search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி ரெட்மி டிவி
    X
    சியோமி ரெட்மி டிவி

    சியோமியின் 70-இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் திரையுடன் முதல் ரெட்மி டி.வி. அறிமுகம்

    சீனாவின் பீஜிங் நகரில் சியோமி நிறுவனம் 70-இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் திரையுடன் கூடிய முதல் ரெட்மி டிவியை அறிமுகப்படுத்தியது.

    சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில், சியோமி நிறுவனம் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி.,  'ரெட்மி டி.வி  70-இன்ச்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது. ரெட்மி டிவி மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டிவி செப்டம்பர் 3-ல் விற்பனைக்கு வரும் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவி ரூ.38,000 விலையில் விற்பனையாகவுள்ளது. தற்போது சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
    சியோமியின் ஹெச்.டி.ஆர் திரையுடன் முதல் ரெட்மி டிவி அறிமுகம்

    ஆனால், சியோமி நிறுவனம் மி டிவி போன்ற சாதனங்களில் இந்தியா போன்ற நாடுகளில் விரைவாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்த முதல் ரெட்மி டிவியின் சீனாவை தாண்டிய அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

    இதன் சிறப்பம்சங்களை பார்க்கும்போது, ரெட்மி டிவி 70-இன்ச் 4கே திரை, ஹெச்.டி.ஆர் வசதி ஆகியவற்றுடன் சுவற்றில் மாட்டுவது அல்லது டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுக்கு ஏதுவான பேசல்களுடனே அறிமுகமாகியுள்ளது. இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டே இயங்குகிறது.

    2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பை கொண்ட இந்த ரெட்மி டிவி குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் எஸ்.ஓ.சி ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது. டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் ஹெட்.டி போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.

    இணைப்பு வசதிகளை பொருத்தவரை வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்கள், மூன்று ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஏவி இன்புட் என பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் சியோமி நிறுவனம் அளிக்கிறது . முன்னதாக, சியோமி நிறுவனம் மி டி.வி வரிசையில் 22 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
    Next Story
    ×