என் மலர்tooltip icon

    கணினி

    எல்.ஜி. நிறுவனம் மிகக்குறைந்த எடை கொண்ட கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    எல்.ஜி. நிறுவனத்தின் கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய கிராம் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன. 

    எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் அதிகபட்சமாக 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்களின் எடை மிகவும் குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    எல்.ஜி. கிராம் 14Z990-V

    எல்.ஜி. கிராம் 14Z990-V சிறப்பம்சங்கள்:

    - 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
    - இன்டெல் கோர் ஐ5-8265U சி.பி.யு
    - 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
    - இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
    - ப்ளூடூத் 5.0
    - 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 2 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
    - 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4 
    - 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
    - 1 x தண்டர்போல்ட் 3
    - கைரேகை சென்சார்
    - டூயல் ஸ்பீக்கர்
    - 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
    - ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, எல்.இ.டி. பேக்லிட்
    - 72கிலோவாட் -செல் பேட்டரி

    எல்.ஜி. கிராம் 15Z990-V

    எல்.ஜி. கிராம் 15Z990-V சிறப்பம்சங்கள்:

    - 15.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
    - இன்டெல் கோர் ஐ5-8265U சி.பி.யு
    - 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
    - இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
    - ப்ளூடூத் 5.0
    - 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 2 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
    - 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4 
    - 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
    - 1 x தண்டர்போல்ட் 3
    - கைரேகை சென்சார்
    - டூயல் ஸ்பீக்கர்
    - 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
    - ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, எல்.இ.டி. பேக்லிட்
    - 72கிலோவாட் -செல் பேட்டரி

    எல்.ஜி. கிராம் 17Z990-V

    எல்.ஜி. கிராம் 17Z990-V சிறப்பம்சங்கள்:

    - 17 இன்ச் WXQGA ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
    - இன்டெல் கோர் ஐ7-8565U சி.பி.யு
    - 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
    - 512 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
    - இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
    - ப்ளூடூத் 5.0
    - 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
    - 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4 
    - 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
    - 1 x தண்டர்போல்ட் 3
    - கைரேகை சென்சார்
    - டூயல் ஸ்பீக்கர்
    - 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
    - ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, எல்.இ.டி. பேக்லிட்
    - 72கிலோவாட் -செல் பேட்டரி

    எல்.ஜி. கிராம் 14-இன்ச் லேப்டாப் மாடல் விலை ரூ. 95,000 என்றும் 15.6 இன்ச் மாடல் விலை ரூ. 98,000 என்றும் 17-இன்ச் மாடல் விலை ரூ. 1,26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் தளத்தில் அடுத்த வாரம் துவங்குகிறது.
    ட்விட்டர் தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் சாப் 5 பட்டியல் வெளியாகியுள்ளது.



    ஹேஷ்டேக்குகளின் 12 ஆவது பிறந்த தினம் நேற்று (ஆகஸ்ட் 23) கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்தது. தமிழ் சினிமா திரைப்படமான விஸ்வாசம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இந்த திரைப்படம் பற்றிய விவரங்கள் ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தியிருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ட்விட்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. அதில் இந்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #LokSabhaElections2019 இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தல் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டன.



    மூன்றாவது இடத்தில் #CWC19 இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றிய இந்த ஹேஷ்டேக்கினை ட்விட்டர் வாசிகள் அதிகம் பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா திரைப்படமான மகரிஷி #Maharshi எனும் ஹேஷ்டேக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பட்டியலில் நான்கவது இடம்பிடித்துள்ளது.

    ஐந்தாவது இடத்தில் #NewProfilePic எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றது. இதனை புதிய புகைப்படத்தை ப்ரோஃபைல் படமாக தேர்வு செய்வோர் பொதுவாக பயன்படுத்தியிருக்கின்றனர். ஹேஷ்டேக் எனும் அம்சம் ட்விட்டரில் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதை கொண்டு ஒருபிரிவு சார்ந்த விவரங்களை தனியாக பிரிக்க முடியும்.
    வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் சமீபத்தில் பயோமெட்ரிக் அன்லாக் அம்சம் சேர்க்கப்பட்டது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுவிட்டது. தற்சமயம் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பினை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர்களுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.19.90 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் தனது மெமோஜிக்களில் அதிகளவு கஸ்டமைசேஷன்களை அறிமுகம் செய்தது. இதில் சிகை அலங்காரம், ஏர்பாட்ஸ் போன்றவை இடம்பெற்றிருந்தன.

    வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். மெமோஜி ஸ்டிக்கர் ஸ்கிரீன்ஷாட்

    மெமோஜி பயன்பாட்டை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆப்பிள் நிறுவனம் மெமோஜி ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. மெமோஜி ஸ்டிக்கர்கள் ஏ9 அல்லது அதன்பின் வெளியான சிப்செட் இருக்கும் ஐ.ஒ.எஸ். சாதனங்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐ.ஒ.எஸ். 2.19.23 பதிப்பில் வாட்ஸ்அப் ஃப்ரம் ஃபேஸ்புக் எனும் லேபெல் இடம்பெற்றிருக்கிறது.

    முன்னதாக இதேபோன்ற லேபெல் ஆண்ட்ராய்டு தளத்தில் காணப்பட்டது. இந்த டேக் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் காணப்படுகிறது. பயோமெட்ரிக் அம்சத்தை பொருத்தவரை வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் இதனை பிரைவசி செட்டிங் -- அக்கவுண்ட் ஆப்ஷனில் காணப்படுகிறது.

    கைரேகை லாக் அம்சத்தை ஆன் செய்தால், கைரேகையை உறுதிப்படுத்தக் கோரும். பயனர்கள் குறுந்தகவல் மற்றும் அழைப்புகளுக்கு நோட்டிஃபிகேஷன் பேனலில் இருந்த படியே பதில் அளிக்க முடியும். இந்த அம்சம் செயலி லாக் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே வேலை செய்யும்.

    புகைப்படம் நன்றி: Wabetainfo
    ஏர்டெல் வி ஃபைபர் பிராண்ட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஏர்டெல் வி ஃபைபர் பிராண்ட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மூன்று சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்களுக்கு அதிகபட்சம் 100 ஜி.பி. கூடுதல் டேட்டா ஆறு மாத வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    வேலிடிட்டி தீர்ந்ததும், பயன்படுத்தாத டேட்டாவினை பயன்படுத்த முடியாது. ஏர்டெல் பேசிக் பிளான் ரூ. 799, ஏர்டெல் எண்டர்டெயின்மென்ட் பிளான் ரூ. 1,099 மற்றும் ஏர்டெல் பிரீமியம் பிளான் ரூ. 1,599 சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் பேசிக் பிளான் ரூ. 799 சலுகையில் 200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவுக்கான வேலிடிட்டி ஆறு மாதங்கள் ஆகும். இச்சலுகையில் 40Mbps வேகம், அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ஏர்டெல் தேங்ஸ் சலுகை மற்றும் ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் வி ஃபைபர்  சலுகைகள்

    ஏர்டெல் எண்டர்டெயின்மென்ட் திட்டத்தில் 500 ஜி.பி. கூடுதல் டேட்டா ஆறு மாத வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் முன்னதாக 300 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்குகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ஏர்டெல் தேங்ஸ் சலுகை மற்றும் ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் பிரீமியம் திட்டத்தில் பயனர்களுக்கு 1000 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இச்சலுகையில் 600 ஜி.பி. டேட்டா 300Mbps வேகத்தில் வழங்குகிறது. இந்த சலுகையிலும் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ஏர்டெல் தேங்ஸ் சலுகை மற்றும் ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய டி.வி. சீரிஸ் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனம் தொலைக்காட்சிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய டி.வி.க்களுக்கான பெயர் மற்றும் லோகோவினை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் புதிய மாடல் ஒன்பிளஸ் டி.வி. பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ ஒன்பிளஸ் டி.வி. செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என தெரிவித்தார். புதிய டி.வி. முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    கடந்த இரு ஆண்டுகளாக ஒன்பிளஸ் நிறுவனம் டி.வி.யை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது எங்களுக்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்த சாதனம் என அவர் தெரிவித்தார். 

    ஒன்பிளஸ் டி.வி. டீசர்

    புதிய டி.வி.க்கென பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களுடன் ஒன்பிளஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சியோமி தனது டி.வி.யில் பேட்ச்வால் இன்டர்ஃபேஸ் மூலம் பொழுதுபோக்கு சார்ந்த தரவுகளை வழங்கி வருகிறது. 

    “எங்களது குழுவினரின் கடும்முயற்சி மற்றும் நெவர் செட்டில் கோட்பாடிற்கு நன்றிகள். தலைசிறந்த அடித்தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இதை கொண்டு ஒன்பிளஸ் டி.வி. அனுபவத்தை சிறப்பாக வழங்குவோம்,” என பீட் லௌ தெரிவித்தார்.

    புதிய ஒன்பிளஸ் டி.வி. 4K ரெசல்யூஷனில் குவாண்டம் டாட் அல்லது QLED ஸ்கிரீன் பேனல்களை கொண்டிருக்கும் என்றும் இதில் கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளாட்ஃபார்ம் வழங்கப்படும் என பீட் லௌ தெரிவித்தார். புதிய ஒன்பிளஸ் டி.வி. சாம்சங் QLED டி.வி. மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களுடன் பட்ஸ் 2 ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி பட்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய ஹெட்போன் ரியல்மி பட்ஸ் 2 என அழைக்கப்படுகிறது. இதில் மேம்பட்ட சவுண்ட் மற்றும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    புதிய ரியல்மி பட்ஸ் 2 மாடலில் 11.2 எம்.எம். பாஸ் பூஸ்ட் டிரைவர், மல்டி-லேயர் கம்போசிட் டையகிராம் மற்றும் ஜப்பான் டைகோ வாய்ஸ் காயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 3.5 எம்.எம். பிளக் கொண்டிருக்கும் புதிய ஹெட்போன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் பெரும்பாலான மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

    ரியல்மி பட்ஸ் 2

    இத்துடன் கேபிள் ஆர்கனைசர், பில்ட்-இன் மேக்னெட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன் கேபிள் அடிக்கடி சிக்கிக் கொள்ளாது. அழகாகவும், அதிக உறுதித்தன்மை கொண்ட விலை குறைந்த ஹெட்போனாக ரியல்மி பட்ஸ் 2 இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

    ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போனுடன் ரியல்மி ஐகானிக் கேஸ் மற்றும் ரியல்மி டோட் பேக் உள்ளிட்டவற்றை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஐகானிக் கேஸ் விலை ரூ. 399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது. ரியல்மி பட்ஸ் 2 விலை ரூ. 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி டோட் பேக் விலை ரூ. 1,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது. இதுதவிர ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனினை செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
    தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் கோவையில் புதிய விற்பனையகம் துவங்கியுள்ளது.
    தகவல் தொடர்பு, கேமிங் உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம், மொபைல் / லைஃப் ஸ்டைல் ஆக்சஸரீஸ் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் கோயம்புத்தூரில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் தனது முதல் பிரத்யேக ரீடெயில் கடையைத் தொடங்கியுள்ளது.

    ஜெப்ரானிக்ஸ், நிறுவனத்தின் ‘என்றும் முன்னனியில்’ என்ற தனது உறுதியான தத்துவத்தின்படி வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் போது தனிப்பட்ட அனுபவத்தை இந்த ரீடெயில் அணுகுமுறை வழங்குவதோடு மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த பிராண்டு விழிப்புணர்வையும் அதிகரிக்கும்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகரான டேனியல் ஆன்னி போப் கடையை திறந்து வைத்தார். மேலும் அவர், “ஜெப்ரானிக்ஸ் தனது கடையை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிராண்ட் இவ்வளவு காலமாக பல சமீபத்திய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அவர்கள் கடையில் உள்ள பலவகையான தயாரிப்புகள் என்னை மெய்சிலிர்க்க வைகின்றன. இவற்றை எல்லாம் மக்கள் நிச்சயம் பெரிதும் விரும்புவார்கள்!” என்று தெரிவித்தார்.

    திறப்பு விழாவில், ஜீப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி பேசுகையில், “சென்னையில் தான் முதன் முதலில் ஜெப்ரானிக்ஸின் பயணம் தொடங்கியது, இதனால் தமிழ்நாட்டுக்கு என்றும் எங்கள் மனதில் தனி இடம் உண்டு, அங்கு தான் ஜெப்ரானிக்ஸ் ஒரு நிறுவனமாக தன் பயணத்தைத் தொடர்ந்தது. இதனால் கோவையில் எங்கள் பிரத்யேக கடையைத் திறப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

    மேலும் திரு தோஷி, “எங்களின் முக்கிய நோக்கம் பிரண்டு பற்றிய விழுப்புனர்வை மக்களிடத்தில் உருவாக்குவது, எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் ரீடெயில் கடைகளைத் திறக்க விரும்புகிறோம்”. என்று கூறினார்.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 224 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.



    பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவினை 224 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய சலுகை புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தது. தற்சமயம் கூடுதல் சலுகை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் வலைத்தளத்தின்படி புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா 224 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தில் ஏர்டெல் சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மொபைல் பயன்பாடு - கோப்புப்படம்

    ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் பயனர்கள் தேர்வு செய்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது மட்டும் வழங்கப்படுகிறதா அல்லது அனைத்து சலுகைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

    முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு 84 நாட்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஜூலை மாதத்தில் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. கேஷ்பேக் சலுகை ரூ. 399 அல்லது ரூ. 499 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு வழங்கப்பட்டது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஐபோன் மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹோல்டுஃபார்ரிலீஸ் (HoldForRelease) என்ற பெயரில் ஐ.ஒ.எஸ். 13 பீட்டா 7 ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் காலெண்டர் செயலியில் தேதி செப்டம்பர் 10, செவ்வாய் கிழமை என குறிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஐபோன் XS மற்றும் XR சீரிஸ் அறிமுகமாகும் முன் வெளியான இதேபோன்ற புகைப்படங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் மேம்பட்ட மாடல்கள் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஐ.ஒ.எஸ். ஸ்கிரீன்ஷாட்

    இந்த ஆண்டு வெளியாகும் மாடல்கள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ என்ற பெயரில் அறிமுமக் செய்யப்படும் என்றும் இவற்றில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 12 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் இவற்றில் பெரிய பேட்டரிகள், புதிய ஆண்டெனா தொழில்நுட்பம், ஏ13 பிராசஸர், மேம்பட்ட டேப்டிக் என்ஜின் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஐபோன் XR மாடல் ஐபோன் 11ஆர் என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 11ஆர் மாடலில் டூயல் பிரைமரி கேமரா, 6.1 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 13, வாட்ச்ஒ.எஸ். 6. டி.வி.ஒ.எஸ். 13 மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்டவற்றையும் வெளியிட இருக்கிறது.

    புகைப்படம் நன்றி: ihelpbr
    அமெரிக்க விமான நிறுவனங்களில் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அமெரிக்காவில் இயங்கி வரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சில லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பேட்டரிகளில் பிழை இருப்பதை ஆப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களில் திரும்பப் பெறப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும், இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை நான்கு விமான நிறுவனங்கள் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதித்து இருக்கின்றன.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ

    2015 முதல் பிப்ரவரி 2017 வரை விற்பனை செய்யப்பட்ட 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என டோட்டல் கார்போ எக்ஸ்பர்டைஸ் எனும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

    ஜூன் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய தலைமுறை 15-இன்ச் மேக்புக் ப்ரோ யூனிட்களில் பாழான பேட்டரிகள் இருக்கலாம் என தெரிவித்திருந்தது. இவற்றை பயன்படுத்தும் போது லேப்டாப் அதிக சூடாகலாம் என்றும் ஆப்பிள் தெரிவித்தது.

    பாழான லேப்டாப் மாடல்கள் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் ஆப்பிள் தெரிவித்தது.
    ஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனம் 2019 எஃப்8 நிகழ்வில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் எஃப்.பி.5 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது. இது எளிமையாகவும், வேகமாகவும் முன்பை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தது.

    அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது மொபைல் செயலியில் புதிதாக டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சத்திற்கான பணிகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஃபேஸ்புக் டார்க் மோட்

    ஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படும் விவரங்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக இந்த அம்சம் மொபைல் தளத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் சில பகுதிகளில் மட்டுமே டார்க் மோட் சீராக காட்சியளிக்கிறது. 

    இதை வைத்தே டார்க் மோட் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் முழுமையாக இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய அம்சம் இன்னும் தயாராகவில்லை என்பதால் இதன் வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை.

    இதுதவிர ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளின் பெயர்களில் ஃபேஸ்புக் பிராண்டிங்கை சேர்த்திருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராம் ஃபிரம் ஃபேஸ்புக் (Instagram from Facebook) மற்றும் வாட்ஸ்அப் ஃபிரம் ஃபேஸ்புக் (WhatsApp from Facebook) என மாற்றப்பட்டுள்ளன.
    இந்தியாவில் ஜியோ பைபர் சேவைகள் செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான துவக்க கட்டணம் ரூ. 700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ‘ஜியோ பைபர்’ பிராட்பேண்ட் சேவையை அறிவித்துள்ளது. தொலைபேசி, இண்டர்நெட், கேபிள் டி.வி.யில் எண்ணற்ற சலுகைகள் இடம்பெற்றுள்ளன.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஜியோ நிறுவனம், தொடங்கிய மூன்று ஆண்டுகளில் சந்தையில் வேகமாக முன்னேறி உள்ளது. 

    ஜியோ தற்சமயம் 34 கோடி சந்தாதாரர்களுடன் உலகின் 2-வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. மாதந்தோறும் 10 லட்சம் புதிய சந்தாதாரர்கள் ஜியோ சேவையில் இணைந்து வருகிறார்கள்.

    ஜியோ பைபர் விலை

    ஜியோ பைபர்

    இந்த சூழ்நிலையில், ஜியோவின் 3-வது ஆண்டு விழாவையொட்டி, செப்டம்பர் 5-ந் தேதி, ‘ஜியோ பைபர்’ பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்துகிறோம். இத்திட்டம் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு வருவதற்கு 12 மாதங்கள் ஆகிவிடும்.

    இதில், தொலைபேசி, இண்டர்நெட், கேபிள் டி.வி. ஆகியவற்றில் ஏராளமான சலுகைகள் உள்ளன. இந்த திட்டப்படி, லேண்ட்லைன் தொலைபேசிகளில் ஆயுட்காலம் முழுவதும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். பிராட்பேண்ட் சேவையில் இண்டர்நெட் வேகம், வினாடிக்கு 100 எம்.பி. முதல் ஒரு ஜி.பி. வரை இருக்கும். இதற்கான மாதாந்திர கட்டணம், திட்டங்களுக்கு ஏற்ப, 700 ரூபாயில் இருந்து ரூ.10 ஆயிரம்வரை இருக்கும்.

    வளர்ந்த நாடான அமெரிக்காவில், பிராட்பேண்ட் இணையத்தின் சராசரி வேகம் வினாடிக்கு 90 எம்.பி. ஆகும். ஆனால், ஜியோ பைபர் திட்டத்தில் குறைந்தபட்ச வேகமே வினாடிக்கு 100 எம்.பி. ஆக இருக்கும். உலகில் ரிலையன்ஸ் நிறுவனம் போட்ட பைபர் கேபிள்களை எடுத்து அளந்தால், இந்த பூமியை 11 தடவை சுற்றி வரலாம்.

    மேலும், லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து அமெரிக்கா, கனடாவுக்கு அளவற்ற சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணம் மாதத்துக்கு ரூ.500 ஆகும். இதன்மூலம், சர்வதேச அழைப்புகளுக்கு அதிக கட்டணம் செலவழித்த காலம் மலை ஏறப்போகிறது. ஜியோ பைபரின் கட்டணங்கள், தற்போது சந்தையில் உள்ள கட்டணங்களில் ஐந்தில் ஒரு பங்கு முதல் 10-ல் ஒரு பங்குவரை இருக்கும்.

    ஜியோ பைபர் வரவேற்பு சலுகை

    4கே டி.வி. இலவசம்

    இதுதவிர, ஜியோ பைபர் வரவேற்பு திட்டத்தில், குறிப்பிட்ட சந்தாவை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4கே ஹெச்.டி. டி.வி. அல்லது பர்சனல் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும். 4கே செட்-டாப் பாக்சும் இலவசம். ஜியோ பைபர் பிரிமீயம் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை தங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளிக்கலாம். அடுத்த ஆண்டில் இருந்து இந்த வசதி அறிமுகம் ஆகிறது.

    இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.

    பங்கு விற்பனை

    சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ நிறுவனம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ‘எண்ணெய், ரசாயனம் பிரிவில் 20 சதவீத பங்குகளை வாங்குகிறது. இதற்கு 75 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கோடி) விலை பேசப்பட்டுள்ளது.

    இந்த பேரத்துக்கு பிறகு, அராம்கோ நிறுவனம் ஒவ்வொரு நாளும் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வழங்கும் என்று இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது எரிபொருள் சில்லரை விற்பனையில் 49 சதவீத பங்குகளை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு விற்கிறது. இதன்மூலம் ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும்.

    மேலும், இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தும் நோக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் 10 ஆண்டு காலம் இணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
    ×