என் மலர்tooltip icon

    கணினி

    ஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹார்மனிஒ.எஸ். கொண்ட முதற்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய பொருட்கள் ஸ்மார்ட் ஸ்கிரீன் சாதனங்கள் என அந்நிறுவனம் அழைக்கிறது. எனினும், இவை பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் டி.வி.க்கள் ஆகும்.

    ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4K யு.ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப் கொண்டிருக்கின்றன. சீனாவில் இவை அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் சர்வதேச வெளியீடு பற்றி ஹானர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் 4K (3840x2160 பிக்சல்) டிஸ்ப்ளே, ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    ஹானர் விஷன் ப்ரோ

    இரு ஹானர் விஷன் மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU மற்றும் 2 ஜி.பி. ரேம் கொண்டிருக்கின்றன. பிராசஸருடன் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம், மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹானர் விஷன் டி.வி.யில் 16 ஜி.பி. மெமரியும், ஹானர் விஷன் ப்ரோ மாடலில் 32 ஜி.பி. மெமரியும் வழங்கப்பட்டுள்ளன. இவை ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ப்ளூடூத் 5, வைபை, மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், ஒரு யு.எஸ்.பி. 3.0 மற்றும் ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளன.

    ஹானர் விஷன் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ. 38,200) என்றும் பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் ப்ரோ விலை CNY 4,799 (இந்திய மதிப்பில் ரூ. 48,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    இந்தியாவில் 1மோர் பிராண்டு பிஸ்டன் ஃபிட் என்ற பெயரில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    ஆடியோ சாதனங்களில் பிரபல பிராண்டாக இருக்கும் 1மோர் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. 1மோர் பிஸ்டன் ஃபிட் என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் இயர்போனில் ப்ளூடூத் 5.0, மேக்னெடிக் இயர்பட்ஸ், வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    1மோர் பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் இயர்போன் இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதுகளில் மிகவும் சௌகரியமாக பொருந்துவதற்காக 45° ஆப்லிக்-ஆங்கில் நாஸில்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10 என்.எம். டைனமிக் டிரைவர் யூனிட் மற்றும் 32Ω இம்பென்டன்ஸ் வழங்கப்பட்டிருப்பதால், பேஸ் மற்றும் ஆடியோ தரம் சிறப்பாக இருக்கும்.

    1மோர் பிஸ்டன் ஃபிட்

    ப்ளூடூத் 5.0 மூலம் இயங்குவதால் இதனை கொண்டு 10 மீட்டர் இடைவெளியில் சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த இயர்போனில் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ப்ளூடூத் சிப்செட் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை கொண்டு மற்ற சாதனங்களுடனான இணைப்பு வேகமாகவும், சீராகவும் இருக்கிறது.

    இதில் இன்-பில்ட் 130 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்-லைன் கண்ட்ரோல் மற்றும் IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. 1மோர் பிஸ்டன் ஃபிட் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதனை 1மோர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்வோர் ரூ. 2499 விலையில் வாங்கிட முடியும்.
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி டேப் ஏ 8 இன்ச் 2019 (SM-T290 WiFi / SM-T295 LTE) மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 8-இன்ச் WXGA ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ் சப்போர்ட், 2 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் டூயல் ஸ்பீக்கர்கள், 3.5 எம்.எம். ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக கிட்ஸ் மோட் வழங்கப்பட்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி டேப் 8.0 2019

    சாம்சங் கேலக்ஸி டேப் 8.0 2019 சிறப்பம்சங்கள்

    - 8 இன்ச் 1280x800 16:10 WXGA TFT டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 429 பிராசஸர்
    - அட்ரினோ 504 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 8 எம்.பி. ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
    - 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 2019 பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் வைபை மாடல் விலை ரூ. 9,999 என்றும் எல்.டி.இ. வெர்ஷன் ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8cx பிராசஸர் கொண்டிருக்கிறது.

    13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டச் டிஸ்ப்ளே, பிரத்யேக ஆர்ச் ஃபிரேம் சாதனத்தை திறக்கும் போதும், மூடும் போது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மேல்புறம் பிரீமியம் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 6.2 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. 

    கேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ இன்ஸ்டன்ட் சைன்-இன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 23 மணி நேர பேக்கப் வழங்குகிறது. 

    கேலக்ஸி புக் எஸ்

    சாம்சங் கேலக்ஸி புக் எஸ் சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் 1920x1080 பிக்சல் FHD TFT (16:9) 10-பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8cx  7 என்.எம். பிராசஸர்
    - 8 ஜி.பி. (LPDDR4X)  ரேம் 
    - 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - விண்டோஸ் 10 ஹோம் / ப்ரோ
    - 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா
    - கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ சைன்-இன் வசதி
    - கைரேகை சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார்
    - ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
    - 4ஜி எல்.டி.இ. கேட்.18, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் - சி
    - 42Wh பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி புக் எஸ் எர்தி கோல்டு மற்றும் மெர்குரி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 70,835) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் ஸ்மார்ட் 7-இன்-1 32 இன்ச் ஹெச்.டி. மற்றும் 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. என அழைக்கப்படுகின்றன.

    இதில் சாம்சங் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.க்களில் ஆன்லைன் தரவுகளை பயன்படுத்தும் வகையில் இந்த காலத்து இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த டி.வி.க்கள் ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருகிறது.

    தி ஃபிரேம் 55-இன்ச் 4K ஹெச்.டி.ஆர். டி.வி. வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி ரூ. 4,999 விலையில் இருந்து வழங்கப்படுகிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 12, 2019 இல் துவங்குகிறது. தி ஃபிரேம் 55- இன்ச் டி.வி. விலை ரூ. 1,19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் ஸ்மார்ட் 7-இன்-1 எல்.இ.டி. டி.வி.

    32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.யை வாங்குவோருக்கு ரூ. 999 முதல் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 40-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.  அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரம் முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி. விலை ரூ. 22,500 என்றும் 40-இன்ச் மாடல் விலை ரூ. 33,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தி ஃபிரேம் டி.வி.யில் QLED தொழில்நுட்பம் மற்றும் இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. தி ஃபிரேம் டி.வி. பயன்படுத்தாத சமயத்தில் ஆர்ட் மோடிற்கு சென்று கலை சார்ந்த புகைப்படங்களை திரையில் காண்பிக்கும். இத்துடன் டி.வி. வைக்கப்பட்டுள்ள அறையின் சூழலுக்கு ஏற்ப ஸ்கிரீன் பிரைட்னஸ் தானாக மாறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    இதன் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் ஹெச்.டி.ஆர். 10 உள்ளிட்டவை புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கின்றன. இதில் பிக்ஸ்மி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    தி ஃபிரேம் டி.வி. பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் முறையில் இணைந்து கொண்டு ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும் ஒன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது. பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதியும் வழங்கப்பட்டு இருப்பதால் ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் தரவுகளையும் டி.வி.யில் பார்க்க முடியும்.
    ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் அமேஸ்ஃபிட் வெர்ஜ் மாடலின் விலை குறைந்த வெர்ஷன் ஆகும்.

    புதிய அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், அவுட்-டோர் ரன்னிங், டிரெட்மில், வாக்கிங், அவுட்-டோக் சைக்லிங், இன்-டோர் சைக்லிங், எலிப்டிக்கல் டிரெயினர், எக்சர்சைஸ் என பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கன்டினிவஸ் ஹார்ட் ரேட் மாணிட்டரிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் இல்லை என்பதால் இதை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவோ, ஏற்கவோ முடியாது.

    இதில் GPS + GLONASS வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை கனெக்டிவிட்டி, கைரோஸ்கோப், ஜியோமேக்னெடிக் சென்சார் மற்றும் ஏர் பிரெஷர் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட்

    அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் சிறப்பம்சங்கள்

    - 1.3 இன்ச் 360x360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - ப்ளூடூத் 5.0 LE, GPS+GLONASS
    - ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ். iOS 9.0 இயங்குதள சாதனங்களில் சப்போர்ட் செய்யும்
    - ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
    - ஸ்லீப் மாணிட்டரிங், மியூசிக் கண்ட்ரோல், சைலன்ட் அலாரம்
    - ஸ்போர்ட்ஸ் டிராக்கிங்
    - ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார்
    - 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஷார்க் கிரே, ஸ்னோகேப் வைட் என இருவித நிறங்களில் சிலிகான் ஸ்டிராப் உடன் வருகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    டி.சி.எல். நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    டி.சி.எல். நிறுவனம் இந்தியாவில் புதிய 4K ஏ.ஐ. ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.க்களில் ஃபிளாக்‌ஷிப் பி8எஸ் சீரிஸ், மிட்-ரேன்ஜ் பி8இ சீரிஸ் மற்றும் பட்ஜெட் ரக பி8 சீரிஸ் மாடல்கள் அடங்கும்.

    புதிய டி.சி.எல். டி.வி.க்கள் ஆண்ட்ராய்டு பை சார்ந்த மென்பொருள் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள், வாய்ஸ் இன்டராக்‌ஷன், ஏ.ஐ. பிக்சர் என்ஜின், ஸ்மார்ட் சவுண்ட் என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இத்துடன் இதில் ஹெச்.டி.ஆர். 10 வசதி, மைக்ரோ டிம்மிங் உள்ளிட்ட தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    உயர் ரக டி.சி.எல். பி9எஸ் சீரிஸ் 65 இன்ச் மற்றும் 55 இன்ச் வேரியண்ட்கள் ரூ. 44,990 விலையில் துவங்குகிறது. டி.சி.எல். பி8இ சீரிஸ் 43, 50 மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இதன் 55 இன்ச் டி.சி.எல். பி8இ ஸ்மார்ட் ஏ.ஐ. டிவி. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டி.சி.எல். டி.வி.

    டி.சி.எல். பி8 சீரிஸ் டி.வி.-க்கள் 43, 50 மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 27,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    புதிய டி.வி.க்களின் இமேஜ் மற்றும் சவுண்ட் அவுட்புட் மேம்படுத்தும் விதமாக இதில் ஏ.ஐ. ஃபார்ஃபீல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.க்களில் யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டி.சி.எல். ஒப்பந்த அடிப்படையில் ஹாட்ஸ்டார், வூட், ஆல்ட்பாலாஜி மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அபினந்தன் சலுகையில் தற்சமயம் கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.



    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அபினந்தன் 151 சலுகை ரூ. 151 விலையில் அறிவிக்கப்பட்டது. பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகைக்கான பலன்களை அந்நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் அபினந்தன் சலுகையில் 500 எம்.பி. டேட்டா தினமும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

    இனி அபினந்தன் 151 சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 1.5 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படும். இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். முன்னதாக இச்சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் இதில் 50 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    500 எம்.பி. டேட்டா தவிர அபினந்தன் 151 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. ஜியோ ரூ. 149 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். முன்னதாக பி.எஸ்.என்.எல். தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டு கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    பி.எஸ்.என்.எல். அபினந்தன் 151 பிரீபெயிட் சலுகை ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டது. ரூ. 151 விலையில் அறிவிக்கப்பட்ட இச்சலுகையில் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    புதிய மாற்றத்தின் பிறகும் இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பலன்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே இச்சலுகையை தேர்வு செய்து பயன்படுத்துவோருக்கும் கூடுதல் பலன்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 255 சலுகை மாற்றப்பட்டு முன்பை விட கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.



    வோடபோன் நிறுவனத்தின் ரூ. 255 பிரீபெயிட் சலுகை மாற்றப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த சலுகையில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. முன்னதாக இதே சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது.

    ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 199 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 299 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. பாரதி ஏர்டெல் ரூ. 249 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

    வோடபோன் சலுகை ஸ்கிரீன்ஷாட்

    வோடபோன் ரூ. 255 சலுகையில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே சந்தாவும் வழங்கப்படுகிறது. புதிய மாற்றத்தின் படி வோடபோன் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 70 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 299 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிமுகம் செய்தது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் ரூ. 129 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவும் வழங்கப்படுகிறது. வோடபோன் சலுகையில் இது வழங்கபப்டவில்லை.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் சூப்பர் AMOLED WQXGA ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஏ.கே.ஜி. ஹார்மன் மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது. புதிய சாதனத்தில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்பட்டு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    மேம்படுத்தப்பட்ட எஸ் பென் சாதனத்துடன் வரும் புதிய டேப்லெட் ரிமோட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கிறது. எஸ் பென் சாதனத்தில் எஸ் பென் ஏர் ஆக்‌ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க எஸ் பென் பயன்படுத்தலாம். எஸ் பென் சாதனத்தில் 0.35 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி டேப் எஸ்6

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 சிறப்பம்சங்கள்:

    - 10.5 இன்ச் 2560x1600 பிக்சல் WQXGA சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யு.ஐ. 1.5
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - அக்செல்லோமீட்டர், கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார்
    - ஹால் சென்சார், ஆர்.ஜி.பி. லைட் சென்சார்
    - ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்ட 4 ஸ்பீக்கர்கள்
    - ப்ளூடூத் வசதியுடன் எஸ் பென், 0.35 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி, போகோ பின்
    - 7,040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 மவுண்டெயின் கிரே, கிளவுட் புளு மற்றும் ரோஸ் பிளஷ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட வைபை மாடல் விலை 699 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 53,465) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வைபை மாடல் விலை 779 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 59,560) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி எல்.டி.இ. மற்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 859 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 65,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 0.96 இன்ச் கலர் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    ஸ்மார்ட் டெக் நிறுவனமான நாய்ஸ், இந்தியாவில் கலர்ஃபிட் 2 எனும் புதிய ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தில் 0.96 இன்ச் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடுதிரை வசதி வழங்கப்படவில்லை எனினும், இதன் கீழ்புறம் டச் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 14 ஸ்போர்ட்ஸ் மோடில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் இன்-பில்ட் ஆக்டிவிட்டி டிராக்கர், இதய துடிப்பு சென்சார், ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்லீப் டிராக்கர், செடன்ட்டரி ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கபப்ட்டுள்ளன.

    இந்த பேண்ட் சாதனத்தில் அழைப்புகள், குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்அப் குறுந்தகவல்களுக்கு நோட்டிஃபிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இது ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனங்களை சப்போர்ட் செய்யும். மேலும் இதில் ஐ.பி. 68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் கலர்ஃபிட் 2

    நாய்ஸ் கலர்ஃபிட் 2 சிறப்பம்சங்கள்:

    - 0.96 இன்ச் எல்.சி.டி. கலர் ஸ்கிரீன்
    - ப்ளூடூத் 4.0 
    - ஐ.ஒ.எஸ். 8.0, ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும்
    - இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் டிராக்கர், ஃபிட்னஸ் டிராக்கர்
    - ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
    - 14 வித ஸ்போர்ட்ஸ் மோட்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 90 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி

    நாய்ஸ் கலர்ஃபிட் 2 ஃபிட்னஸ் பேண்ட் டஸ்ட் பின்க், ட்விலைட் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் வெளியீடு மற்றும் கட்டண விவரங்களை பார்ப்போம்.



    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2018 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, நேரலை தொலைகாட்சி சேனல்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2019 ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜியோஜிகாஃபைபர் சேவை வணிக ரீதியில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. டெலிகாம் சந்தையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சந்தையில் கால்பதிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.

    ஏற்கனவே வெளியான விவரங்களின் படி ரிலையன்ஸ் ஜியோஜிகாஃபைபர் சேவைகள் மாதம் ரூ. 600 எனும் துவக்க கட்டணத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா, தொலைகாட்சி மற்றும் லேண்ட்லைன் சேவைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் டிஜிட்டல் - கோப்புப்படம்

    ஜியோஜிகாஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் அதிகபட்சம் 1Gbps இல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது அதிகபட்ச வேகம் என்பதால், இதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், மலிவு விலை சலுகையில் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    பிராட்பேண்ட் சேவையுடன் ஜியோ ஜிகாடி.வி. சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் நேரலை தொலைகாட்சி சேனல்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இதனுடன் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 600-க்கும் அதிக டி.வி. சேனல்கள், 1000-க்கும் அதிக திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழங்கப்படலாம்.
    ×