search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர்
    X
    ரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர்

    ரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்

    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் வெளியீடு மற்றும் கட்டண விவரங்களை பார்ப்போம்.



    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2018 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, நேரலை தொலைகாட்சி சேனல்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2019 ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜியோஜிகாஃபைபர் சேவை வணிக ரீதியில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. டெலிகாம் சந்தையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சந்தையில் கால்பதிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.

    ஏற்கனவே வெளியான விவரங்களின் படி ரிலையன்ஸ் ஜியோஜிகாஃபைபர் சேவைகள் மாதம் ரூ. 600 எனும் துவக்க கட்டணத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா, தொலைகாட்சி மற்றும் லேண்ட்லைன் சேவைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் டிஜிட்டல் - கோப்புப்படம்

    ஜியோஜிகாஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் அதிகபட்சம் 1Gbps இல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது அதிகபட்ச வேகம் என்பதால், இதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், மலிவு விலை சலுகையில் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    பிராட்பேண்ட் சேவையுடன் ஜியோ ஜிகாடி.வி. சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் நேரலை தொலைகாட்சி சேனல்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இதனுடன் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 600-க்கும் அதிக டி.வி. சேனல்கள், 1000-க்கும் அதிக திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழங்கப்படலாம்.
    Next Story
    ×