search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    இன்டெல் 5ஜி மோடெம் வியாபாரத்தை வாங்க ஆப்பிள் திட்டம்

    இன்டெல் நிறுவனத்தின் 5ஜி மோடெம் பிரிவை முழுமையாக கைப்பற்ற ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஸ்மார்ட்போன் மேடெம் பிரிவை விற்பனை செய்ய இன்டெல் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் இன்டெல் ஸ்மார்ட்போன் மேடெம் பிரிவை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    இரு நிறுவனங்களிடையேயான வியாபார ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரமே வெளியாகலாம் என கூறப்படுகிறது. இன்டெல் மொபைல் மேடெம் பிரிவை வாங்குவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இன்டெல் மொபைல் மேடெம் பிரிவின் காப்புரிமை, ஊழியர்கள் குழு என எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் 100 கோடி டாலர்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இன்டெல் தனது 5ஜி மோடெம் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாகவே மொபைல் மேடெம் பிரிவை விற்பனை செய்ய இன்டெல் முடிவு செய்தது.

    இன்டெல் 5ஜி மோடெம்

    முன்னதாக ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நிலவி வந்த காப்புரிமை சார்ந்த முரண்பாடுகளுக்கு சுமூக முடிவு எட்ட இருநிறுவனங்களும் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்குகளை திரும்ப பெற்றன. அதன்பின் 2018 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் மாடல்களுக்கு மோடெம் வழங்கிய ஒரே மூன்றாம் தரப்பு நிறுவனமாக இன்டெல் இருந்தது.

    இதுதவிர குவால்காம் நிறுவனத்துடன் போட்டியிடும் நோக்கில் ஆப்பிள் சொந்தமாக மோடெம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. புதிய ஒப்பந்தத்தின் மூலம் 5ஜி ஐபோன் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×