search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்
    X

    பல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்

    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

     

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகமானது. புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனம் ஸ்போர்ட் வடிவமைப்பில், மெல்லியதாகவும், எடை குறைவாக இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    மேம்பட்ட ஃபிட்னஸ் மற்றும் வெல்பீயிங் அம்சங்களுடன் கேலக்ஸி பாரம்பரியத்தில் புதிய வாட்ச் உருவாக்கப்பட்டிருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. பயனர்கள் இரத்த அழுத்தத்தை டிராக் செய்ய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தில் மை பி.பி. லேப் (My BP Lab) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

    இரத்த அழுத்தம் தவிர பயனர்களின் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதியும் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் உடல்நலன் சார்ந்த விவரங்களை அடிக்கடி தெரிந்து கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.



    சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சிறப்பம்சங்கள்:

    - 1.1 இன்ச் 360x360 AMOLED ஃபுல் கலர் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - எக்சைனோஸ் 9110 டூயல்-கோர் 1.15 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
    - 768 எம்.பி. ரேம்
    - 4 ஜி.பி. மெமரி
    - டைசன் சார்ந்த வியரபில் ஒ.எஸ். 4.0
    - ஆண்ட்ராய்டு 5.0 அல்லது 1.5 ஜி.பி. மற்றும் அதிக ரேம் கொண்ட சாதனங்களுடன் பயன்படுத்தலாம்
    - ஐபோன் 5 அல்லது ஐ.ஒ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளளம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தலாம்
    - இன்டோர் / அவுட்-டோர் ஆக்டிவிட்டி டிராக்கிங்
    - அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், பாரோமீட்டர், இதய துடிப்பு சென்சார், ஆம்பியன்ட் லைட்
    - 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G ராணுவத்தரச் சான்று
    - ப்ளூடூத் 4.2, வைபை, NFC, ஏ-ஜி.பி.எஸ். / குளோனஸ்
    - 230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சில்வர், பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சீ கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்கள், சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் சாம்சங் ஒபேரா ஹவுஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கும். அமேசான் வலைதளத்தில் ஜூன் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. 
    Next Story
    ×