என் மலர்
கணினி
இந்தியாவில் ஹூவாமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேஸ்ஃபிட் சீசிரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அமேஸ்ஃபிட் பிப் லைட் என அழைக்கப்படுகிறது.
இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த அமேஸ்ஃபிட் பிப் சாதனத்தின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலில் மல்டி-ஸ்போர்ட் டிராக்கிங், இதய துடிப்பு சென்சார், பில்ட்-இன் ஜி.பி.எஸ். போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.28 இன்ச் 176×176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
அமேஸ்ஃபிட் பிப் லைட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இது புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

அமேஸ்ஃபிட் பிப் லைட் அம்சங்கள்:
– 1.28 இன்ச் 176×176 பிக்சல் கலர் ஆல்வேஸ் ஆன் ரிஃப்லெக்டிவ் டச் டிஸ்ப்ளே
– 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல்களுக்கு நோட்டிஃபிகேஷன் வசதி
– மல்டி-ஸ்போர்ட் டிராக்கிங்
– ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
– ப்ளூடூத் 4.0 எல்.இ. – ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வசதி
– 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஏர் பிர்ஷர் சென்சார்
– 20 எம்.எம். ஸ்டான்டர்டு விட்த் மாற்றக்கூடிய வாட்ச் பேண்ட்
– வாட்டர், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP68)
– 190 எம்.ஏ.ஹெச். லி-பாலிமர் பேட்டரி
இந்தியாவில் புதிய அமேஸ்ஃபிட் பிப் லைட் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் அடுத்த மாதம் துவங்குகிறது.
ஹெச்.பி. நிறுவனம் இரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் கேமிங் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹெச்.பி. நிறுவனம் தனது புதிய ஓமன் எக்ஸ் 2எஸ் டூயல் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்டெல் நிறுவனத்தின் ட்வின் ரிவர் பிளாட்ஃபார்மை சார்ந்து இயங்கும் முதல் லேப்டாப் ஓமன் எக்ஸ் 2எஸ் ஆகும். புதிய ஓமன் எக்ஸ் 2 எஸ் மாடலுடன் ஹெச்.பி. நிறுவனம் ஓமன் 15 மற்றும் பெவிலியன் கேமிங் 15 லேப்டாப்களையும் அறிமுகம் செய்துள்ளது.
ஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் சிறப்பம்சங்கள்:
ஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் லேப்டாப் மெல்லிய வடிவமைப்பில் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மொத்த எடை 2.35 கிலோ ஆகும். இதில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபுல் ஹெச்.டி. அல்லது 4K பேனல்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் ஹெச்.பி. வழங்குகிறது.
இதன் இரண்டாவது டிஸ்ப்ளே கீபோர்டின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 இன்ச் அளவில் 1080 பிக்சல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ட்விட்ச், ஸ்பாடிஃபை மற்றும் டிஸ்கார்டு போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இத்துடன் ஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் மாடலின் டிஸ்ப்ளேவை கமாண்ட் சென்டர் மென்பொருளாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கேமிங் லேப்டாப்பின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் ஸ்பாடிஃபை சேவையை இயக்கும் பட்சத்தில் பெரிய டிஸ்ப்ளேவில் பயனர்கள் கேமிங் செய்யலாம்.
இந்த லேப்டாப் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், 32 ஜி.பி. ரேம், 2000 ஜி.பி. PCIe NVMe எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் RTX 2070 அல்லது RTX 2080 மற்றும் 8 ஜி.பி. வரை GDDR6 மெமரியை தேர்வு செய்யும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது.
இந்த லேப்டாப்பில் இன்டெல் வைபை 6 வசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
ஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த மெட்ஸ் நிறுவனம் இந்தியாவில் நான்கு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் இன்பினிட்டி ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மெட்ஸ் ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு வசதி வழங்கப்பட்டிருப்பதால் இவை கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கின்றன.

மெட்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள்:
- 32 இன்ச் (M32E6) ஹெச்.டி. ரெடி ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.
- 40 இன்ச் (M50E6) ஃபுல் ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.
- 50 இன்ச் (M50G2) 4K யு.ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)
- 55 இன்ச் (M55G2) 4K யு.ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)
நான்கு ஸ்மார்ட் டி.வி. மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.0 வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற சேவைகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டி.வி.க்களில் 4K தரவுகளுக்கான வசதி கூடுதலாக வழங்கப்படுகிறது.
புதிய மெட்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மெட்ஸ் 32 இன்ச், 40 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 12,999, ரூ. 20,999, ரூ. 36,999, ரூ. 42,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கும் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை மறைக்க முடியும். இதனை ஆக்டிவேட் செய்யும் போது ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மறைந்து போகும்.
மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.183 பதிப்பில் காணப்பட்டது. இந்த அம்சம் சோதனை செய்யப்பட இருக்கும் நிலையில், தற்சமயம் இது தற்சமயம் செயலிழக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக உருவாக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளதால், விரைவில் இது சோதனைக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

இதனால் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்படுத்துவோரும் இந்த அம்சத்தை சோதனை செய்ய முடியாது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிதாக வழங்கப்படும் ஹைடு (Hide) பட்டனை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க முடியும். பின் ஷோ (Show) பட்டனை க்ளிக் செய்து மியூட் செய்யப்பட்ட அப்டேட்களை மீண்டும் பார்க்கலாம்.
புதிய அம்சம் வழங்குவது பற்றி வாட்ஸ்அப் தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வீடியோக்களை சாட் விண்டோவை விட்டு வெளியேறாமல் பார்க்க வழி செய்கிறது.
புகைப்படம் நன்றி: WABetaInfo
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகமானது. புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனம் ஸ்போர்ட் வடிவமைப்பில், மெல்லியதாகவும், எடை குறைவாக இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
மேம்பட்ட ஃபிட்னஸ் மற்றும் வெல்பீயிங் அம்சங்களுடன் கேலக்ஸி பாரம்பரியத்தில் புதிய வாட்ச் உருவாக்கப்பட்டிருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. பயனர்கள் இரத்த அழுத்தத்தை டிராக் செய்ய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தில் மை பி.பி. லேப் (My BP Lab) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
இரத்த அழுத்தம் தவிர பயனர்களின் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதியும் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் உடல்நலன் சார்ந்த விவரங்களை அடிக்கடி தெரிந்து கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சிறப்பம்சங்கள்:
- 1.1 இன்ச் 360x360 AMOLED ஃபுல் கலர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- எக்சைனோஸ் 9110 டூயல்-கோர் 1.15 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
- 768 எம்.பி. ரேம்
- 4 ஜி.பி. மெமரி
- டைசன் சார்ந்த வியரபில் ஒ.எஸ். 4.0
- ஆண்ட்ராய்டு 5.0 அல்லது 1.5 ஜி.பி. மற்றும் அதிக ரேம் கொண்ட சாதனங்களுடன் பயன்படுத்தலாம்
- ஐபோன் 5 அல்லது ஐ.ஒ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளளம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தலாம்
- இன்டோர் / அவுட்-டோர் ஆக்டிவிட்டி டிராக்கிங்
- அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், பாரோமீட்டர், இதய துடிப்பு சென்சார், ஆம்பியன்ட் லைட்
- 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G ராணுவத்தரச் சான்று
- ப்ளூடூத் 4.2, வைபை, NFC, ஏ-ஜி.பி.எஸ். / குளோனஸ்
- 230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சில்வர், பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சீ கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்கள், சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் சாம்சங் ஒபேரா ஹவுஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கும். அமேசான் வலைதளத்தில் ஜூன் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
சோனி நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.
சோனி இந்தியா நிறுவனத்தின் இரண்டு வயர்லெஸ் நெக்பேண்ட் ரக இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல்கள் சோனி WI-C310 மற்றும் WI-C200 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கின்றன. இரண்டு இயர்போன்களும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கின்றன.
புதிய இயர்போன்களில் பிளாஸ்டிக் நெக்பேண்டிற்கு மாற்றாக இரண்டு இயர்பட்களை இணைக்க வெறும் வையர் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இயர்போன்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என சோனி தெரிவித்துள்ளது.
சோனி WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்கள் வெறும் 15 கிராம் எடை கொண்டிருக்கிறது. நெக்பேண்ட் இல்லாததால் இரு ஹெட்போன்களின் எடையும் மிக குறைவாக இருக்கிறது. இதனால் இசையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் கேட்டு ரசிக்கலாம். இரு இயர்போன்களும் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வசதியும் குவிக் சார்ஜ் வசதியும் கொண்டிருக்கிறது.

பேட்டரி குறையும் போது இயர்போன்களை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். இரண்டு இயர்போன்களிலும் சோனி யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கியிருக்கிறது. இதனால் சார்ஜிங் செய்வது மிக எளிமையாக இருக்கிறது. சோனியின் WI-C310 மற்றும் WI-C200 என இரண்டு இயர்போன்களிலும் 9 எம்.எம். டிரைவர் யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த இயர்பட்கள் காந்த சக்தி பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் இயர்பட்கள் பயன்படுத்தாத நிலையில் தானாக இணைந்து கொள்கிறது. இவை இயர்பட்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டு இயர்போன்களிலும் மூன்று பட்டன்களுடன் இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் மத்தியில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவைகளை இயக்கலாம். இந்தியாவில் சோனி WI-C310 இயர்போனின் விலை ரூ.2,990 என்றும் WI-C200 இயர்போனின் விலை ரூ.2,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் அதிக பிரபல கேமாக இருக்கும் பப்ஜியின் லைட் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
உலகம் முழுக்க பிரபலமான கேமாக பப்ஜி இருக்கிறது. இந்த கேமின் லைட் வெர்ஷனான பப்ஜி லைட் மிகக்குறைந்த திறன் கொண்ட சாதனங்களிலும் சீராக இயங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பப்ஜி லைட் கேம் கடந்த ஆண்டு வாக்கில் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த கேமினை விளையாடும் வசதி பிரத்யேகமாக வழங்கப்பட்டது.
தென்கிழக்கு நாடுகளில் அறிமுகமனது முதல் பப்ஜி லைட் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பப்ஜி லைட் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. பப்ஜி லைட் வெர்ஷன் முன்பதிவு இந்தியா உள்பட அனைத்து சார்க் நாடுகளிலும் துவங்கப்பட்டுள்ளது.
இம்முறை பப்ஜி லைட் எடிஷன் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபால் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது.

முன்பதிவு செய்வது எப்படி?
பப்ஜி லைட் வெர்ஷனுக்கான முன்பதிவு 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் பப்ஜி லைட் (https://lite.pubg.com/) வலைதளம் சென்று தங்களுக்கான அக்கவுண்ட்டை இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பப்ஜி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் லாக் இன் செய்தாலே போதும்.
பயனர்கள் இந்த தளத்தில் லாக் இன் செய்ததும், நிகழ்வில் கலந்து கொள்ள கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த வலைதளம் பயனர்களை அவரவர் அக்கவுண்ட்டினை ஸ்டீம், எக்ஸ்-பாக்ஸ் மற்றும் பி.எஸ்.4 போன்ற கேமிங் கன்சோல்களுக்கான அக்கவுண்ட்களில் லின்க் செய்யக் கோரும்.
இந்தியாவில் பப்ஜி லைட் பீட்டா கேமில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 3 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்வோருக்கு பல்வேறு இன்-கேம் பரிசுகள் வழங்கப்படுகிறது. அனைத்து பயனர்களுக்கும் டைகர் எம்6 மற்றும் சீட்டா பாராஷூட் வழங்கப்படுகிறது.

அதன்பின் முன்பதிவு எண்ணிக்கை 100,000-ஐ கடந்ததும் பப்ஜி பிளாக் ஸ்கார்ஃப், பன்க் கிளாசஸ், பிளடி காம்பேட் பேண்ட் உள்ளிட்டவற்றை வழங்கும். இதேபோன்று 200,000 முன்பதிவுகளை கடந்ததும் பயனர்களுக்கு கோல்டு பப்ஜி ஸ்கார்ஃப், ஸ்டிரைப்டு லாங்-ஸ்லீவ் ஷர்ட், ரெட் ஸ்போர்ட்ஸ் டாப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்த பரிசுகளுக்கான குறியீடு பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்ஜி லைட் வெர்ஷன் கேமினை பயனர்கள் உடனடியாக டவுன்லோடு செய்து விளையாட முடியாது. பப்ஜி குழு பீட்டா பதிப்பிற்கான முன்பதிவுகளை மட்டுமே துவங்கி இருக்கிறது. பின் இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு டவுன்லோடு லிண்க் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அனைத்து ஹூவய் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தொடர்ந்து வழங்கப்படும். எங்களது பிரபல பி30 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ பெற முடியும் என ஹூவாய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

புதிய அறிவிப்பு ஹூவாய் பி30 ப்ரோ, ஹூவாய் பி30, மேட் 20 ப்ரோ, மேட் 20, மேட் 20 எக்ஸ் மற்றும் மேட் 20 எக்ஸ் (5ஜி) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோருக்கு ஆறுதலாக இருக்கும். தற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ டெவலப்பர் புரோகிராம் மேட் 20 ப்ரோ சாதனங்களில் கிடைக்கிறது.
கடந்த மாதம் கூகுள் நிறுவனம் ஹூவாயுடனான அனைத்து வியாபாரங்களையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் ஆண்டராய்டு இயங்குதளத்தை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. தற்சமயம் இந்த தடை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல் விலை ரூ.16,999 முதல் துவங்குகிறது. இந்த விலையில் 40 இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி.யில் கிட்டத்தட்ட 500-க்கும் அதிக செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட் டி.வி. டிஸ்ப்ளே 1920x1080 பிக்சல் ரெசல்யூஷனில் 16 மில்லியன் நிறங்களுடன் வருகிறது. இத்துடன் இதில் 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் மிராகாஸ்ட் வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் மற்றும் இஷேர் ஆப் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய டி.வி.யில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சென்சி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது டி.வி. கைடு செயலியை உருவாக்குகிறது. இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்களும், இரண்டு யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட்களும், இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஈத்தர்நெட் போர்ட், வைபை கனெக்டிவிட்டி, பவர் சேவிங் மோட், ஸ்மார்ட் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு பிர்தேயக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. நோபிள் ஸ்கியோடோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக மையங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
முன்னதாக நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் 39-இன்ச் ஸ்மார்ட் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி.யை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் டி.வி. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த டி.வி. 4K UHD தரவுகளை சப்போர்ட் செய்யும் என இந்நிறுவனம் தெரிவித்தது. இத்துடன் குவாட் கோர் சி.பி.யு., 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரென்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரென்சி 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும் சமூக வலைதள பயன்பாடுகள் மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
ஜெனீவாவிவ் லிப்ரா கூட்டமைப்பை உருவாக்கி இருக்கும் ஃபேஸ்புக், தனது கூட்டமைப்பில் இதுவரை 28 கூட்டாளிகளை இணைத்திருக்கிறது. இந்த கூட்டமைப்பு புதிய டிஜிட்டல் காயின் சேவையை நிர்வகிக்கும் என தெரிகிறது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகெரன்சி டிஜிட்டல் காயின் 2020 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய க்ரிப்டோகரென்சி தவிர புதிதாக கலிப்ரா என்ற பெயரில் டிஜிட்டல் வாலெட் போன்று இயங்கும் சேவையை ஃபேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. கலிப்ரா ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சியை சேமித்து வைத்துக் கொண்டு, அவற்றை அனுப்பவோ அல்லது பயன்படுத்தவோ வழி செய்யும். கலிப்ரா ஃபேஸ்புக்கின் மெசஞ்சர், வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் சேவைகளுடன் இணைக்கப்பட இருக்கிறது.

ஃபேஸ்புக் புதிய சேவையினை வங்கி கணக்கு வைத்திருக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்காதவர்களும் நிதி சேவைகளை பயன்படுத்த முதல் முறையாக வழி செய்ய இருக்கிறது.
லிப்ரா பரிமாற்றங்களுக்கான கட்டணம், மற்ற சேவைகளை விட குறைவாகவே இருக்கும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான கட்டண விவரங்களை வழங்கவில்லை. ஊழல்களில் சிக்கி பணத்தை இழப்போருக்கு அவரவர் இழக்கும் தொகையை திரும்பி வழங்குவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
மேலும் லிப்ரா திட்டம் அதன் துவக்கக்கட்டத்தில் தான் இருக்கிறது என பேபால் மூத்த தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீ சிவானந்தா தெரிவித்தார். நிதி நிறுவனங்களுடன் இத்திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஒருவேளை இத்திட்டத்திற்கு அதிகளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்சத்தில் இது வெளியாகாமலும் போகலாம் என அவர் தெரிவித்தார்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களின் மின்னஞ்சல் விவரங்களை கசியவிட்டதாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களில் ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) எனும் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியில் பயனர்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை சர்வதேச அளவில் வால்பேப்பர்களாக வெளியிடுவதை ஒன்பிளஸ் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஒன்பிளஸ் சர்வெர் மற்றும் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலிக்கு இடையேயான லின்க் ஒன்றின் மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியானது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை பயன்படுத்தியவர்களின் மின்னஞ்சல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த பிழையை மே மாத துவக்கத்தில் ஒன்பிளஸ் தெரியப்படுத்திவிட்டு இதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டது. ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை பயனர்கள் வால்பேப்பர்ஸ் மெனு சென்று இயக்கலாம். இதனை இயக்க பயனர்கள் தஙகளின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அவரவர் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.

புகைப்படங்கள் தேர்வு செய்த பின், ஒன்பிளஸ் அவற்றை ஏ.பி.ஐ. மூலம் பொதுவெளியில் வெளியிடும். தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பயன்படுத்தும் ஏ.பி.ஐ. கொண்டு மற்றவர்களும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த ஏ.பி.ஐ. open.oneplus.net எனும் இணைய முகவரியில் வெளியிடப்பட்டது.
இந்த பிழை எப்போது முதல் இருந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த பிழை, சேவை துவங்கப்பட்டது முதலே இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் எப்போதும் பயனர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். மேலும் எங்களுக்கு வரும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மிக கவனமாக ஆய்வு செய்வோம் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏ.பி.ஐ.-களில் சத்தமில்லாமல் சில மாற்றங்களையும் ஒன்பிளஸ் மேற்கொண்டு இருக்கிறது.
இந்த மாற்றங்களையும் எளிதில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. புதிய பிழை கண்டறியப்பட்டதன் மூலம் பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இது அந்நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
இந்தியாவில் சான்யோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
சான்யோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. சான்யோவின் நெபுளா சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி. அளவுகளில் கிடைக்கின்றன.
சான்யோவின் புதிய நெபுளா சீரிஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், ஆண்ட்ராய்டு மிரரிங், ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே போன்று ல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாஸ்ட் காஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களது மொபைலில் இருக்கும் தரவுகளையும் டி.வி.யில் பார்த்து ரசிக்கலாம்.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்படுகின்றன. 32 இன்ச் டி.வி.யில் 1366×768 பிக்சல் கொண்ட ஹெச்.டி. பேனல் வழங்கப்பட்டுள்ளது. 43 இன்ச் டி.வி.யில் 1920×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
புதிய சான்யோ ஸ்மார்ட் டி.வி.க்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்தியாவில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. விலை ரூ.12,999 என்றும் 43 இன்ச் டி.வி. விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சான்யோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் சியோமி, தாம்சன் மற்றும் ஜெ.வி.சி. உள்ளிட்ட பிராண்டுகளுக்கு போட்டியாக அமையும். சமீபத்தில் ஜெ.வி.சி. இந்தியாவில் ஆறு புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ.11,999 முதல் துவங்குகிறது.






