search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்

    வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் சமீபத்தில் பயோமெட்ரிக் அன்லாக் அம்சம் சேர்க்கப்பட்டது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுவிட்டது. தற்சமயம் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பினை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர்களுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.19.90 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் தனது மெமோஜிக்களில் அதிகளவு கஸ்டமைசேஷன்களை அறிமுகம் செய்தது. இதில் சிகை அலங்காரம், ஏர்பாட்ஸ் போன்றவை இடம்பெற்றிருந்தன.

    வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். மெமோஜி ஸ்டிக்கர் ஸ்கிரீன்ஷாட்

    மெமோஜி பயன்பாட்டை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆப்பிள் நிறுவனம் மெமோஜி ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. மெமோஜி ஸ்டிக்கர்கள் ஏ9 அல்லது அதன்பின் வெளியான சிப்செட் இருக்கும் ஐ.ஒ.எஸ். சாதனங்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐ.ஒ.எஸ். 2.19.23 பதிப்பில் வாட்ஸ்அப் ஃப்ரம் ஃபேஸ்புக் எனும் லேபெல் இடம்பெற்றிருக்கிறது.

    முன்னதாக இதேபோன்ற லேபெல் ஆண்ட்ராய்டு தளத்தில் காணப்பட்டது. இந்த டேக் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் காணப்படுகிறது. பயோமெட்ரிக் அம்சத்தை பொருத்தவரை வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் இதனை பிரைவசி செட்டிங் -- அக்கவுண்ட் ஆப்ஷனில் காணப்படுகிறது.

    கைரேகை லாக் அம்சத்தை ஆன் செய்தால், கைரேகையை உறுதிப்படுத்தக் கோரும். பயனர்கள் குறுந்தகவல் மற்றும் அழைப்புகளுக்கு நோட்டிஃபிகேஷன் பேனலில் இருந்த படியே பதில் அளிக்க முடியும். இந்த அம்சம் செயலி லாக் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே வேலை செய்யும்.

    புகைப்படம் நன்றி: Wabetainfo
    Next Story
    ×