என் மலர்
கணினி
டெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைத்து உள்ளார்.
32 கோடி பக்கங்கள் உடைய இந்த இணையதளம் 5 டி.பி.க்கு சமமாகும். (1 டி.பி.=1000 ஜி.பி.) இந்த இணையதள முகவரியை விமான போக்குவரத்து வசதிகள் உள்ள 159 நாடுகளில் தொடர்புகொள்ள முடியும்.
ஏற்கனவே அமித் சர்மா, 6 முறை உலக சாதனை புரிந்தவர்.
டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைத்து உள்ளார்.
32 கோடி பக்கங்கள் உடைய இந்த இணையதளம் 5 டி.பி.க்கு சமமாகும். (1 டி.பி.=1000 ஜி.பி.) இந்த இணையதள முகவரியை விமான போக்குவரத்து வசதிகள் உள்ள 159 நாடுகளில் தொடர்புகொள்ள முடியும்.
ஏற்கனவே அமித் சர்மா, 6 முறை உலக சாதனை புரிந்தவர்.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபேட் 7-ம் தலைமுறை மாடலின் இந்திய விற்பனை விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபேட் 7-ம் தலைமுறை 2019 மாடலை புதிய ஐபோன் மற்றும் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுடன் அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போதே இவை அமெரிக்கா உள்பட உலகின் 25 நாடுகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்திருந்தது.
அந்த வகையில் ஆப்பிள் புதிய ஐபேட் 10.2-இன்ச் மாடலின் இந்திய விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் விரைவில் இதற்கான முன்பதிவுகளை துவங்கலாம்.
ஆப்பிள் ஐபேட் 7-ம் தலைமுறை மாடல் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் 32 ஜி.பி. வைபை மாடல் விலை ரூ. 29,900 என்றும் 128 ஜி.பி. வைபை மாடல் விலை ரூ. 37,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 32 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. வைபை + செல்லுலார் மாடல்களின் விலை முறையே ரூ. 40,900 மற்றும் ரூ. 48,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் 2019 சிறப்பம்சங்கள்:
- 10.2 இன்ச் 2160x1620 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
- ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட்
- ஆப்பிள் பென்சில் வசதி
- 8 எம்.பி. கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர்
- 1.2 எம்.பி. கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- வைபை, ப்ளூடூத்
- டூயல் மைக்ரோபோன்
- 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
- ஐபேட் ஒ.எஸ்.
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 4.2
ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 மற்றும் ஒன்பிளஸ் கியூ1 ப்ரோ 4K QLED டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஒன்பிளஸ் டி.வி.க்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 மற்றும் ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 ப்ரோ என அழைக்கப்படுகின்றன.
இரு டி.வி.க்களிலும் 55-இன்ச் 4K QLED பேனல்கள், டால்பி விஷன், 50 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு டி.வி. இயங்குதளத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கான அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆக்சிஜன்பிளே, யூடியூப், பிரைம் வீடியோ, இரோஸ் நௌ, ஹங்காமா, ஜியோ சினிமா, ஜீ5 போன்ற நிறுவன சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆக்சிஜன் வீடியோ செயலியில் சர்வதேச தரவுகள், பிரத்யேக தரவுகள், உயர் ரக பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. புதிய ஒன்பிளஸ் டி.வி.க்களின் முன்புறம் பெசல்கள் வழங்கப்படவில்லை. டி.வி.யின் பின்புறம் கார்பன் ஃபைபர் பேட்டன் கொண்ட பேக் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் டி.வி. கியூ1 மற்றும் கியூ1 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 55-இன்ச் 3840x2160 4K QLED பேனல் 120% NTSC கலர் கமுட்
- காமா கலர் மேஜிக் பிக்ச்சர் பிராசஸர்
- 50 வாட் W 2.1 சேனல் ஸ்பீக்கர், DTS-HD டால்பி அட்மோஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ்
- ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
- யூடியூப், பிரைம் வீடியோ, இரோஸ் நௌ, ஹங்காமா, ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ்
- பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட்
- வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
- 4 x HDMI, 3 x USB
ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 மாடல் விலை ரூ. 69,900 என்றும் ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 ப்ரோ விலை ரூ. 99,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.
அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஜி.டி.ஆர். ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 47.2 எம்.எம். மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். சிறப்பம்சங்கள்:
- 1.2-இன்ச் 390x390 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, AF கோட்டிங்
- ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐ.ஒ.எஸ். 10.0 தளங்களுக்கான சப்போர்ட்
- பயோ டிராக்கர் PPG பயோ-டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார், 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- ஏர் பிரெஷர் சென்சார், கேபாசிட்டிவ் சென்சார்
- ஆம்பியன்ட் லைட் பிரைட்னஸ் சென்சார்
- ப்ளூடூத் 5.0
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- 195 எம்.ஏ.ஹெச். பேட்டரி
அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடல் ஸ்டாரி பிளாக், செர்ரி பிலாசம் பின்க், மூன்லைட் வைட் மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நொய்டாவை சேர்ந்த ஷின்கோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.யை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.
நொய்டாவை சேர்ந்த டி.வி. உற்பத்தியாளரான ஷின்கோ குறைந்த விலையில் புதிதாக 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அமேசான் இந்தியாவுடன் இணைந்து வெளியாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது விற்பனை நடைபெற இருக்கிறது. புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
டி.வி.யில் யுனிவால் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த யு.ஐ. கிளவுட் டி.வி. சான்று பெற்ற AOSP மூலம் இயங்குகிறது.

இத்துடன் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட், சன் நெக்ஸ்ட், ஜியோ சினிமா, இரோஸ் நௌ, ஹங்காமா பிளே, ஆல்ட் பாலாஜி, மூவி பாக்ஸ், புளூம்பெர்க் குவின்ட், தி குவின்ட், ஹோம்வேதா போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ஏ பிளஸ் கிரேடு பேனல் 1366x768 ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த பேனலில் 1.67 கோடி நிறங்களை HRDP தொழில்நுட்பம் மற்றும் 20 வாட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டி.வி. குவாட் கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரு யு.எஸ்.பி. போர்ட்கள் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ போர்ட் வழங்கப்பட்டுள்ளது. யுனிவால் யூசர் இன்டர்ஃபேஸ் ஆண்ட்ராய்டு 7.0 & 8.0 இயங்குதளங்களை சார்ந்து இயங்குகிறது. இதில் உள்ள இ-ஷேர் அம்சம் கொண்டு ஸ்மார்ட்போன் தரவுகளை டி.வி.யில் பகிர்ந்து கொள்ள முடியும்.
கிளா நிறுவனத்தின் புதிய கேமிங் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
மின்னனு உபகரணங்களுக்கு பெயர்போன கிளா நிறுவனம் இந்தியாவில் புதிய கேமிங் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய கிளா ஜி9 இயர்போன் கேமிங் பிரியர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 10 எம்.எம். டிரைவர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இவை 3டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும் திறன் கொண்டவையாகும். கேமிங்கின் போது பிரத்யேக ஆடியோ எஃபெக்ட்களை தனித்துவத்தில் வழங்க இது துணை புரியும். மேலும் இதில் பூம் மைக் வழங்கப்பட்டுள்ளது. இது 360 கோணங்களில் சீராக இயங்கும்.
இன்-லைன் மைக்ரோபோனினை கேமிங் அல்லாத சமயங்களிலும் பயன்படுத்தலாம். இயர்போன்களில் உள்ள 1.2 எம் கேபிள் ரக்கட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட டி.பி.இ. மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 3.5 எம்.எம். பிளக் 45 கோணங்களில் இருப்பதால், நீண்ட நாள் உழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ஃபிளாங் இயர்-டிப்கள் கேமிங்கின் போது வெளிப்புற சத்தம் இடையூறை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இயர் ஹூக் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது. மற்ற இயர்போன்களை போன்று இந்த ஹெட்போன்களும் பல்வேறு கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது.
அதன்படி பிளே/பாஸ், அழைப்புகளை ஏற்பது/நிராகரிப்பது, பாடல்களை மாற்றுவது மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்குவது போன்றவற்றை மிக சுலபமாக மேற்கொள்ளலாம்.
கிளா ஜி9 இயர்போன் பிளாக், கிரீன் மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிளா ஜி9 கேமிங் இயர்போன்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.
ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கல்கேண்டி சேஷ் என அழைக்கப்படும் புதிய இயர்போன் இன்டிகோ, டீப் ரெட் மற்றும் ஃபியர்லெஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்கல்கேண்டி சேஷ் இயர்போன் பத்து மணி நேரத்திற்கான பேட்டரி வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் கொண்டு ஏழு மணி நேரத்திற்கு சார்ஜிங் வழங்குகிறது. இதன் பட்ஸ் மிக எளிமையாக இணைந்து கொள்கிறது.

இத்துடன் IP55 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5 வசதி கொண்ட இயர்போன் ஒற்றை பட்டன் இன்டர்ஃபேஸ் கொண்டு மீடியா கண்ட்ரோல்களை இயக்க முடியும்.
புதிய சேஷ் இயர்பட்ஸ் தவிர ஸ்கல்கேண்டி நிறுவனம் இன்டி மற்றும் புஷ் ட்ரூலி என்ற பெயரில் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை விற்பனை செய்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 7,499 மற்றும் ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரியாக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்த அம்சம் தற்சமயம் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் வைத்துக் கொள்ள "Share to Facebook Story" எனும் பட்டன் வழங்கப்படுகிறது. இது வாடஸ்அப் ஸ்டேட்டஸ் டேப் அருகிலேயே காணப்படுகிறது. புதிய அம்சத்திற்கு முழுமையான என்க்ரிப்ஷன் பொருந்தாது என கூறப்படுகிறது.

ஸ்டேட்டஸ் அப்டேட்களை மற்ற செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படாது. ஸ்டேட்டஸ் அப்டேட் வைக்கும் போது, வாட்ஸ்அப் அக்கவுண்ட் விவரங்களை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.258 மற்றும் ஐபோனிற்கான வாட்ஸ்அப் 2.19.92 பதிப்புகளில் புதிய வசதி வழங்கப்படுகிறது. இரு பதிப்புகளும் அந்தந்த ஆப் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
ஹூவாய் நிறுவனத்தின் விஷன் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டி.வி.யில் அந்நிறுவனத்தின் ஹார்மனி ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட் டி.வி. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என ஹூவாய் அறிவித்துள்ளது.
ஹூவாய் விஷன் டி.வி. 65 இன்ச் மற்றும் 75 இன்ச் QLED டிஸ்ப்ளே பேனல்கள் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 55 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்ய ஹூவாய் திட்டமிட்டுள்ளது. இந்த சாதனத்தில் 4K குவாண்டம் டாட் ஸ்கிரீன், மெல்லிய மெட்டல் பெசல்கள் மற்றும் பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளன.
இந்த டி.வி.யில் ஹாங்கு 818 சிப்செட், ஆக்டா-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் MEMC, ஸ்டான்டர்டு ஹெச்.டி.ஆர்., நாய்ஸ் ரிடக்ஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது. பாப் அப் வடிவமைப்பில் கேமரா பயனற்ற நிலையில், வெளியில் வராத படி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டி.வி.யில் ஏ.ஐ. மோட் வழங்கப்படுகிறது. இது திரையின் பிரகாசத்தை ஃபில்ட்டர் கொண்டு மாற்றியமைத்து பயனர்களின் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் ஒன்-ஹோப் ப்ரோஜெக்ஷன் எனும் அம்சத்தையும் ஹூவாய் அறிமுகம் செய்தது.
ஹூவாய் விஷன் டி.வி.யில் 5.1 சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட் வழங்கப்படுகிறது. இதில் 8+1+1 சவுண்ட் சிஸ்டம், மல்டி-ஸ்கிரீன் கொலாபரேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஹூவாய் விஷன் டி.வி.யில் பல்வேறு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு அமலில் உள்ளது. இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீதும் மத்திய அரசு வரி விதித்து இருந்தது. அதையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்கள் மீதான 5 சதவிகித வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இனி வெளிநாடுகளில் இருந்து எல்.இ.டி. டி.வி.க்களை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்ய முடியும்.
எல்.இ.டி. டி.வி. மீதான 5 சதவிகித இறக்குமதி வரி நீக்கப்பட்டு விட்டதால் இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி விற்பனையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயை நுகர்வோர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
எனவே இனி எல்.இ.டி. டி.வி. விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக 4 சதவிகிதம் அளவுக்கு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்த நேரத்தில் எல்.இ.டி. டி.வி. விலை குறையும் பட்சத்தில் அதிக அளவு தொலைக்காட்சி பெட்டிகளை விற்பனை செய்ய முடியும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மோட்டோரோலா மற்றும் சியோமி பிராண்டுகளை தொடர்ந்து வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வு பிராண்டு டி.வி. இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. கூகுள் நிறுவன சேவைகளை வழங்கும் புதிய டி.வி. முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை வாங்கலாம்.
வு பிராண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது விற்பனைக்கு வருகிறது. இதனால் வு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. அளவுகள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

வு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. பியூர் ப்ரிசம் கிரேட் ஹை பிரைட்னஸ் பேனல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அடாப்டிவ் காண்ட்ராஸ்ட் மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு கூகுள் சேவைகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தலாம்.
புதிய ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு டி.வி. 9 பை இயங்குதளம், ஆக்டிவாய்ஸ் சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆக்டிவாய்ஸ் டி.வி.யில் சர்ச் இன்டர்ஃபேஸ் ஆகும். அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.யுடன் வழங்கப்படும் ரிமோட்டில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றுக்கு ஹாட்கீ வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டி.வி.யில் பில்ட்-இன் கூகுள் குரோம்காஸ்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், புகைப்படம் போன்றவற்றை ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ்., மேக் அல்லது விண்டோஸ் சாதனங்களில் இருந்து ஸ்டிரீம் செய்ய முடியும். இத்துடன் பில்ட்-இன் டால்பி மற்றும் டி.டி.எஸ். சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை பட்ஜெட் ரகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட் டி.வி.-க்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், மோட்டோரோலா நிறுவனமும் புதிதாக ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய மோட்டோரோலா டி.வி. மாடல்களின் துவக்க விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய மோட்டோ டி.வி.க்கள் விலைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில், வெவ்வேறு ரெசல்யூஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 32 இன்ச் அளவில் துவங்கி 65 இன்ச் வரையிலும், ஹெச்.டி. தரத்தில் இருந்து 4K ரெசல்யூஷன் வரை கிடைக்கின்றன. புதிய மோட்டோ டி.வி.க்களின் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.

மோட்டோரோலா டி.வி. அம்சங்கள்:
புதிய மோட்டோரோலா டி.வி.க்கள் ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன. இவற்றுடன் ஹெச்.டி.ஆர். ஃபார்மேட்களில் துவங்கி டால்பி விஷன் வரையிலான சப்போர்ட் வழங்கப்படுகின்றன. ஆடியோவிற்கு டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் கனெக்டிவிட்டிக்கென பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்களும் அடங்கும். புதிய டி.வி.க்களுடன் கேம்பேட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் டி.வி.யில் கேம்களை இன்ஸ்டால் செய்து விளையாட முடியும்.
கேம்பேட் வழங்கப்பட்டிருப்பதால், பயனர்கள் டி.வி.யிலேயே கேமிங் செய்ய முடியும். இதனால் பிரத்யேக கேமிங் கன்சோல் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
மோட்டோரோலா டி.வி. மாடல்களின் விலை பட்டியல்:
- 32 இன்ச் ஹெச்.டி. மாடல் விலைரூ. 13,999
- 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் விலை ரூ. 24,999
- 43 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 29,999
- 50 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 33,999
- 55 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 39,999
- 65 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 64,999






