என் மலர்
கணினி
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,188 விலையில் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,188 மதுரம் பிரீபெயிட் வவுச்சர் என அழைக்கப்படும் புதிய சலுகை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ் நாடு வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
புதிய சலுகை ஜூலை 25 ஆம் தேதி துவங்கி 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி பெறலாம். இச்சலுகையில் பயனர்களுக்கு டேட்டா பலன்களும் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 1,399 மற்றும் ரூ. 1001 விலையில் இரு பிரீபெயிட் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்தது. எனினும், இவை ஆந்திர பிரதேசம், தெலுங்கானாவில் மட்டும் அறிவிக்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல். ரூ. 1,188 மருதம் சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் மொத்தம் 1200 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

புதிய சலுகை தற்சமயம் தமிழ் நாட்டில் மட்டும் வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், ஒரு எம்.பி. டேட்டாவுக்கு 25 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இச்சலுகை நாட்டின் மற்ற டெலிகாம் வட்டாரங்களுக்கு வழங்குவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். ரூ. 1,399 பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 50 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 270 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 1001 விலை சலுகையில் 9 ஜி.பி. டேட்டா, 270 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 270 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இரு சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. எனினும், வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது. இரு சலுகைகளும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுஙகானாவில் அக்டோபர் 22 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய மைல்கல் கடந்து தொடர்ந்து அசத்தி வருகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் வணிக ரீதியிலான சேவைகளை துவங்கி வெறும் மூன்றே ஆண்டுகளில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது.
ஜூன் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33.13 கோடியாக இருக்கிறது. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32 கோடியாக இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33.13 கோடி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது இடம்பிடித்தது.

2019-20 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32 கோடியாக குறைந்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 33.41 கோடியாக இருந்தது.
வோடபோன் ஐடியா நிறுவனங்கள் டெலிகாம் சேவை வியாபாரத்தை ஒன்றிணைத்த போது, இந்நிறுவனம் சுமார் 40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக மாறியது. எனினும், இந்நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
ஹானர் பிராண்டு தனது புதிய டி.வி.யின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் பாப்-அப் கேமரா, 55 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
2019 சர்வதேச மொபைல் இண்டர்நெட் கருத்தரங்கில் ஹானர் பிராண்டு தலைவர் சௌ மிங் ஹானர் டி.வி. ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய ஹானர் டி.வி.யில் ஹானர் பிராண்டின் இன்டெலிஜண்ட் டிஸ்ப்ளே சி்ப்செட், பாப்-அப் ஏ.ஐ. கேமரா மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
ஹானர் பிராண்டு அறிவித்த ஹானர் விஷன் சார்பில் புதிய இன்டெலிஜண்ட் டிஸ்ப்ளே சிப்செட்டான ஹாங்கு 818 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹானர் டி.வி.யில் இந்த சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஹானர் டி.வி. ஸ்டான்டர்டு வெர்ஷன் மற்றும் ஹை வெர்ஷன் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் பாப்-அப் ஏ.ஐ. கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை சீராக இயக்க ஹைசிலிகான் என்.பி.யு. சிப் வழங்கப்படுகிறது. ஹாங்கு 818 சிப்செட்டில் ஏழு இமேஜ் பிராசசிங் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர இந்த சிப்செட் 30fps வேகத்தில் 8K ரெசல்யூஷன், 120fps வேகத்தில் 4K ரெசல்யூஷன் வீடியோ டிகோடிங்கை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய சிப்செட்டுடன் ஹைசிலிகான் ஆடியோ தொழிநுட்பமும் ஒருங்கிணைக்கப்படுகிறது. புதிய ஹானர் டி.வி.க்கான முன்பதிவுகள் சீனாவில் துவங்கப்பட்டுள்ளன. சீனாவை தொடர்ந்து இந்த டி.வி. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என ஹானர் அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஹானர் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.
நோபில் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.
நோபில் ஸ்கியோடோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஹெச்.டி. ரெடி ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
24 இன்ச் அளவில் கிடைக்கும் நோபில் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதில் ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் வழங்கப்பட்டுள்ள இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் 20 வாட் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு செயலிகள், சேவைகள் மற்றும் பில்ட்-இன் கேம்களும் வழங்கப்பட்டுள்ளன.
ப்ளிப்கார்ட் தளத்தில் டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 189 விலையில் 36 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து அதிகபட்சம் ரூ.3000 வரை தள்ளுபடி பெற முடியும்.

இத்துடன் அறிமுகமான NB32R01 32-இன்ச் 1366x768 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.
இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 32 இன்ச் மாடலில் பில்ட்-இன் கேம்கள், ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நோபில் ஸ்கியோடோ நிறுவனம் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி.யை ரூ. 10,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இத்துடன் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஸ்மார்ட் டி.வி. ரூ. 16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன.
சியோமியை தொடர்ந்து ரெட்மி பிராண்டு பெயரில் புதிதாக ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆண்டு துவக்கத்தில் சியோமியின் ரெட்மி பிராண்டு தனியாக பிரிக்கப்பட்டது. சியோமியில் இருந்து பிரிந்த ரெட்மி பிராண்டு சொந்தமாக புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதுதவிர விண்டோஸ் இயங்குதளம் கொண்ட லேப்டாப்களை அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில், ரெட்மி பிராண்டு டி.வி.க்களும் இணைந்து கொள்ளும் என தெரிகிறது. ரெட்மி பிராண்டு தலைவர் வு லெய்பிங் தனது வெய்போ கணக்கில் சியோமி பிராண்டை பாராட்டும் பதிவு ஒன்றை வெளியிட்டார். சீன சந்தையில் முன்னணி டி.வி. பிராண்டாக உருவெடுத்ததற்கு சியோமியை பாராட்டிய லெய்பிங் “நாங்களும் ரெட்மி பிராண்டு டி.வி. உருவாக்க வேண்டுமா?” எனும் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

புதிய டி.வி.க்களை அறிமுகம் செய்யும் பட்சத்தில் ரெட்மி பிராண்டு மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி பிராண்டாக பிரிக்கப்பட்டதில் இருந்து ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லேப்டாப், அக்சஸரீக்கள், டி.வி. மற்றும் நுகர்வோர் மின்சாதன பிரிவில் களமிறங்குவதன் மூலம் சர்வதேச சந்தையில் ரெட்மி பிராண்டு மேலும் பிரபலமாகும் என தெரிகிறது. இந்தியா மற்றும் சீனாவின் டி.வி. சந்தையில் சியோமி ஏற்கனவே முன்னணி பிராண்டாக இருக்கிறது.
சீன சந்தையில் மட்டும் ரெட்மி தனியாக டி.வி.க்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதற்கட்டமாக உள்ளூர் சந்தைக்கான டி.வி.க்களை மட்டும் ரெட்மி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டெல் நிறுவனத்தின் 5ஜி மோடெம் பிரிவை முழுமையாக கைப்பற்ற ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் மேடெம் பிரிவை விற்பனை செய்ய இன்டெல் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் இன்டெல் ஸ்மார்ட்போன் மேடெம் பிரிவை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இரு நிறுவனங்களிடையேயான வியாபார ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரமே வெளியாகலாம் என கூறப்படுகிறது. இன்டெல் மொபைல் மேடெம் பிரிவை வாங்குவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்டெல் மொபைல் மேடெம் பிரிவின் காப்புரிமை, ஊழியர்கள் குழு என எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் 100 கோடி டாலர்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இன்டெல் தனது 5ஜி மோடெம் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாகவே மொபைல் மேடெம் பிரிவை விற்பனை செய்ய இன்டெல் முடிவு செய்தது.

முன்னதாக ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நிலவி வந்த காப்புரிமை சார்ந்த முரண்பாடுகளுக்கு சுமூக முடிவு எட்ட இருநிறுவனங்களும் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்குகளை திரும்ப பெற்றன. அதன்பின் 2018 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் மாடல்களுக்கு மோடெம் வழங்கிய ஒரே மூன்றாம் தரப்பு நிறுவனமாக இன்டெல் இருந்தது.
இதுதவிர குவால்காம் நிறுவனத்துடன் போட்டியிடும் நோக்கில் ஆப்பிள் சொந்தமாக மோடெம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. புதிய ஒப்பந்தத்தின் மூலம் 5ஜி ஐபோன் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஜெ.வி.சி. நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஹெச்.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ. 7,499 முதல் துவங்குகிறது.
ஜெ.வி.சி. நிறுனம் இந்தியாவில் கடந்த மாதம் ஆறு புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி மாடல்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்சமயம் இரண்டு புதிய ஹெச்.டி. டி.வி.க்களை ஜெ.வி.சி. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய டி.வி.க்கள் 32N380C மற்றும் 24N380C என்ற மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இவற்றில் இன்-பில்ட் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தர காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய ஹெச்.டி. டி.வி.க்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜெ.வி.சி. தெரிவித்துள்ளது.
இவை முறையே 32 இன்ச் மற்றும் 24 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் இரு டி.வி.க்களும் அளவுகளில் மட்டுமே வேறுபாடு கொண்டிருக்கிறது.
இரு டி.வி.க்களிலும் மெல்லிய பெசல்கள், ஹெச்.டி. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றன. இத்துடன் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டி.வி.க்களிலும் கேமிங் மோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பல்வேறு கேமிங் செயலிகளை பயன்படுத்த முடியும்.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு டி.வி.க்களும் ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் என ஜெ.வி.சி. தெரிவித்துள்ளது. ஜெ.வி.சி. 32N380C மாடல் விலை ரூ. 9,999 என்றும் 24N380C ஜெ.வி.சி. மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலியான டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள அம்சங்களை தழுவிய புதிய அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை ரிவர்ஸ்-என்ஜினியரிங் வல்லுநரான ஜேன் மன்ச்சுன் வொங் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இருக்கும் க்ரிட்-ஸ்டைல் லே-அவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டாக் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த செயலியில் புதிய அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிக்டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். எனினும், அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை அவர் வழங்கவில்லை.
TikTok is working on grid feed layout.
— Jane Manchun Wong (@wongmjane) July 18, 2019
It works like Instagram's Explore feed pic.twitter.com/gnhaRyiSx2
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ட்விட்டரின் வீடியோ பகிர்ந்து கொள்ளும் சேவையான வைன் பொது மேலாளர் ஜேசன் டொஃப் ஃபேஸ்புக்கின் பிராடக்ட் பிரிவு நிர்வாக இயக்குனராக பணியில் சேர்ந்தார். இவர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பிராடக்ட் ஆய்வு குழுவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இவர் பணியாற்றி வரும் திட்டங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும், திட்டத்தில் பணியாற்ற யு.எக்ஸ். வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்களை பணியமர்த்த இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பைட்டேன்ஸ் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் டிக்டாக் செயலி இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டக்கில் 28 சதவிகித இன்ஸ்டால்களை பெற்றது. தற்சமயம் உலகம் முழுக்க 70 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் 20 கோடி பேர் இந்திய பயனர்கள் ஆவர்.
இந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மே மாத இறுதி வரையிலான காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சந்தை நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அந்த வகையில் ஜியோ சேவையை பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32.3 கோடியாக இருக்கிறது.

38.76 லட்சம் வாடிக்கையாளர்களுடன் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் 24,276 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
சமீபத்திய டிராய் அறிக்கையின் படி இந்தியாவில் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 116.23 கோடியில் இருந்து 116.18 கோடியாக குறைந்திருக்கிறது. மே 31 வரையிலான காலக்கட்டத்தின் படி இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்கள் மட்டும் 89.72 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன.
அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். 10.28 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன. இதில் வோடபோன் ஐடியா 33.36 சதவிகிதம், ரிலைன்ஸ் ஜியோ 27.80 சதவிகிதம், பாரதி ஏர்டெல் 27.58 சதவிகிதம் மற்றும் பி.எஸ்.என்.எல். மற்றும் டாடா டெலி நிறுவனங்கள் முறையே 9.98 மற்றும் 0.30 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன.
வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
ஐ.ஒ.எஸ். தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை புஷ் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தே பிரீவியூ செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. ஏற்கனவே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நோட்டிஃபிகேஷன்களை பிரீவியூ செய்யும் வசதி ஏற்கனலவே வழங்கப்படுகிறது.
அந்த வரிசையில் புகைப்படம், வீடியோக்களுடன் வாய்ஸ் மெசேஜ்களும் சேர்ந்து இருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த அம்சம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பிளே பட்டன் கொண்ட வாய்ஸ் மெசேஜ் காணப்படுகிறது. இந்த அம்சம் பெரிய அப்டேட் வடிவில் மற்ற அம்சங்களுடன் சேர்த்தே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். தளத்தில் டார்க் மோட் அம்சம் செப்டம்பரில் எதிர்பார்க்கப்படும் ஐ.ஒ.எஸ். 13 அப்டேட்டில் வழங்கப்படும் என தெரிகிறது.
வாட்ஸ்அப் ஐபோன்களில் நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்து நேரடியாக ஸ்டிக்கர்களை பிரீவியூ செய்யும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது. பயனர்கள் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து ஸ்டிக்கர்களை முழுமையாக பார்த்து ரசிக்க முடியும்.
புகைப்படம் நன்றி: WABetaInfo
ஆப்பிள் நிறுவனம் சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில், புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனம் சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில், 60-க்கும் அதிகமான எமோஜிக்களை அறிமுகம் செய்தது. புதிய எமோஜிக்கள் அந்நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய எமோஜிக்கள் யுனிகோட் 12.0 சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதி இந்த ஆண்டு துவக்கத்தில் வழங்கப்பட்டது. புதிய எமோஜிக்களில் காது கேட்க செய்யும் கருவி, வீல்சேர், செயற்கை கை, செயற்கை கால் உள்ளிட்டவை பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.
உணவு, விலங்குகள், நடவடிக்கைகள் மற்றும் ஸ்மைலி ஃபேஸ் உள்ளிட்டவை புதிய எமோஜிக்களில் பிரபலமானவைகளாக இருக்கின்றன. கைகள் கோர்த்தப்படி இருக்கும் எமோஜி ஜோடிகள் மற்றும் உறவுமுறையை குறிக்கும் வகையில் இருந்தது.

இந்நிலையில், இனி சரும நிறம், பராலினம் உள்ளிட்டவை என மொத்தம் 75 விதங்களில் கிடைக்கும் எமோஜிக்களில் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த பட்டியலில் புடவை, நீச்சல் உடை, புதிய உணவு வகைகள், விலங்குகள் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 59 புதிய எமோஜிக்கள் இலவச மென்பொருள் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஐபோன், ஐபேட், மேக் மற்றும் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தங்களின் மென்பொருளை அப்டேட் செய்து இவற்றை பயன்படுத்த துவங்கலாம்.
டி.சி.எல். நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
டி.சி.எல். நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்தது. புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெசல் லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
டி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி.யில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் குறிப்பிட்ட எல்லைக்குள் பயனர்களின் குரல் கமாண்ட்களை ஏற்று இயங்கும் வசதியை கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் டி.வி.யை ஆன்-ஆஃப் செய்வது முதல், சேனல்களை மாற்றுவதற்கு குரல் வழி கமாண்ட்களை பயன்படுத்தினால் போதும்.
இதுதவிர இந்த தொழில்நுட்பம் மற்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. இதனால், அவற்றையும் மிக எளிமையாக இயக்க முடியும். ரோபோட் ஸ்வீப்பர்கள், கர்டெயின்கள், லைட்கள் மற்றும் இதர ஸ்மார்ட் சாதனங்களை குரல்வழியே இயக்கலாம்.
இதன் ஏ.ஐ. தொழில்நுட்பம் பின்னணியில் சத்தமில்லாமல் இயங்கி திரையின் பிரைட்னஸ், காண்டிராஸ்ட் மற்றும் சாட்யூரேஷன் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும். இத்துடன் சிக்னல் தரத்தை மேம்படுத்தி, ஸ்பீக்கர்களில் இருந்து தெளிவான சத்தம் சீராக வழங்க இந்த ஏ.ஐ. வழிசெய்யும்.

இது ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. ஆகும். பயனர்கள் புதிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், கேம் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே, யூடியூப் மற்றும் இதர செயலிகளில் இருந்து பயன்படுத்த முடியும். இந்த டி.வி.யில் அலெக்சா சேவையையும் பயன்படுத்தலாம்.
இத்துடன் இரோஸ் நௌ, ஜீ5, ஹாட்ஸ்டார், வூட், ஜியோ சினிமா, ஹங்காமா பிளே, ஆல்ட்பாலாஜி மற்றும் யுப் டி.வி. போன்ற சேவைகளையும் இந்த டி.வி.யில் இயக்கலாம். ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை P8E சீரிஸ் டி.வி.யில் குவாட்கோர் சி.பி.யு. மூன்று கோர் 600-800 MHz PGU, 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டியை வழங்க ஹெச்.டி.எம்.ஐ. 2.0, யு.எஸ்.பி. 2.0, வைபை 2.4 ஜி மற்றும் ப்ளூடூத் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டி.சி.எல். P8E 55 இன்ச் டி.வி. விலை ரூ. 40,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






