search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போர்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கர்
    X
    போர்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கர்

    டி.டபுள்யூ.எஸ் அம்சத்துடன் கூடிய ஜெப்ரானிக்ஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர் வெளியீடு

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 12 மணிநேர ப்ளேபேக், டி.டபுள்யூ.எஸ் அம்சத்துடன் கூடிய போர்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது.
    இந்தியாவின் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்புகளில் முன்னணியில் இருக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், 12 மணிநேர ப்ளேபேக் நேரத்துடன் கூடிய, முழுவதும் வயர்லெஸ் செயல்பாட்டின் மூலம் இயங்கும், போர்ட்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது.

    இந்த ஸ்பீக்கர் ப்ளேபேக் நேரத்தையும் முழுமையாக வயர்லெஸில் இயங்கும் அம்சத்தையும் கொண்டு கச்சிதமான ஆடியோவில் முழுமையான ஸ்டீரியோ அனுபவத்தை பெற முடியும்.

    டி.டபுள்யூ.எஸ் அம்சத்துடன் கூடிய போர்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கர்

    இந்த போர்ட்டபுள் ஸ்பீக்கரானது மீடியா மற்றும் ஒலியளவிற்கான கட்டுப்பாட்டு பொத்தான்களைக் கொண்ட பளபளப்பான மேற்புறத்துடன் கூடிய, ஃபேப்ரிக் போன்ற வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. முழுமையான வயர்லெஸ் செயல்பாட்டின் மூலம் மற்றொரு ஜெப்- மாஸ்டர்பீஸ் ஸ்பீக்கரை இணைக்கும்போது ஒரு முழுமையான ஸ்டீரியோ அனுபவத்தைப் பெற முடியும்.

    12 மணிநேரம் வரை இதன்மூலம் இசைக் கேட்க முடியும். மேலும் அழைப்பை ஏற்கும் அம்சத்தையும் இந்த ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. வயர்லெஸில் இசையை இயக்கக் கூடிய வயர்லெஸ் BT போன்ற பல-இணைப்பு விருப்பங்களை இந்த ஸ்பீக்கர் கொண்டுள்ளது.

    அத்துடன் USB, AUX, Micro SD போன்ற பிற பயன்முறைகளும் உள்ளன. இதனுடன்  FM ரேடியோ அம்சமும் இன்பிள்டாக உள்ளது. இதன் அறிமுக விழாவில், ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குனர் பிரதீப் தோஷி கூறுகையில், ‘புதிய தயாரிப்பான ஜெப்- மாஸ்டர்பீஸ் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர், இசைக் கேட்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

    இது 12 மணிநேர ஆடியோ பிளேபேக்கையும் முழுமையான வயர்லெஸ் செயல்பாட்டையும் கொண்டுள்ளது. எனவே, இந்த வயர்லெஸ் செயல்பாட்டினால் இரண்டு ஸ்பீக்கர்களை மிகவும் எளிமையாக இணைத்து முழுமையான ஸ்டீரியோ அனுபவத்தைப் பெறலாம்’ என கூறியுள்ளார். 
    Next Story
    ×