என் மலர்
கணினி
ரிலையன்ஸ் ஜியோஃபைபர் சலுகைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 777 சலுகையை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோஃபைர் சேவைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். மீண்டும் ரூ. 777 சலுகையை அறிவித்திருக்கிறது. இந்த சலுகை பிராட்பேண்ட் சேவைகளில் ஒரு ஜி.பி. டேட்டாவுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.
கடந்த மாதம் ஜியோஃபைபர் சேவை வணிக ரீதியில் அறிவிக்கப்பட்டது முதல் பி.எஸ்.என்.எல். நிறுவன சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு தனது பழைய ரூ. 777 சலுகையை பி.எஸ்.என்.எல். மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ. 849 சலுகையை மாற்றியமைத்தது.

பி.எஸ்.என்.எல். ரூ. 777 சலுகையில் மாதம் 500 ஜி.பி. டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 20Mbps ஆக குறைக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்ட ரூ. 777 சலுகை தற்சமயம் விளம்பர நோக்கில் மீண்டும் வழங்கப்படுகிறது.
அந்தமான் மற்றும் நிகோபார் தவிர மற்ற வட்டாரங்களில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 777 சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலைுகையை பயனர்கள் ஆறு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதன்பின் ரூ. 849 சலுகையை பயன்படுத்த வேண்டியிருக்கும். பி.எஸ்.என்.எல். ரூ. 849 சலுகையில் பயனர்களுக்கு 600 ஜி.பி. டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.
சியோமியின் புதிய Mi பேண்ட் 4 சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பேண்ட் 4 சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கென டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது.
சியோமி Mi பேண்ட் 4 சாதனம் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. சியோமியின் முந்தைய ஃபிட்னஸ் டிராக்கர்கள் சிறந்த அம்சங்களை குறைந்த விலையில் வழங்கியதால் அதிக பிரபலமாகின. சியோமியின் Mi பேண்ட் 4 ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டது.

புதிய Mi பேண்ட் 4 மாடலில் 0.95 இன்ச் கலர் AMOLED தொடுதிரை டிஸ்ப்ளே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு சைக்லிங், உடற்பயிற்சி, ஓட்ட பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சியோமி Mi பேண்ட் 4 விலை ரூ. 1700 இல் துவங்கி ரூ. 2000 வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi பேண்ட் 3 மாடல் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. Mi பேண்ட் 4 மாடலுடன் சியோமி ஸ்மார்ட் லிவ்விங் நிகழ்வினை நடத்துகிறது.
இதில் 65 இன்ச் Mi டி.வி. மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய டி.வி. சியோமியின் முதல் பெரிய மாடல் டி.வி. ஆகும். இதுதவிர இந்தியாவில் ரெட்மி டி.வி. அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி பிராண்டு புதிய ரியல்மி XT ஸ்மார்ட்போனுடன் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் பவர் பேங்க் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ப்ளூடூத் 5.0 மற்றும் பெஸ்டெக்னிக் சிப் வழங்கப்பட்டுள்ளது. தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க 11.2 எம்.எம். பாஸ் பூஸ்ட் டிரைவர் வழங்கப்பட்டுள்ளது.
30 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் சவுகரிய மற்றும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும். காந்த வடிவமைப்பு கொண்டிருக்கும் வயர்லெஸ் பட்ஸ் ஒன்றாக இணைந்து கொள்ளும். இந்த ஹெட்செட் IPX4 சான்று பெற்ற ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் அம்சங்கள்:
- பெஸ்டெக்னிக் BES2300 ஆடியோ சிப்
- ப்ளூடூத் 5.0
- 11.2 எம்.எம். டிரைவர்கள்
- மெட்டல் / சிலிகான் ஜெல் நிக்கல் டைட்டானியம் மெமரி அலாய்
- பில்ட்-இன் மைக்ரோபோன்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX4)
- 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளத்தில் நடைபெறுகிறது. விரைவில் இது ஆஃப்லைன் சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி பவர் பேங்க் இருவழி 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் டைப்-ஏ போர்ட்களை கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். 12.5 எம்.எம். தடிமனாக இருக்கிறது.

ரியல்மி 10,000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் அம்சங்கள்:
- 10000 எம்.ஏ.ஹெச். லித்தியம் பாலிமர் பேட்டரி
- யு.எஸ்.பி. டைப்-ஏ மற்றும் யு.எஸ்பி. டைப்-சி டூயல் அவுட்புட்
- 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங்
- 12 அடுக்கு பாதுகாப்பு
- தடிமன்: 12.5 எம்.எம்.
- எடை: 230 கிராம்
- 18 வாட் சார்ஜரில் 3.28 மணி நேரத்திலும், 10 வாட் சார்ஜரில் 5.36 மணி நேரத்திலும் சார்ஜ் ஆகிடும்
10,000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் எல்லோ, கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை செப்டம்பர் மாத இறுதியில் துவங்குகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டி.வி. சந்தையில் கால்பதிக்க இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடல் இந்தியாவில் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டி.வி.க்கென மோட்டோரோலா நிறுவனம் ப்ளிப்கார்ட் உடன் இணைந்திருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோரோலாவின் ஸ்மார்ட் டி.வி.க்களை ப்ளிப்கார்ட் தயாரித்து விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.

முன்னதாக மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து விட்டது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 30 வாட் முன்புற ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ட்ரூ சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்படலாம். இத்துடன் டிஸ்ப்ளே பேனலில் MEMC தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய டி.வி.க்களின் விலை சியோமி, தாம்சன், வு, கோடாக் போன்ற நிறுவனங்களின் டி.வி. மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம்.
ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் புத்தம் புதிய அம்சங்கள் நிறைந்த 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டன.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் கேமிங், டி.வி. பிளஸ் சேவைகளுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்தது. இரு சாதனங்களிலும் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐபேட் 10.2 இன்ச் சிறப்பம்சங்கள்:
- 10.2 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் மல்டி-டச் டிஸ்ப்ளே
- ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட்
- ஆப்பிள் பென்சில் வசதி (முதல் தலைமுறை மாடல்)
- 8 எம்.பி. கேமரா, f/2.4
- 1.2 எம்.பி. கேமரா, f/2.2
- வைபை, ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன்
- 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
- ஐபேட் ஒ.எஸ்.
புதிய ஐபேட் 10.2 இன்ச் 32 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 40,900 முதல் துவங்குகிறது. புதிய ஐபேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5:
புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 மாடலின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது.
இத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஜி.பி.எஸ். மாடல் விலை ரூ. 40,990 என்றும் செல்லுலார் மாடலுக்கு ரூ. 49,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 33 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சலுகை ரூ. 1999 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 33 ஜி.பி. டேட்டா, நாடு முழுக்க கிடைக்கும் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது.
இச்சலுகையில் டேட்டா வேகம் 100Mbps ஆக இருக்கிறது. இது ஏர்டெல் வி ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் வழங்கும் 250Mbps வேகத்தை விட குறைவு ஆகும். தினசரி டேட்டா அளவு கடந்ததும், டேட்டா வேகம் 4Mbps ஆக குறைக்கப்படும். புதிய சலுகை பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விரைவில் மாற்றப்படும் என தெரிகிறது.

பிராட்பேண்ட் சலுகையில் தினசரி டேட்டா அளவு 33 ஜி.பி.யாக இருக்கிறது. இதன் வேகம் 100Mbps ஆகும். தினசரி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 4Mbps ஆக குறைக்கப்பட்டுவிடும். ரூ. 1999 சலுகை தவிர ரூ. 1,277 சலுகையில் பயனர்களுக்கு 750 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ. 2,499 சலுகையில் தினமும் 40 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ. 4,499 மற்றும் ரூ. 5,999 சலுகைகளில் பயனர்களுக்கு முறையே 55 ஜி.பி. மற்றும் 80 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகின்றன. ரூ. 9,999 சலுகையிலும் 100Mbps வேகத்தில் தினமும் 120 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 8Mbps ஆக குறைக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் இந்திய சந்தையில் நெஸ்ட் ஹப் எனும் ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளேயை அறிமுகம் செய்துள்ளது.
தேடுபொறி நிறுவனமான கூகுள் மின்னணு கருவிகளையும் தயாரித்து வருகிறது. மிகவும் விரும்பத்தக்க பிராண்டாக இந்நிறுவனத் தயாரிப்புகள் திகழ்கின்றன. வித்தியாசமான, மக்களுக்கு மிகவும் அவசியமான மின்னணு கருவிகளை தயாரித்து அளிப்பதில் இந்நிறுவனம் எப்போதுமே முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் நெஸ்ட் ஹப் எனும் ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளேயை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.9,999. இதில் நிறுவனத்தின் தயாரிப்பான வாய்ஸ் அசிஸ்டென்ட் இணைப்பு வசதி உள்ளது. இது பிளிப்கார்ட் இணையதளத்திலும், குரோமா, டாடா கிளிக், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட விற்பனையகங்களிலும் கிடைக்கும். இரண்டு வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.
இதில் கூகுள் மேப்ஸ், யூ-டியூப் இணைப்பு வசதிகள் உள்ளன. வானிலை மற்றும் கூகுள் போட்டோ ஆப் (செயலி) உள்ளது. உபயோகிப்பாளர்கள் இதை தனி அறையில் ஸ்பீக்கராக பயன்படுத்த விரும்புவர். அதற்காகவே இதில் கேமரா வசதி செய்யப்படவில்லை என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் டிஸ்பிளே திரையை புகைப்பட பிரேம் போலவும் பயன்படுத்த முடியும்.
பிடித்தமான போட்டோவை ஆல்பம் பகுதியில் வைத்தால் நீங்கள் அடுத்து மாற்றும் வரை அது திரையில் அழகாக ஒளிரும். வீடுகளில் குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்களை வைத்து அழகு பார்க்கலாம். இதில் உள்ள விளக்கு வெளிச்சமானது, அறையின் வெளிச்சத்துக்கு ஏற்ப மாறுபடும். இரவு நேரத்தில் அணைந்து நேரத்தை மட்டும் காட்டும். இதனால் உங்கள் தூக்கம் கெடாது. கூகுள் ஆல்பத்தில் நீங்கள் பதிவேற்றியுள்ள புகைப்படங்களை நீங்கள் பார்க்க விரும்பினால் இதன் மூலம் பார்க்கலாம். குரல் வழி மூலம் தேவையான புகைப்படங்களை நீங்கள் பார்க்க முடியும். அதேபோல கூகுள் பிளே மூலம் புகைப்பட தொகுப்புகளை தொடர்ந்து திரையில் காண்பிக்குமாறு கூறலாம். இதில் டிஜிட்டல் பில்டர் உள்ளது. அதாவது வீட்டில் இருக்கும்போது உங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு இடையூறாக அழைப்புகள் ஏதும் மேற்கொள்ளாதபடி பிளாக் செய்ய முடியும்.
மின்னணு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து பிராண்ட் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். அதாவது வீட்டில் பயன்படுத்தும் அனைத்து மின்னணு சாதன செயல்பாட்டையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அதேபோல உங்களது உறவினர், நண்பர்களுக்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கலாம்.
அதேபோல இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களுடன் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளவும் இது உதவும். விதவிதமாக சமைக்க ரெசிபிகளையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 7 அங்குல திரையுடன் மேல் பகுதியில் சில சென்சார்களுடன் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது நெஸ்ட் ஹப். அறிமுக சலுகையாக ரூ.1,799 மதிப்புடைய எம்.ஐ. பாதுகாப்பு கேமராவையும் கூகுள் நிறுவனம் அளிக்கிறது.

சியோமி நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய ரெட்மி டி.வியை இந்தியாவில் வெளியிடும் தேதியை டீசராக வெளியிட்டுள்ளது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி., 'ரெட்மி டி.வி 70-இன்ச்' எனப் பெயரிடப்பட்டது. இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.
ரெட்மி டி.வி. மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டி.வி. செப்டம்பர் 3-ல் இருந்து ரூ.38,000 விலையில் விற்பனை ஆகி வருகிறது.

இந்த டி.வியின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்படாமல் இருந்த நிலையில், சியோமியின் அதிகாரப்பூர்வ இந்திய ட்விட்டர் கணக்கில் டி.வி. தோன்றுவதைக் காட்டும் டீசரைப் பகிர்ந்துள்ளது.

மேலும் செப்டம்பர் 17 ஆம் தேதி 'ஸ்மார்ட்டர் லிவிங் 2020' வெளியீட்டு தேதியை முக்கியமாக குறிப்பிட்டுள்ளது. சியோமி இன்னும் இந்த புதிய தயாரிப்பின் பெயரை வெளியிடவில்லை.
அந்த டீசரில் காட்டப்படும் படம், மெல்லிய பெசல்களைக் கொண்ட டி.வி, ரெட்மி 70-யாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கணக்கின் மற்றொரு ட்வீட்டில், இந்த மாத இறுதியில் பல ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் அம்பரேன் நிறுவனம் பிட்னெஸ் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் அம்பரேன் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் பிட்னெஸ் வாட்ச். இதன் விலை ரூ.2,999. இருதய துடிப்பு மானிட்டர் இதில் உள்ளது. ஏ.எப்.பி 38 என்ற பெயரில் வந்துள்ள இந்த வாட்சின் டிஸ்பிளே வண்ணமயமாக உள்ளது. சூரிய ஒளியிலும் இதன் டிஸ்பிளே துல்லியமாக தெரியும். இருதய துடிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கும். மணிக்கட்டை சுழற்றினாலே பிட்னெஸ் பற்றிய விவரங்களை இது அளிக்கும்.
இதில் லித்தியம் பாலிமர் பேட்டரி உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 7 நாட்கள் வரை செயல்படும். உங்களது செயல்பாடுகளை இது கவனிக்கும். குறிப்பாக உங்கள் உடலில் கலோரி சத்து எந்த அளவுக்கு எரிக்கப்பட்டது என்பதை கணக்கிட பெடோமீட்டர் உள்ளது. அதேபோல தூங்கும் அளவை கண்காணிக்க ஸ்லீப் மானிட்டரிங் உள்ளது. நீங்கள் நிர்ணயித்த இலக்கை எட்டுவது குறித்து அறிவுறுத்தும். தூசி மற்றும் நீர் புகா தன்மை கொண்டது.
நீச்சல் வீரர்களும் 1.5 மீட்டர் ஆழம் வரை இதை அணிந்தபடி நீந்திச் செல்லலாம். இது தவிர ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு இதன் மூலம் பதில் அளிக்க முடியும். அதேபோல குறுஞ்செய்திகளை படித்து அதற்கு பதில் அளிக்க முடியும். அத்துடன் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றையும் இதில் பார்க்க முடியும். ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அழகிய புகைப்படங்கள் எடுக்கவும் இது உதவும்.
அதேபோல கை தவறுதலாக உங்கள் ஸ்மார்ட்போனை எங்காவது வைத்துவிட்டால் அதைக் கண்டுபிடிக்கவும் இது உதவும்.

சியோமி நிறுவனத்தின் 10ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸர் கொண்ட ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பின் சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.
ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 புரோ, ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரெட்மி டிவி ஆகியவற்றுடன் ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பும் சந்தைக்கு வந்துள்ளன. 3 வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ரெட்மி புக் 14 புரோ லேப்டாப் 10வது தலைமுறை இன்டெல் ப்ராசஸர்களை கொண்டுள்ளது.
ப்ராசஸர் மேம்பாட்டை தவிர்ந்து இந்த Pro வகை லேப்டாப், ரெட்மிபுக் 14 போன்றே முழுவதுமாக அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வகை சில்வர் என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகமான நிலையில், இந்த ரெட்மிபுக் 14 புரோ சாம்பல் மற்றும் பின்க் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
10வது தலைமுறை இன்டெல் ப்ராசஸர்களை கொண்டுள்ள இந்த ரெட்மிபுக் 14 புரோ லேப்டாப் 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த லேப்டாப்பின் முதல் வகை இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸரும், 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. இந்த வகையின் விலை 3,999 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ.40,000 இன்டெல் கோர் i5 ப்ராசஸருடன் 8ஜிபி ரேம், 512ஜிபி சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை லேப்டாப் 4,499 யுவான்கள் (45,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாக உள்ளது.

4-இன்ச் திரை கொண்ட இந்த லேப்டாப், 10ம் தலைமுறை iஐ7 ப்ராசஸர், 512ஜிபி சேமிப்பு அளவு கொண்டுள்ளது. மேலும், இந்த லேப்டாப்பில் ஜீஃபோர்ஸ் எம்.எக்ஸ்250 கிராபிக்ஸ் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்த லேப்டாப்பில் 46W பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்தவுடன் 10 மணி நேரம் நீடிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. போர்ட் தேர்வில் இரண்டு யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி 2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும்.
மடிக்கணினி சுமார் 1.5 கிலோ எடையும், 323 x 228 x 17.95mm பரிமாணங்களையும் கொண்டிருக்கும். இந்த லேப்டாப்பில் 46w பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இது வெறும் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்தவுடன் 10 மணி நேரம் நீடிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
போர்ட் தேர்வில் இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு USB 2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும். மடிக்கணினி சுமார் 1.5 கிலோ எடையும், 323 x 228 x 17.95mm பரிமாணங்களையும் கொண்டிருக்கும்.

அதிகபடியாக ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 512ஜிபி சேமிப்பு அளவு கொண்ட இதன் டாப்-என்ட் வகை 4,999 யுவான்கள் (50,000 ரூபாய்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் செப்டம்பர் 6-ல் தனது முதல் விற்பனை ஆகிறது.

4-இன்ச் திரை கொண்ட இந்த லேப்டாப், 10ம் தலைமுறை iஐ7 ப்ராசஸர், 512ஜிபி சேமிப்பு அளவு கொண்டுள்ளது. மேலும், இந்த லேப்டாப்பில் ஜீஃபோர்ஸ் எம்.எக்ஸ்250 கிராபிக்ஸ் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்த லேப்டாப்பில் 46W பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்தவுடன் 10 மணி நேரம் நீடிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. போர்ட் தேர்வில் இரண்டு யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி 2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும்.
மடிக்கணினி சுமார் 1.5 கிலோ எடையும், 323 x 228 x 17.95mm பரிமாணங்களையும் கொண்டிருக்கும். இந்த லேப்டாப்பில் 46w பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இது வெறும் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்தவுடன் 10 மணி நேரம் நீடிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
போர்ட் தேர்வில் இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு USB 2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும். மடிக்கணினி சுமார் 1.5 கிலோ எடையும், 323 x 228 x 17.95mm பரிமாணங்களையும் கொண்டிருக்கும்.
சீனாவின் பீஜிங் நகரில் சியோமி நிறுவனம் 70-இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் திரையுடன் கூடிய முதல் ரெட்மி டிவியை அறிமுகப்படுத்தியது.
சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில், சியோமி நிறுவனம் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி., 'ரெட்மி டி.வி 70-இன்ச்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது. ரெட்மி டிவி மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டிவி செப்டம்பர் 3-ல் விற்பனைக்கு வரும் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவி ரூ.38,000 விலையில் விற்பனையாகவுள்ளது. தற்போது சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆனால், சியோமி நிறுவனம் மி டிவி போன்ற சாதனங்களில் இந்தியா போன்ற நாடுகளில் விரைவாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்த முதல் ரெட்மி டிவியின் சீனாவை தாண்டிய அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இதன் சிறப்பம்சங்களை பார்க்கும்போது, ரெட்மி டிவி 70-இன்ச் 4கே திரை, ஹெச்.டி.ஆர் வசதி ஆகியவற்றுடன் சுவற்றில் மாட்டுவது அல்லது டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுக்கு ஏதுவான பேசல்களுடனே அறிமுகமாகியுள்ளது. இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டே இயங்குகிறது.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பை கொண்ட இந்த ரெட்மி டிவி குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் எஸ்.ஓ.சி ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது. டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் ஹெட்.டி போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.
இணைப்பு வசதிகளை பொருத்தவரை வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்கள், மூன்று ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஏவி இன்புட் என பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் சியோமி நிறுவனம் அளிக்கிறது . முன்னதாக, சியோமி நிறுவனம் மி டி.வி வரிசையில் 22 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 12 மணிநேர ப்ளேபேக், டி.டபுள்யூ.எஸ் அம்சத்துடன் கூடிய போர்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்புகளில் முன்னணியில் இருக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், 12 மணிநேர ப்ளேபேக் நேரத்துடன் கூடிய, முழுவதும் வயர்லெஸ் செயல்பாட்டின் மூலம் இயங்கும், போர்ட்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது.

இந்த போர்ட்டபுள் ஸ்பீக்கரானது மீடியா மற்றும் ஒலியளவிற்கான கட்டுப்பாட்டு பொத்தான்களைக் கொண்ட பளபளப்பான மேற்புறத்துடன் கூடிய, ஃபேப்ரிக் போன்ற வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. முழுமையான வயர்லெஸ் செயல்பாட்டின் மூலம் மற்றொரு ஜெப்- மாஸ்டர்பீஸ் ஸ்பீக்கரை இணைக்கும்போது ஒரு முழுமையான ஸ்டீரியோ அனுபவத்தைப் பெற முடியும்.
12 மணிநேரம் வரை இதன்மூலம் இசைக் கேட்க முடியும். மேலும் அழைப்பை ஏற்கும் அம்சத்தையும் இந்த ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. வயர்லெஸில் இசையை இயக்கக் கூடிய வயர்லெஸ் BT போன்ற பல-இணைப்பு விருப்பங்களை இந்த ஸ்பீக்கர் கொண்டுள்ளது.
அத்துடன் USB, AUX, Micro SD போன்ற பிற பயன்முறைகளும் உள்ளன. இதனுடன் FM ரேடியோ அம்சமும் இன்பிள்டாக உள்ளது. இதன் அறிமுக விழாவில், ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குனர் பிரதீப் தோஷி கூறுகையில், ‘புதிய தயாரிப்பான ஜெப்- மாஸ்டர்பீஸ் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர், இசைக் கேட்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
இது 12 மணிநேர ஆடியோ பிளேபேக்கையும் முழுமையான வயர்லெஸ் செயல்பாட்டையும் கொண்டுள்ளது. எனவே, இந்த வயர்லெஸ் செயல்பாட்டினால் இரண்டு ஸ்பீக்கர்களை மிகவும் எளிமையாக இணைத்து முழுமையான ஸ்டீரியோ அனுபவத்தைப் பெறலாம்’ என கூறியுள்ளார்.
இந்த ஸ்பீக்கர் ப்ளேபேக் நேரத்தையும் முழுமையாக வயர்லெஸில் இயங்கும் அம்சத்தையும் கொண்டு கச்சிதமான ஆடியோவில் முழுமையான ஸ்டீரியோ அனுபவத்தை பெற முடியும்.