search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.சி.எல்."

    டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த புதுவித தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #TCL



    டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் காப்புரிமை பெற்ற தனது டிராகன்ஹின்ஜ் தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இத்துடன் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தையும் அறிமுகம் செய்தது. டி.சி.எல். மடிக்கக்கூடிய மொபைல் சாதனங்களில் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேக்களை சிசாட் எனும் நிறுவனம் வழங்குகிறது.



    இந்நிறுவனம் டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவன குழுமத்தை சேர்ந்தது. சிசாட் தற்சமயம் உருவாக்கி இருக்கும் டிராகன் ஹின்ஜ் தொழில்நுட்பம் சாதனங்களை பல்வேறு விதங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப மடிக்கவும், வளைக்கவும் முடியும். இது எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் தனது முதல் டிராகன் ஹின்ஜ் கான்செப்ட் கொண்ட சாதனங்களை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய மடிக்கக்கூடிய சாதனங்களை 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய டி.சி.எல். திட்டமிட்டுள்ளது.
    டி.சி.எல். நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு QLED டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. #smarttv



    டி.சி.எல். எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு QLED டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. டி.சி.எல். 65X என அழைக்கப்படும் முதல் டி.வி. மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் மற்றும் 4K UHD டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஆன்ட்ராய்டு டி.வி.யில் 4K UHD 3840x2160 பிக்சல் மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே காட்சிகளை மிக தெளிவாகவும், இயற்கை நிறங்களை பிரதிபலிக்கும் வசதி கொண்டுள்ளது. குவான்டம் டாட் QLED தொழில்நுட்பம் நிறங்களை இயற்கையாக பிரதிபலிக்கச் செய்கிறது. 

    டி.சி.எல். புதிய டி.வி. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. டி.சி.எல். 65X4 மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், டால்பியின் மேம்படுத்தப்பட்ட டி.டி.எஸ். (DTS) போஸ்ட் பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. 64-பிட் குவாட்-கோர் சி.பி.யு. மற்றும் டூயல்-கோர் ஜி.பி.யு., 2.5 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.



    இத்துடன் வாய்ஸ் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், டி.வி.யை குரல் மூலம் எளிமையாக இயக்க முடியும். இத்துடன் பில்ட்-இன் குரோம்கேஸ்ட் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், விரும்பிய கேம்கள், வீடியோ மற்றும் மொபைல் போனில் உள்ள செயலிகளை காஸ்ட் செய்து கொள்ள முடியும்.

    டி.சி.எல். நிறுவனம் புதிய டி.வி.யுடன் டி.சி.எல். எஸ்6500 அறிமுகம் செய்துள்ளது. இதில் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மற்றும் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் IPQ இன்ஜின், ஹெச்.டி.ஆர். 10 சப்போர்ட், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்கேஸ்ட் மற்றும் வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லைட், 1.5 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    டி.சி.எல். 65X4 அக்டோபர் 25-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும், பின் இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது, எனினும் அமேசானில் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் இந்த டி.வி. ரூ.1,09,990 விலைக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ஐஃபால்கான் பிரான்டு 32 இன்ச் டி.வி. மாடலில் ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியை உலகில் முதல் முறையாக வழங்கியுள்ளது. #smarttv



    டி.சி.எல் நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. பிரான்டு ஆன ஐஃபால்கான் உலகில் முதல் முறையாக 32-இன்ச் (32F2A) ஹெச்.டி. ரெடி, கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி.யை ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.

    ஐஃபால்கான் 32F2A டி.வி.-யில் மைக்ரோ டிம்மிங் மற்றும் வைட் எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரையில் நிறங்கள் பிரகாசமாகவும், இயற்கை நிறங்களை மிகத்துல்லியமாக பிரதிபலிக்கும். ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் இன்-பில்ட் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் பொழுதுபோக்கு மற்றும் இதர விவரங்களை தேடுவது எளிமையாவதோடு வீட்டில் உள்ள மற்ற கனெக்ட்டெட் சாதனங்களை குரல் மூலம் இயக்க முடியும். புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 32-இன்ச் 32F2 மாடலை போன்றே டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ஐஃபால்கான் 40F2A மற்றும் ஐஃபால்கான் 49F2A ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அக்டோபர் 2018-இல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி 32, 40 மற்றும் 49 இன்ச் தவிர, ஐஃபால்கான் நிறுவனம் 65 மற்றும் 75 இன்ச் டி.வி. மாடல்களை பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    75 இன்ச் டி.வி. மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆடியோ அனுபம் சிறப்பாக இருக்கும் என ஐஃபால்கான் தெரிவித்துள்ளது. புதிய ஃபால்கன் 32F2A ஸ்மார்ட் டி.வி. விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரயிருக்கும் நிலையில், இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    ×