12 ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிக்களை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

    இதில் பயோ டிராக்கர் பிபிஜி பயோ டிராக்கிங் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், ஜி.பி.எஸ். மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஏவியேஷன் கிரேடு அலுமினியம் அலாய் மெட்டல் பாடி மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டன்களை கொண்டிருக்கிறது.

    அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ்.

    அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். சிறப்பம்சங்கள்:

    - 1.65 இன்ச் 348x442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆண்ட்ராய்டு 5 மற்றும் ஐ.ஒ.எஸ். 10.0
    - 12 ஸ்போர்ட் மோட் டிராக்கிங்
    - லோ-பவர் பயோ டிராக்கர் பிபிஜி சென்சார்
    - 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - 3 ஆக்சிஸ் ஜியோமேக்னெடிக் சென்சார்
    - ஏர் பிரெஷர் சென்சார்
    - ஆம்பியன்ட் லைட் சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - ப்ளூடூத் 5
    - 220 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் கிரே நிற கேஸ் மற்றும் ஆறுவித நிற பேண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 8,975) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை விரைவில் தெரியவரும்.
    ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் அதுபோன்ற குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவித்து வருகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு போலி குறுந்தகவல்கள் பற்றி எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 25 ஜி.பி. இலவச டேட்டா வழங்குவதாக எஸ்.எம்.எஸ். ஒன்று பரவி வருகிறது. இதுபோன்ற குறுந்தகவல்களை ஜியோ ஒருபோதும் அனுப்புவதில்லை என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    ஜியோ வழங்கும் சலுகைகள் அனைத்தும் மைஜியோ செயலி அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமே அறிவிக்கப்படும். குறுந்தகவல் மூலம் வரும் சலுகை மற்றும் அறிவிப்புகளை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் என ரிலையன்ஸ்  ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்தது. ரூ. 699 எனும் துவக்க விலையில் அறிவிக்கப்பட்ட ஜியோ ஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்.டி. வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் டேட்டா, டி.வி. வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    துவக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை அறிவித்த ஜியோ பெயரில் சமீப காலங்களில் அதிக போலி தகவல்கள் பரப்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் ஜியோ புதிய சலுகையை அறிவித்துள்ளது என்றும் இலவச சேவைகளை வழங்குவதாகவும் கூறி இணைய முகவரியை க்ளிக் செய்யக் கோரும் தகவல் இடம்பெற்றிருக்கும்.

    வாடிக்கையாளர்கள் இணைய முகவரியை க்ளிக் செய்தால் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு விடும். இவை பயனர் விவரங்களை சேகரித்து மற்ற சர்வர்களுக்கு அனுப்புவதில் துவங்கி, மால்வேர் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    இதனால் பயனர்கள் குறுந்தகவல்களில் வரும் சலுகைகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜியோ தெரிவித்து வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற குறுந்தகவல்களை கவனமாக கையாண்டால் அவற்றில் துளியும் உண்மையில்லை என தெரியவரும்.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    இன்ஸ்டாகிராம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் படிப்படியாக டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும்  ஐ.ஒ.எஸ். என இருவித தளங்களிலும் புதிய வசதிக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

    ஐ.ஒ.எஸ். 13 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் டார்க் மோட் ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமிலும் அது தானாக வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு போனில் டார்க் மோட் வேலை செய்தாலே இன்ஸ்டாகிராமிலும் டார்க் மோட் இயங்கும்.



    முன்னதாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கியது. இதில் பெரும்பாலான கூகுள் செயலிகள் புதிய டார்க் மோட் பெறும் என கூகுள் தெரிவித்திருந்தது. எனினும், பெரும்பாலான மூன்றாம் தரப்பு செயலிகளில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

    அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் இணைந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் டார்க் மோட் AMOLED சார்ந்து இயங்குகிறது. இதன் பின்னணியில் கருப்பு நிறம் இருக்கும். இது பெரும்பாலான செயலிகளில் சீராக இயங்கும். வரும் அப்டேட்களில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    டீடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்களை பார்ப்போம்.

    டீடெல் நிறுவனம் இந்தியாவில் 32 இன்ச் எல்.இ.டி. டி.வி..யை ரூ. 6,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எல்.இ.டி. டி.வி. சந்தையில் விற்பனையாகும் விலை குறைந்த 32 இன்ச் டி.வி. என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    கடந்த சில மாதங்களில் டி.வி. சந்தை அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. டீடெல் நிறுவனம் இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய டி.வி.யை 32 இன்ச் அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    டீடெல் நிறுவனத்தின் புதிய 32 இன்ச் ஸ்டார் டி.வி. அந்நிறுவன வலைத்தளம் மற்றும் செயலி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டி.வி.யில் ஏ பிளஸ் கிரேடு பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனல் 1280x720 பிக்சல் தரம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டீடெல் ஸ்மார்ட் டி.வி.


    இத்துடன் இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் டால்பி டிஜிட்டல் சவுண்ட் தொழில்நுட்பத்திற்கான வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் டி.வி.க்களை அறிமுகம் செய்வதில் பெயர் பெற்ற டீடெல் நிறுவனம் ஃபீச்சர் போன் மாடல்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.

    முன்னதாக டீடெல் நிறுவனம் 17-இன்ச் எல்.இ.டி. டி.வி.யை ரூ. 3,699 விலையில் வெளியிட்டது. தற்சமயம் 32 இன்ச் ஸ்டார் எல்.இ.டி. டி.வி. மூலம் டீடெல் நிறுவனம் டி.வி. சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
    ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் 2.5 லட்சம் Mi டி.வி.க்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.



    இந்திய ஆன்லைன் வர்த்தக தளங்களான ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பல்வேறு இதர வலைத்தளங்களில் தீபாவளி சிறப்பு விற்பனை சமீபத்தில் துவங்கியது. 

    தீபாவளி சிறப்பு விற்பனையில் சியோமி, ரியல்மி, சாம்சங், ஒப்போ, விவோ மற்றும் பல்வேறு இதர நிறுவனங்களின் சாதனங்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிறப்பு விற்பனை துவங்கிய சில நாட்களில் சியோமி நிறுவனம் 2.5 லட்சம் Mi டி.வி.க்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

    Mi டி.வி. விற்பனை விவரம்

    இத்தனை டி.வி.க்கள் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசான் தளத்தின் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் விற்பனையாகி இருக்கின்றன. பண்டிகை கால சிறப்பு விற்பனை துவங்கிய ஒவ்வொரு நிமிடத்திற்கும் 43 Mi டி.வி.க்கள் விற்பனையாகி இருக்கிறது.

    அமேசான் தளத்தில் விற்பனையான டி.வி.க்களில் முதல் ஐந்து டி.வி.க்களில் இரு மாடல்கள் Mi டி.வி.க்கள் ஆகும். அந்த வகையில் Mi டி.வி. 4சி ப்ரோ (32) மற்றும் Mi டி.வி. 4ஏ ப்ரோ 43 மாடல்கள் முறையே #1 மற்றும் #2 இடங்களை பிடித்திருக்கின்றன. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அதிகம் விற்பனையான டி.வி.க்களில் Mi டி.வி. முதலிடம் பிடித்திருக்கிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.



    நியூ யார்க் நகரில் நடைபெற்ற சர்ஃபேஸ் 2019 வன்பொருள் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் லேப்டாப் 3, சர்ஃபேஸ் ப்ரோ 7, சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ், சர்ஃபேஸ் நியோ மற்றும் இதர சாதனங்களை அறிமுகம் செய்தது. ஏற்கன வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதனை உண்மையாக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் தனது சர்ஃபேஸ் இயர்பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் இன்டியூட்டிவ் டச், வாய்ஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அசைவுகளை கொண்டு இயங்கும் ஜெஸ்ட்யூர் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ்

    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 25 x 19 எம்.எம்.; எடை: 7.2 கிராம் (ஒரு இயர்பட்)
    - 13.6 எம்.எம். டிரைவர்
    - 20 –20 kHz ஃபிரீக்வன்சி
    - ஒரு இயர்பட்-இல் இரண்டு மைக்ரோபோன்கள்
    - டச், டேப், ஸ்வைப், வாய்ஸ் கண்ட்ரோல்
    - ஆஃபிஸ் 365 வசதி
    - அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கான பேட்டரி
    - யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட்
    - விண்டோஸ் 10, ஆண்ட்ராய்டு 4.4, ஐ.ஒ.எஸ். 9

    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் விலை 249 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 17,730) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ×