என் மலர்tooltip icon

    கணினி

    அமெரிக்க அரசு அனுமதியளிக்கும் வரை லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது லிப்ரா க்ரிப்டோகரென்சிக்கு முறையான அனுமதி வழங்கும்வரை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.

    லிப்ரா க்ரிப்டோகரென்சி வழக்கமான ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்குமாறு செயல்படாது என ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் தெரிவித்தார்.

    ஒழுங்குமுறை ஆணையங்களின் கவலைகளுக்கு பதில் அளித்து, முறையான அனுமதி பெறும் வரை லிப்ரா டிஜிட்டல் கரென்சியை ஃபேஸ்புக் வெளியிடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

    க்ரிப்டோகரென்சி - கோப்புப்படம்

    அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான நுச்சின், 'அமெரிக்க நிதி முறையை இயக்கும் முன் அவர்கள் மிகவும் கடுமையான முறைகளை பின்பற்றுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற கரென்சிக்கள் பெரும்பாலும் சட்ட விதிகளுக்கு எதிராகவே செயல்படுகின்றன,'  என அவர் தெரிவித்தார்.

    லிப்ரா திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பலதரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டி.வி. மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஒன்பிளஸ் டி.வி. பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் டி.வி. பற்றிய திட்டங்களை கடந்த ஆண்டு அறிவித்தது. இதுதவிர ஒன்பிளஸ் டி.வி. வெளியீட்டில் இந்தியா முன்னுரிமை பெறும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    டி.வி. வெளியீடு பற்றி அறிவித்திருந்த போதிலும், சரியான வெளியீட்டு தேதியை ஒன்பிளஸ் இதுவரை அறிவிக்கவில்லை. அந்த வகையில் ஒன்பிளஸ் டி.வி. ப்ளூடூத் சான்று பெற்றிருக்கிறது. ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. சான்று பெற்றிருக்கும் ஒன்பிளஸ் டி.வி. ரிமோட் கண்ட்ரோல் RC-001A எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் டி.வி. டீசர்

    இது ப்ளூடூத் 4.2 அல்லது கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது. டி.வி. பற்றிய மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் ஏ.ஐ. வசதி வழங்கப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் டி.வி. ரிமோட்டில் மைக்ரோபோன் வழங்கப்படும் என்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி இடம்பெறும் என கூறப்பட்டது.

    ரிமோட்டில் உள்ள பிரத்யேக பட்டனை க்ளிக் செய்தால் டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆக்டிவேட் ஆகும் என தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் டி.வி.யில் 4K டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் ஏ.ஐ. அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
    போல்ட் நிறுவனம் இந்தியாவில் ரூ. 399 விலையில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக இயர்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. போல்ட் ஆடியோ ஸ்டாம் என அழைக்கப்படும் புதிய இயர்போன் 3.5 எம்.எம். கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் போல்ட் ஆடியோ ஸ்டாம் இயர்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    3.5 எம்.எம். கனெக்டிவிட்டியுடன் மைக்ரோபோன் மற்றும் இன்-லைன் ரிமோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இயர்போன்களில் எக்ஸ்ட்ரா பாஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இயர்போனின் பேஸ் சார்ந்த அம்சம் சிறப்பானதாக இருக்கும். இயர்போனில் டைனமிக் டிரைவர்கள், கெவ்லர் ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கேபிள் வழங்கப்பட்டுள்ளது.

    IPX5 சான்று பெற்ற இயர்போன்கள் 13 கிராம் எடை கொண்டிருக்கிறது. இது பிளாக் கிரே, மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய இயர்போன் வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எதிர்பார்க்க முடியாது.

    போல்ட் ஆடியோ ஸ்டாம் குறைந்த விலையில் கிடைக்கும் அந்நிறுவனத்தின் ஒரே மாடலாக இருக்கிறது. இந்த இயர்போன் போட் பேஸ்ஹெட்ஸ் 100 மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதில் 3.5 எம்.எம். கனெக்டிவிட்டி, மைக்ரோபோன் மற்றும் இன்-லைன் ரிமோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் ஏ.ஐ. தின்க் டி.வி.க்களை ரூ. 24,990 விலையில் அறிமுகம் செய்துள்ளது.



    எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் ஏ.ஐ. தின்க் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.க்களில் ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியும் சில மாடல்களில் இரண்டாம் தலைமுறை ஆல்ஃபா ஜென் 2 இன்டலிஜண்ட் பிராசஸர் மற்றும் ஏ.ஐ. சார்ந்த பிக்சர், சவுண்ட், பிரைட்னஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவை 32 இன்ச் முதல் 77 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கின்றன. இதில் டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 ப்ரோ, ஹெச்.எல்.ஜி. ப்ரோ ஹெச்.டி.ஆர். மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இந்த டி.வி.-க்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    எல்.ஜி. ஏ.ஐ. தின்க் டி.வி.

    புதிய எல்.ஜி. டி.வி.க்களில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், இரோஸ் நௌ, ஜீ5, ஆல்ட்பாலாஜி, ஹங்காமா பிளே, சன் நெக்ஸ்ட் மற்றும் யுப் டி.வி. போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதன் 2-வே ப்ளூடூத் அம்சம் டி.வி. ஆடியோவை வயர்லெஸ் முரையில் ஆடியோ சாதனத்தில் கேட்க வழி செய்கிறது.

    புதிய எல்.ஜி. டி.வி. மாடல்கலின் விலை ரூ. 24,990 முதல் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. OLED டி.வி. மாடல் விலை ரூ. 2,09,990 என்றும் UHD டி.வி. விலை ரூ. 50,990 என்றும் நானோசெல் டி.வி. விலை ரூ. 82,990 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேக்புக் மாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.



    ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்திற்கான பேக்-டு-ஸ்கூல் சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்துள்ளது.

    அந்த வகையில் மேக்புக் ப்ரோ மாடல்களில் இருந்து நான்-டச் பார் நீக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேக்புக் ஏர் மாடல்களில் ட்ரூ-டோன் டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் விலை இந்தியாவில் ரூ. 99,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டும் இந்த மாடல் ரூ. 92,704 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    13 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோ பேஸ் மாடல் விலை ரூ. 1,19,900-இல் இருந்து தற்சமயம் ரூ. 1,11,264 ஆக மாற்றப்பட்டுள்ளது. பேக்-டு-ஸ்கூல் சலுகைகளில் விலை குறைப்பு மட்டுமின்றி, பீட்ஸ் ஸ்டுடியோ 3 வயர்லெஸ் ஹெட்போன்களும் வழங்கப்படுகின்றன.

    மேக்புக் ப்ரோ

    எனினும், தேர்வு செய்யப்பட்ட மேக்புக் மற்றும் ஐமேக் சாதனங்களை வாங்குவோருக்கு மட்டுமே வயர்லெஸ் ஹெட்போன்கள் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ப்ரோ பேஸ் மாடலில் டச் பார் மற்றும் டச் ஐடி போன்ற அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

    மேம்பட்ட மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களில் பட்டர்ஃபிளை-ஸ்டைல் கீபோர்டு வழங்கப்படுகிறது. மேம்பட்ட மாடல்களுக்கு மேக் ஒ.எஸ். கேட்டலினா அப்டேட் வரும் மாதங்களில் வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வசதி வழங்கப்படுகிறது.



    சியோமி நிறுவன ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சியோமியின் Mi டி.வி. 4ஏ மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின் இவற்றுக்கு மாற்றாக Mi டி.வி. 4ஏ ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், பழைய மாடல்களுக்கு சியோமி தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் Mi டி.வி. 4ஏ மாடல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. இதற்கான முன்னோட்ட திட்டத்தை சியோமி தற்சமயம் துவங்கியுள்ளது. இதற்கென 50 பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய இயங்குதளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    சியோமி Mi டி.வி. 4ஏ

    புதிய இயங்குதளத்துக்கான முன்னோட்ட திட்டம் அந்நிறுவனத்தின் கம்யூனிட்டி ஃபோரம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பயனர்கள் சியோமி Mi டி.வி. 4ஏ 32-இன்ச் அல்லது 43 இன்ச் பயன்படுத்த வேண்டும். பின் அவர்கள் ஃபோரம் போஸ்ட் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.

    முதற்கட்ட சோதனைக்கு பின் இயங்குதளத்துக்கான அப்டேட் அனைவருக்கும் வழங்கப்படும். சியோமி வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் Mi டி.வி. 4ஏ மாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய மென்பொருள் அப்டேட் மூலம் Mi டி.வி. 4ஏ மாடலில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பெறும்.

    புதிய இயங்குதளம் ஸ்மார்ட் டி.வி.யில் கூகுள் பிளே ஸ்டோர் ஆப் டவுன்லோடுகள், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், கூகுள் பிளே திரைப்படங்கள், கூகுள் பிளே மியூசிக் மற்றும் மேம்பட்ட யூடியூப் செயலிக்கான வசதி போன்ற பலன்களை பெற முடியும்.
    ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட மடிக்கக்கூடிய ஐபேட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    லண்டனை சேர்ந்த ஆய்வாளரான ஜெஃப் லின் இத்தகவலை வழங்கியிருக்கிறார். இவர் சர்வதேச அளவில் தகவல் வழங்கும் ஐ.ஹெச்.எஸ். மார்கிட் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கிறார். புதிய சாதனத்தில் மேக்புக் அளவிலான ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

    தற்போதைய ஐபேட் ப்ரோ ஏற்கனவே 12.9 இன்ச் அளவில் கிடைக்கிறது. இதனால் 13 அல்லது 15 இன்ச் அளவில் விரியும் தன்மையுடன் கூடிய ஸ்கிரீன் கொண்ட ஐபேட் மினி சாத்தியமான ஒன்றாகவே இருக்கிறது. இத்துடன் புதிய ஐபேட் மாடலில் 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மடிக்கக்கூடிய ஐபேட் ரென்டர்

    தற்சமயம் எந்த ஆப்பிள் சாதனத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படவில்லை. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தவிர பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி மீதான சோதனையை துவங்கிவிட்டன.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி சிப் 2025 ஆம் ஆண்டு அறிமுகமாகலாம் என கூறப்பட்டது.

    புகைப்படம் நன்றி: LetsGoDigital
    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்களை பார்ப்போம்.



    லெனோவோ நிறுவனம் ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2 HX06H சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் பேண்ட் மாடலில் OLED டிஸ்ப்ளே, டைனமிக் ஹார்ட் ரேட் மாணிட்டர், ஸ்லீப் மாணிட்டர், செடன்டரி ரிமைன்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்மார்ட் பேண்ட் காரியோ 2 மாடல் 23 x 23 x 7.3 செ.மீ. அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 18.1 கிராம் ஆகும். இதில் 0.87- இன்ச் OLED HD ரெடி 1366x768 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் பேண்ட் கழட்டி மாட்டக்கூடிய ஸ்டிராப், பில்ட்-இன் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது.

    நோர்டிக் 52832 பிராசஸர் கொண்டிருக்கும் கார்டியோ 2 ஸ்மார்ட் பேண்ட் 5ATM வாட்டர்ப்ரூஃப் வசதி கொண்டிருக்கிறது. 100 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கார்டியோ 2 ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேக்கப் கொடுக்கும். இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதிகளை வழங்குகிறது.

    லெனோவோ ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2

    லெனோவோ ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2 சிறப்பம்சங்கள்

    - 0.87 இன்ச் OLED HD ரெடி 1366x768 பிக்சல் டிஸ்ப்ளே
    - நோர்டிக் 52832 பிராசஸர்
    - ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இயங்கும்
    - ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
    - டைனமிக் ஹார்ட் ரேட் மாணிட்டர், செடன்டரி ரிமைண்டர், ஸ்லீப் மாணிட்டரிங்
    - ஸ்போர்ட்ஸ் மோட்
    - ழட்டி மாட்டக்கூடிய ஸ்டிராப்
    - யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி
    - 5ATM வாட்டர்ப்ரூஃப் வசதி
    - அளவு: 23 x 23 x 7.3 செ.மீ., எடை: 18.1 கிராம்
    - அதிகபட்சம் 20 நாட்கள் பேட்டரி பேக்கப்

    லெனோவோ ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2 கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.



    கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்சமயம் ஆப்பிள் ஐகிளவுட் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த பாதிப்பு ஆப்பிள் ஐகிளவுட் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. பிரச்சனை சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில், ஐகிளவுட் கேலெண்டர், காண்டாக்ட் மற்றும் ரிமைண்டர் போன்ற சேவைகள் சரியாக நீண்ட நேரம் ஆனது.

    ஆப்பிள் சேவைகளில் பாதிப்பு ஏற்பட துவங்கியதும், பயனர்கள் தங்களது பிரச்சனைகளை ட்விட்டரில் தெரிவிக்க துவங்கினர். எனினும், ஆப்பிள் சார்பில் பிரச்சனை பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    ஆப்பிள் ஐகிளவுட்

    இதுகுறித்து வெளியான தகவல்களில் அமெரிக்கா முழுக்க ஆப்பிள் சேவைகள் முடங்கியுள்ளதாக ஆப்பிள் ஸ்டோர் அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 

    மற்ற ஆப்பிள் சேவைகளான ஆப்பிள் பே, ஃபைண்ட் மை ஃபிரண்ட்ஸ் மற்றும் மற்றும் ஃபைண்ட் மை போன் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டன. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த வாரம் கூகுளின் காலெண்டர் சேவை சுமார் மூன்று மணி நேரத்திற்கு இயங்காமல் போனது. உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட இந்த சேவை பின் சரி செய்யப்பட்டது.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குகிறது.



    ஹாட்ஸ்பாட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிதாக கேஷ்பேக் வழங்குகிறது.

    இதனால் புதிய 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் ஜியோஃபை சாதனத்திற்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல் ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை எவ்வாறு பெற வேண்டும் என்பதை பார்ப்போம்.

    முன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தின் விலை ரூ. 999 குறைக்கப்பட்டது. எனினும், இதன் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை பெற பயனர்கள் முதலில் ரூ. 2000 கொடுத்து 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க வேண்டும்.

    ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சலுகை

    4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கியதும் ரூ. 399 அல்லது ரூ. 499 சலுகையில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் ரூ. 300 ஆக்டிவேஷன் கட்டணத்தை செலுத்த வேண்டும். சாதனத்தை வாங்கி ஆக்டிவேட் மற்றும் ரீசார்ஜ் செய்ததும் இரண்டில் ஒரு சலுகையை ரீசார்ஜ் செய்ததும், ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம்.

    கேஷ்பேக் தொகை போஸ்ட்பெயிட் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதனை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஏர்டெல் ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு மாதம் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டாவது சலுகையில் பயனர்களுக்கு மாதம் 75 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகை நாடு முழுக்க அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் ரூ. 399 சலுகை சில வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிதாக கியூ.ஆர். கோட் ஷார்ட்கட் அம்சம் வழங்குவதற்கான சோதனை நடைபெறுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது, காண்டாக்ட் ரேங்கிங் போன்ற அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

    இந்நிலையில், வாட்ஸ்அப்  செயலியில் கியூ.ஆர். கோட் ஸ்கேனர் வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாக இந்த ஆண்டு மே மாதத்திலும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    புதிய கியூ.ஆர். கோட் ஸ்கேனர் மூலம் பயனர்கள் அவரவர் காண்டாக்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.19.189 பதிப்பில் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப்  கியூ.ஆர். கோட் ஸ்கேனர் வசதி

    தற்சமயம் இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்படவில்லை. எதி்ர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம். இன்ஸ்டாகிராம் செயலியில் யூசர்நேம் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் கியூ.ஆர். கோட் அம்சங்களை போன்று புதிய அம்சமும் இயங்கும் என தெரிகிறது.

    புதிய அம்சம் ஷார்ட்கட் முறையில் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை க்ளிக் செய்து ஸ்கேன் மற்றும் ஷேர் செய்ய துவங்கலாம். முன்னதாக வெளியான தகவல்களில் வாட்ஸ்அப் கியூ.ஆர். கோட் உறுதி செய்யப்பட்டதும், செயலி காண்டாக்ட் விவரங்களை தானாக பதிவு செய்யத் துவங்கும் என கூறப்பட்டது.

    புகைப்படம் நன்றி: WABetaInfo
    டிக்டாக் செயலி பயனர் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்பி வருவதாக காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.



    காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் டிக்டாக் செயலி பயனர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    பயனர் விவரங்களை பாதுகாக்க முறையான டேட்டா பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், செயலிகள், சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பயனர் விவரங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் குழந்தைகளின் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக, டிக்டாக் செயலி மீது அமெரிக்க அரசு 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்தது. சீனா டெலிகாம் உதவியுடன் டிக்டாக் செயலி பயனர் விவரங்களை பரிமாற்றம் செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார். 

    டிக்டாக் சின்னம்

    தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அரசாங்கம் உடனடியாக பயனர் விவரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்தியாவில் டிக்டாக் செயலி அதிக டவுன்லோடுகளை பெற்று பிளே ஸ்டோரில் முன்னணி இடம் பிடித்தது. முன்னதாக டிக்டாக் செயலியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பின் கடும் நிபந்தணைகளுடன் செயலி மீதான தடை நீக்கப்பட்டது. தடைக்கு பின் மீண்டும் அறிமுகமான டிக்டாக் அதிக டவுன்லோடுகளை கடந்தது.

    சமீபத்தில் வெளியான விவரங்களில் பிளே ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் செயலி கடந்த ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 2019 முதல் காலாண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாக டிக்டாக் அறிவிக்கப்பட்டது.
    ×